(Reading time: 20 - 39 minutes)

ப்படியெல்லாம் சொல்லாதிங்க.. நம்ம இருக்கோம்ங்க அவள பார்த்துக்க, ஒன்னும் ஆகாது... நம்ம பொண்ணுங்க அவ... எதையும் நினைச்சு நீங்க குழம்பாதீங்க அவள் கண்டிப்பா திரும்பி வந்திடுவாள்...” என்று கண்கள் கலங்கிய வண்ணம் கூறினார். ஒருவழியாக பேசிவிட்டு வைத்தாலும் மனம் முழுதும் நாட்களை எண்ணிக்கொண்டு இருந்தது அருணாவிற்கு, கீர்த்தி துளைந்து போய் 4 தினங்கள் ஆகி இருந்தது. மனம் திரையில் கண்டதையெல்லாம் உருவகபடுத்தி மேலும் பயந்துப் போனது. பாதுகாப்பான அறைவனைப்பில் இருந்து வெளியே போய் விட்டாளே, இந்த கேவலமான உலகத்தில் இருக்கும் சில நல்ல உள்ளங்கள் அவளை பத்திரமாக எனக்கு மீட்டு தரவேண்டுமே... என்ற எண்ண அலைகளின் நடுவே எப்போது கண்கள் தானாக மூடியது என்று தெரியாமல் எழுந்தார் அருணா. இந்த ஊரில் யாரையுமே தெரியாமல் எங்கே சென்று தேட முடியும் என்று புரியவில்லை அவருக்கு. இருந்தாலும் விடாபிடியாக ஒரு ஆட்டோவில் ஊரை சுற்றினர் மகளும் அன்னையும். மாலை அவர்களை சந்திக்க வந்த மீராவின் தந்தை, “என்ன மன்னிச்சிருங்க உங்க கூட சேர்ந்து தேடுற அளவுக்கு உதவி செய்ய முடியலை. ஆனால் பெரிய இடத்தில் எல்லாம் சொல்லி வச்சிருக்கேன் கவலை படாதீங்க... கண்டிப்பா கீர்த்திக்கு எதுவும் ஆகாது” என்று ஆறுதல் கூறினார்.

“பரவாலங்க... பொண்ணோட கல்யாணத்துக்கு நடுவுல இவ்வளவு பெரிய உதவி செஞ்சதே பெரியவிஷயம்... ஆனால் எனக்கே இப்ப அவள் கிடைப்பாளோ இல்லையோன்னு சந்தேகம் வந்திருச்சு” என்று கூறி வருந்தினார்.

“அப்படியெல்லாம் நினைக்காதீங்க... நான் சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... இன்னும் எத்தனை நாளைக்கு இங்கேயே நீங்க இருக்க முடியும். நம்ம கம்ப்ளைன் பண்ணிருக்கோம் நான் எனக்கு தெரிஞ்சவங்க மூலமாவும் தேட சொல்லிருக்கேன், நீங்க இங்க இருந்தாலும் பெருசா தெரியாத ஊருல ஒன்னும் பண்ண முடியாதே. பேசாமல் நீங்க சென்னைக்கே போங்க கண்டிப்பா எதாவது ஒரு நல்ல செய்தி வரும்” என்று கூறி அவரை சமாதனம் செய்தார்.

சுற்றி இருந்தவர்களும் அதையே கூற, மனமே இன்றி வேறு வழியில்லாமல் நம்பிக்கையோடு சென்னைக்கு திரும்பினார் அருணாவும் மித்ராவும்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

த்தனை பேர் அழுது புரண்டு தேடிக்கொண்டிருக்கும் கீர்த்தி நிஜமாகவே வாழ்க்கை சக்கரத்தில் ஒரு ஆட்டம் கண்டுதான் இருந்தாள். கடைசியாக மயக்க மருத்தின் வீரிக்கத்தில் மயங்கியவள் தான் பின்பு தான் எழும் போதெல்லாம் மேடும் பள்ளங்களையும் கடந்து எங்கோ சென்றுக்கொண்டிருப்பது போலவே இருந்தது. அவள் அடிக்கடி முழிக்கின்றாளா அல்லது அவ்வளவு தூரத்திற்கு அவளை அழைத்து செல்கின்றனரா என்று யோசிக்கும் அளவிற்கு கூட கீர்த்தியின் மூளை செல்லவில்லை. ஆனால் பயணத்தில் உடல் குலுங்குவது மட்டும் தெரிந்தது முழிக்கும் போதெல்லாம். வாயை திறந்து பேச நினைக்கலாம் என்றால் மீள முடியாத மயக்கத்தில் வார்த்தைகள் குழறியது. என்ன வகை மயக்கமருந்து என்று அவளுக்கு புரியவில்லை. இறுதியாக அவள் முழித்தபோது அதிசயமாக பயணம் செய்யவில்லை, ஒரு நிலை மேலாக சுற்றுபுறத்தை உணர முடிந்தது, கண்கள் தான் இருக்கும் அறையை சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தது ஆனால் எழ முடியவில்லை. அடித்துப்போட்டார் போல வழித்தது. ஏதோ ஊசி குத்தும் உணர்ச்சியோடு மீண்டும் மயங்கிப் போனாள்.

அவள் உணர்ந்தது உண்மைதான், அவளை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவன் இன்னொருவனை தேடி சென்றான். அவள் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிய அந்த குடிகாரன் தான் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான். மற்றவன் வருவதை கண்டுக்கொண்டு, மீசையை முருக்கிவாறே “என்னடா முழிச்சாளா???”

“ம்ம்ம்ம்... இப்போதான்... நீங்க பாட்டுக்கு போதையை இன்னைக்கு காலையில இருந்து குடுக்க வேணாம்ன்னு சொல்லிட்டீங்க இப்போ முழிச்சதும் எந்திருச்சு ஒக்கார பார்த்தாள், அதான் திரும்பி ஊசி போட்டுட்டே...”

“அட என்னடா நீ... தெளியவச்சு அடிக்குறது தெரியாதா... எப்படி எல்லாம் பிகு பண்ணா... என்னையவே அரஞ்சுட்டா...” என்று ரோஷமாக கூறினான் அந்த மொரடன்.

அந்த அறையில் அவனிடம் பேசிக்கொண்டிருந்தவனோ.. “என்னது உங்களையே அரஞ்சுட்டாளா... அப்போ ஒரு வழி பண்ணிருப்பீங்களே... என்ன முடிச்சுட்டிங்க போல???” என்று ஒரு நக்கலான சிரிப்போடு கேட்டான்.

அதற்கும் தன் மீசையை முறுக்கியவாறே ஆனந்தமாய் “ம்ம்ம்ம்...” என்று பதில் அளித்தான் குடிகாரன்.

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1082}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.