(Reading time: 30 - 60 minutes)

 04. அடையாளம்!!! - ப்ரீத்தி

Adaiyalam

பிரிண்ட்ஸ்... இந்த கதை படிக்கும் போது உங்க மனசுல ஒரு பாதிப்பு ஏற்படுறது புரிது... ஆனால் இந்த கதையே அப்படி ஒரு பெண்ணோட வாழ்க்கை எதிர்பாராத விதமா மாறினால்... என்பது மாதிரி தானே... சோ... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. கண்டிப்பா உங்களுக்கு பிடுச்ச மாதிரியே போக போக கதையை கொண்டு போயிடலாம்...

இந்த ஒரு எபிசோடு மட்டும் கடந்திடுங்க... இனிமே... இவ்வளவு கடுமையா இருக்காமல் பார்த்துக்குறேன்... சோகத்தை காட்டினால் தானே சுகத்தையும் காட்ட முடியும்... கண்டிப்பா கதையை படிச்சிட்டு கருத்தை பதிவு பண்ணுங்க...  

லைவன் கூறியது போல தெளியவைத்து அடிக்க நினைத்தானோ என்னவோ அதன் பின் மற்றவன் அவளுக்கு மயக்க மருந்து தரவில்லை. சில மணி நேரங்கள் சென்று உடல் வலிக்க கண்களை மெல்ல திறந்தவளுக்கு உலகத்தின் வெளிச்சம் கண்ணைக் கூசியது. எங்கே இருக்கிறோம் என்ன தன்னை சுற்றி நடக்கிறது என்று புரியாமல் மூளை யோசிக்க முயற்சித்து தோற்றது ஆனால் காலையில் பார்த்த உருவம் மட்டும் நினைவிற்கு வந்தது. யார் அவன் அருகில் வந்தானே ஏதோ ஊசி குத்துவதுப் போல... “அயோ... எங்க இருக்கோம்” என்று நிமிடங்களில் பழையநினைவுகள் வர உடலில் இருந்த சிரத்தை எல்லாம் உபயோகம் செய்து எழுந்தாள்.

இருந்த நிலைமை மனதை பயமுடுத்த அவசரமாக அங்கே இருந்து தப்பி செல்ல வலி தேடினாள், பாவம்... தான் எவ்வளவு தூரம் தள்ளி வந்திருக்கிறோம் என்று அறியாமல். கதவு தாள் அசைவது கேட்டு உடலில் தானாக நடுக்கமும் பயமும் வந்து குடிக்கொண்டது. “கடவுளே..” என்று மனம் பித்துபிடிக்க கண்களில் வழியும் கண்ணீரின் வழியே அந்த குடிகாரனை கண்டாள்.

“அட.. பரவால்லையே... இத்தனை நாள் நாங்க குடுத்த போதை மருந்துக்கு உன்னால எழவே முடியாதுன்னு நினைச்சேன்னே கண்ணு.. பரவால்ல போ... நல்ல வெடக்கோழியா தான் வந்து மாட்டிருக்க..” என்று ஒரு மார்கமாக பார்த்தான். உடல் முழுதும் கூசி அதிர்வலை தோன்றி துவண்டுப் போனாள். அழுத கண்கள் தானாக தரையை நோக்கி குனிய, அவன் அருகே வந்தான், அவள் எதுவும் பண்ண முடியாமல் தரையோடு அமர, அவள் அருகே வந்தவன். “பயபுடாத கண்ணு... இன்னைக்கு உனக்கு லீவு...” என்று கன்னங்களை தடவியவன் “வேற ஒரு வெடக்கோழியை கொண்டுவந்திருக்கானுங்க...என்னனு போயி மாமே பார்த்திட்டு வந்திடுறேன்” என்று விட்டு சென்றான்.

அவன் சென்றபிறகும் செய்வதறியாது தவித்தது மூளை யோசிக்க முடிந்தால் அல்லவா தப்பிபதற்கு. ஏனோ எதுவும் தோன்றவில்லை, அழிந்தது வாழ்வு.. இனி ஒன்றும் நடந்து வாழ்க்கை பழையபடி மாற போவதில்லை... எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாள் என்று அவளறியாள். இனிமேல் வாழ்ந்து என்ன பயன் என்றது மூளை சில மணி நேரம், இது வெறும் கனவு தானோ என்று ஆசைப்பட்டது மனம் சில கணம், அம்மா தங்கையை பார்க்கவேண்டும் என்றது இதயம் சில மணி நேரம்... தோன்றிய நிமிடம் எழுந்து அறையை சுற்றி சுற்றி வந்தாள் தப்பிக்க வழிதேடி... ஓரமாய் குப்பைகளுக்கு நடுவே சன்னல் இருப்பது தெரிந்தது.. தட்டு தடுமாறி குப்பைகளை தள்ளிவிட்டு சன்னலை அணுகினாள் பாவம் ஏமாற்றம் தான் மிச்சம் அது மற்றொரு அறையின் மறுபுறத்தை காட்டியது. அதுவும் அந்த கொடியவனின் முகத்தை. நெருப்பை அள்ளி எரிந்தது போன்ற ஒரு உணர்ச்சியில் சட்டென சாத்திவிட்டாள் கதவை.

“ச்சே... என்ன வாழ்க்கை இது.. இவ்வளவு தானா... இதற்காகவா பாதுப்பாக வளர்க்கப்பட்டேன். இதெல்லாம் பார்பதற்காகவா பிறந்தேன். அப்படியேன் கடவுள் படைக்கவேண்டும்... ஹ்ம்ம் கடவுளாம் கடவுள்.. எங்க இருக்கான் அந்த ஆள்.. இருந்தால் இதுகூட நடக்குமா... எல்லாம் பொய், சைத்தான்கள் தான் இருக்கிறது அதுவும் வேறு உலகில் இல்லை இங்கேயே இந்த உலகில் வாழ்வது எல்லாம் சைத்தான் தான்”. இடைவேளை இல்லாமல் வந்த கண்ணீர் இதை தவிர எதையும் யோசிக்கவில்லை. திடுமென எழுந்தவள் “எதுக்கு வாழனும் ம்ம்ம் ஹ்ம்ம் வேண்டாம் இந்த சைத்தானுக்கு நடுவில என்னால வாழ முடியாது.. வேண்டாம் வாழ வேண்டாம்.. வேண்டாம்..” என்று பிதற்றிக்கொண்டு கூரீய ஆயுதத்தை தேடி சுற்றினாள்.

எங்கு சுற்றினாலும் நின்ற இடத்திலேயே வந்து நின்றாள் அந்த சின்ன அறையில். மீண்டும் அவளை என்ன செய்ய காத்திருக்கிறானோ என்னவோ, கூரீய ஆயுதம் என்று எதர்ச்சியாக கூட எதுவும் இல்லை அந்த அறையில். துவங்கிய இடத்திலேயே மீண்டும் துவண்டு விழுந்தாள்.

சாவதற்கு கூட உரிமை இல்லாமல் போயிற்றே என்று நொந்துக்கொண்டு இருந்தாள். எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளோ, அருகில் யாரோ வருவது உணர்ந்து தலையை உயர்த்தி பார்த்தாள்.

“என்ன கண்ணு... எதுக்கு சத்தே இல்லாத உடம்ப வச்சுக்கிட்டு அழுகுர...” என்று குரலில் குழைந்தான்.

அவள் அருவருப்போடு முகத்தை திருப்பிக்கொண்டாள், அதை கண்டவன் பலமாக சிரித்துவிட்டு “ஏய்.. என்ன இன்னமும் பத்தினி வேஷமெல்லாம்... இதெல்லாம் இனிமே உனக்கு ஒத்தே வராது புரியுதா... இதெல்லாம் நீ அன்னைக்கு என்னை காரி துப்புனியே அப்போவே யோசிச்சுருக்கணும்... உன்ன வச்சு இன்னும் நிறைய யோசனை வச்சிருக்கேன்” என்றான் மர்மயோசனையோடு சிரித்தான்.

ஒருபுறம் இன்னும் என்னவெல்லாம் பார்க்க நேரிட போகிறதோ என்ற பயமும்... ஆமாம் இனிமேல் என்ன நடந்தால் என்ன என்ற வெறுப்பும் கலந்து தன் மீதே வெறுப்பாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.