(Reading time: 30 - 60 minutes)

தன்பின் அந்த அறையின் பக்கம் அவன் வரவில்லை, வரவில்லை என்று சந்தோஷபடுவதா இல்லை இன்னும் என்ன யோசனை வைத்திருகிறானோ என்று பயபடுவதா என்று யோசித்து மேலும் பயந்தாள். எதிர்பார்த்ததுப் போல பிரச்சனை வந்தது.. எவனோ வந்தான்.. அவள் மிரண்டு விழிக்க இழித்தவாறே “ஏய் எழுந்திரி அண்ணே.. உன்னைய கூட்டிட்டு வர சொன்னாரு..” என்றான்... எவன் அவன்.. என்று யோசிக்க தேவையில்லை.. எல்லாம் அந்த மொரடன் தானே.. என்று நினைத்துக்கொண்டு அங்கேயே நின்றாள். அவள் அசையாமல் இருப்பதை பார்த்துவிட்டு “என்ன உனக்கு அண்ணனே வந்து சொன்னாதான் கேப்பியோ.. வரியா இல்ல வர சொல்லனுமா..” என்று கொஞ்சம் மிரட்டும் தோணியில் கேட்கவும் உடலில் தன்னை அறியாமல் அதிர்வு தோன்ற கால்கள் தானாக நடந்தன.

சில வினாடிகள் தான் அவசர அவசரமாக எல்லாம் நடந்தது.. “இவனுங்களுக்கு வேற வேலையே இல்லடா.. நம்மளோட போட்டி போட்டுகிட்டே இருக்கானுங்க... நம்ம அவனுங்க தொழிலுல போட்டுக்குடுக்குறதே இல்லை... சின்னபுள்ள தனமாவே நடந்துக்குரானுங்க...” என்று எங்கோ அவனது குரல் கேட்டது அவளுக்கு. பிடித்து தள்ளாத குறையாக அவளோடு சேர்ந்து சில பெண்களும் ஒரு வண்டியில் ஏற்றப்பட்டனர்.

போகும் வழியெல்லாம் எழுந்து குதித்து விடலாமா என்றெல்லாம் ஒவ்வொரு மனதிலும் தோன்றியது போலும் ஒவ்வொருவரும் ஒருமுறை மற்றவர் முகத்தை அந்த மஞ்சள் ஒளியில்  பார்த்துக்கொண்டு மீண்டும் சத்தமில்லாத அழுகையை துவங்கினர். போகும் வழியெல்லாம் முள் பாதையும் குறுக்கு வழியாகவும் இருந்தது. ஏதோ நாய்கள் பிடித்து செல்லும் வண்டி போல அனைத்து பக்கமும் அடைத்து இருந்தது.

ஒருவழியாக முடியாமல் போன பயணம் ஒரு இடத்தில் முடிந்தது. அனைவரும் இறங்கிய பின்பு தான் தெரிந்தது அது சிகப்பு விளக்கு பகுதி என்று. அனைவரின் கால்களும் கட்டிபோட்டது போல அங்கேயே நின்றது சிலர் அங்கேயே வாய்விட்டு அழுது கெஞ்சி கூத்தாடினார். ஆனால் மதிக்கத்தான் எவரும் இல்லை, கீர்த்தி சிலையாகிப் போனாள், எதுவும் புரியவில்லை தனது வாழ்க்கையில் அடுத்த அடி இவ்வளவு பலமானதாக இருக்கும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை உறைந்து போய் இருந்தவளை வீட்டின் உள்ளே தள்ளி செல்ல முயற்சித்தனர். அழுத பெண்களையெல்லாம் இழுத்து சென்ற காட்சி எதுவும் அவள் மனதில் பதியவே இல்லை. மூளை அவசர அவசரமாக யோசித்தது “இது நடக்க கூடாது இது கூடவே கூடாது... என்ன செய்வது என்ன செய்வது... ம்ம்ம்ஹம்ம் முடியாது” என்று மனம் உளற கண்கள் சுழண்டது. எங்கோ ஒரு விறகு கட்டைப் போல வெளியே கிடக்க சில விநாடி தளர்ந்த பிடியில் ஓடி சென்று அந்த கட்டையை கொண்டு அடிக்க முன்வந்தாள்.

முன்னால் வந்த இரு தடியன்கள் தடுக்க முயற்சிக்க பின்னால் வந்தவர்கள் எல்லாம் சிரித்துக்கொண்டனர். “டேய் இது நம்ம மொதல ஒன்னு கூட்டிகிட்டு வந்தோம்ல அது என்ன பேரு ஹா... கவிதா அது மாதிரி போல டா.. அவளும் இப்படி தானே சிரிப்பு காமிச்சா...”

“ஏய்.. இங்க இருந்து 1௦ மையில் தூரத்துக்கு ஒருத்தனும் இருக்க மாட்டான், இப்படி பட்ட எடத்துக்கு கூட்டிகிட்டு வந்திருக்கோம் எப்படி தப்பிக்க நினைக்கிறியோ தெரியலை போ..” என்று லாவகமாக கட்டையின் இடுக்கில் நுழைந்து அவள் கையை மடக்கி கட்டையை தூக்கி எறிந்தனர். அவளையும் உள்ளே இழுத்து சென்றவர்கள் அங்கே இருந்த ஒரு பெண்மணியிடம் “அக்கா.. இவள் நம்ம கவிதா இருக்கால அவளை மாதிரி போல கட்டையை வச்சு காமெடி பண்றா” என்று கூறி சிரித்தனர். அவளும் பெரிய காமெடி சொன்னது போல சிரித்துவிட்டு “அப்போ அவக்கூடையே போடுவோம் எப்படி அவள் ரெண்டே நாளுல நம்ம வழிக்கு வந்தாள்ன்னு அவளே சொல்லட்டும்” என்று கூறி இழுத்து சென்றனர்.

பெண்கள் எங்கோ கூடி பேசி சிரிப்பது போல கேட்டது, அங்கே கொண்டு சென்று விட்டுவிட்டு “கவிதா இதோ உன்ன மாதிரி இருக்கா ரொம்ப பிரெஷ் பீசு... பாத்துக்கோ” என்று கூறிவிட்டு வந்தான். அவள் நிமிர்ந்து கூட பார்க்க தைரியம் இல்லாமல் அவன் தொட்டு அழைத்துவந்த இடம் கன்னி இருக்க அதை தடவிக்கொண்டே ஓரம் ஒதுங்கினாள்.

“ஏய் எங்க நகுரற... எங்கயும் ஓட முடியாது இங்க வந்துட்டால் அவ்வளவு தான்” என்று கூறி சிரித்துக்கொண்டனர்.

“ஹே சும்மா இருங்கடி..” என்று ஒருவள் முன்னே அவள் அருகில் வந்து ஒற்றை விரலால் அவள் முகத்தை உயர்த்தி, “என்ன பேரு...” என்று கேட்கவும் அப்போதுதான் அவளது முகத்தை பார்த்தாள் கீர்த்தி. மெய்யான அழகி தான். எவ்வளவு அழகு.. இவள் ஏன் இங்கே வந்தாள் ஏன் இப்படி பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாள் என்று மனம் யோசித்தது. “என்ன யோசிக்குற?? யாரும் இங்க இஷ்டப்பட்டு எல்லாம் வரலை, அதே போல நீ இஷ்ட பட்டாலும் இனிமே வெளியே போக முடியாது” என்று சிரித்தவள். “சரி நீ பேச மாட்ட போல, மொத ஒன்னு ரெண்டு நாலு இப்படிதான் இருக்கும் நானெல்லாம் அப்படி தான் இருந்தேன் என் பேரு கவிதா.. இவள் செலின், இவள் தேவி... இவள்...” என்று அறிமுகம் செய்துவைத்தப்படியே கீர்த்தி போல புதிதாக வரும் பெண்களுக்கு வீட்டு அறைகளில் இருந்து தனிப்பட்டு இருக்கும் அறை இருக்கும், அங்கு அழைத்து சென்றாள்... “இங்கே யாருக்கும் உண்மையான பேரே கெடையாது என்னை தவிர, எனக்கு ஆரம்பிச்சதே இங்க தான் அதுனால என்னோட பேர அப்படியே விட்டுட்டானுங்க.. இதுங்க எல்லாம் நிறைய இடத்துக்கு போயிட்டு வந்துட்டாளுங்க அதான்...” என்று மிகவும் சாதாரணமாக கூறினாள்.   

தப்பிக்க முடியாது என்று தோன்றிவிட்டதோ என்னவோ அல்ல பேச்சுவாக்கிலோ அவளும் அங்கே வந்திருந்தாள். “இந்த சினிமாவுல வர மாதிரி எப்படியாவது தப்பிச்சிடலாம்னு நினைக்காத, நானெல்லாம் அப்படி தப்பிக்க முயற்சி பண்ணி இதோ பார்த்தியா” என்று அவளது அடிபாதத்தை காட்டினாள். பார்த்த மாத்திரத்தில் உள்ளே குளிரிட்டு உறைந்துப் போன உணர்ச்சியில் கண்கள் விரித்தாள் கீர்த்தி. “இப்படி தான் சூடு வைப்பானுங்க... அதுவும் வேற வேற இடத்துல போட மாட்டானுங்க.. பட்ட காலிலே படும்னு சொல்லுற மாதிரி அதே இடத்துல போடுவானுங்க... ஹ்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம் அதுக்கு அப்பறம் இது தான் வாழ்க்கைன்னு ஏத்துக்க ஆரம்பிச்சுட்டன்னா பழகிடும்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.