(Reading time: 30 - 60 minutes)

ப்பா அம்மாவை திரும்பி பார்க்க போறோம்ன்னு சந்தோஷமாக இருக்க சரிதான் ஆனால் என்னை மறந்திடாதடா..” என்று அவள் மனநிலையை மாற்ற விமலா கிண்டல் செய்யவும். “உங்களை என்னால மறக்கவே முடியாது ஆன்ட்டி” என்று சொல்லி தழுவிக்கொண்டாள் கீர்த்தி. எத்தகைய நிலையில் இருந்து அவளை பாதுகாப்பாக கொண்டுவந்திருக்கீறார் என்று மனம் மீண்டும் மீண்டும் நன்றி சொன்னது.

நெடுநாட்கள் கழித்து பார்க்க போகிற உணர்வோ என்னவோ ஆவலும், பிள்ளையின் துயர் துடைக்கவேண்டுமே என்ற கவலையும் சேர்ந்து சொல்ல முடியாத நிலையை தந்தது அவர்களுக்கு. மூவரும் மாறி மாறி வாசர்புறமே பார்த்துக்கொண்டிருந்தனர் அவள் வருகையை நோக்கி.

“அருணா நான் வேணும்னா வண்டி எடுத்துட்டு போய் கூட்டிட்டு வரவா...” அவரின் ஆர்வம் புரிந்தாலும் சிரித்தவண்ணமே பதில் தந்தாள் சிறியவள். “அப்பா.. அவங்க ரெண்டு பெரும் இங்க தான் வர போறாங்க... நீங்க வேற தனியா அலைய வேண்டாம்.. உட்காருங்க...” என்னதான் மனம் வீம்பு செய்தாலும் மகளின் பேச்சில் உண்மை இருந்ததால் அமர்ந்துவிட்டார். அன்னையோ கீர்த்திக்கு பிடித்த உணவுகளாக தயார் செய்துக்கொண்டிருந்தார். சிறியவள் சுத்தம் செய்தாள் எல்லாம் வழி மீது விழி வைத்தபடியே தான். 

வாசலை அடைந்ததும் அமர்ந்திருந்த தந்தையை கண்டததும் தொண்டையை அடைத்துக்கொண்டு அழுகை வந்தது “அப்பா...”

“கீர்த்திமா..” என்று கண்கலங்க அருகே வந்தவர் அனைத்து அழதுவங்கிவிட்டார், நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்ட மகளை தன் கரத்தினுள் வைத்துக்கொண்டார். பின்னோடு தங்கையும் அம்மாவும் வந்துவிட ஒருவர் மாற்றி ஒருவர் மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்றுவந்தனர். தாயும் மகளை அரவணைத்து ஆசைதீர முத்தம் தந்தார். சிறிதுநேர உணர்வுபூர உரையாடலுக்கு பிறகே அங்கு விரேனை உணர்ந்தனர்.

“மன்னிச்சிருப்பா... வா உட்காரு.. என்ன சாப்புடுற??” என்று குரலில் நன்றி கலந்து மனதில் மட்டும் இல்லாது உடல் பொருள் ஆவிக்கொண்டு வந்தது.

“ஒன்னும் வேண்டா அங்கிள்... கீர்த்திகாவை விட்டு போகத்தான் வந்தேன்.. நான் இன்னொரு நாள் வரேன்” என்று கிளம்ப எத்தனித்தான் ஆனால் யாரும் விடுவதாக இல்லை.

“அதெப்படி அம்மா சமையல்ல இருந்து நீங்க தப்பிக்க முடியும், இன்னைக்கு நீங்க தான் பலி” என்று சிறியவள் கிண்டல் செய்வது போல அவனை சீண்டி பேசினாள். அனைவரும் சிரித்து மகிழ்ச்சியாக நேரத்தை கடத்த, என்னதான் அன்னை தந்தையை பார்த்துவிட்டாலும் ஏன் ஏதோ இழந்ததுப் போல இருக்கிறாள் என்று அவளின் முகம் வைத்து யோசித்தான். மற்றவர்கள் எல்லாம் அதற்கு பயண களைப்பு என்று பெயர் வைத்தனர் ஆனால் அந்த பயணத்தின் போதும் ஒதுக்கம் தந்து வந்தாளே அதுவும் அவனின் கண்ணில் படாமல் இல்லை. அன்று பார்த்த பெண் பொறுமையானவள் என்றாலும் ரோஷம் அதிகமாகவே இருந்ததே.. என்ன ஒரு படபடப்பான பேச்சு... தெரியாதவர் என்றாலும் ஒரு இளநகை இருந்ததே முகத்தில்... இப்போது எங்கே... இப்படியே அனைவருடன் பேசியபடியே யோசித்துக்கொண்டிருந்தான். நேரம் வேகமாக கடந்துவிட அவனும் கிளம்ப எத்தனித்தான்.

“சரி அங்கிள் போய்டு வரேன்.. வரேன் ஆன்டி, வரே” என்று பொதுவாக அனைவருக்கும் கூறினான். கீர்த்தி அவனை வழியனுப்பிவிட்டு வர சென்றாள், அவள் முகத்தை கிளம்பும் பொழுது பார்த்தவன்.

“மொபைல் இருக்கா...”

“ம்ம்ம்... ம்ம்ம்ம் இருக்கே... ஏன்?”

அவளிடம் எண்ணை வாங்கிக்கொண்டு “நான் ஒரு கால் குடுக்குறேன், சேவ் பண்ணிக்கோ... எதாவது பிரச்சனைனா கூப்பிடு” என்றுவிட்டு யோசனையோடு கிளம்பினான்.

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1082}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.