(Reading time: 30 - 60 minutes)

வளது பேச்சும் நடவடிக்கையும் புரியாத புதிராகவே இருந்தது அவனுக்கு. ஒருவேளை யாரேனும் அவளை... என்று யோசித்தவன் “ச்சே ச்சே... அவ்வளவு கொடூரமாக யோசிக்க கூடாது” என்று யோசித்தவன் “எப்பப்பா ஊரில் யாராவது அப்படி சொன்னாலே உடல் நடுங்கும் அதுவும் நமக்கு தெரிந்த பெண்ணை அந்த இடத்தில் வைத்து யோசிப்பது கூட மனம் துணியாத செயல்”.

அடுத்து நடந்தவை எல்லாம் இனிப்பா கசப்பா என்று புரியாத தருணங்கள்... காலையில் அவளது வீட்டுக்கு அழைப்பு கொடுத்துவிட அடுத்து நடக்கவிருப்பதும் பேசி முடித்தனர்.

மித்ரா எங்கம்மா...”

மகள் தன் கண்முன்னால் கிளம்பி சென்றது கூட மனதில் பதியாத நிலைமையில் இருக்கிறாரே என்று மனம் வேதனை கொண்டதை வெளியில் காட்டாமல் “காலேஜ்க்கு போயிருக்காங்க...”

“ம்ம்ம்...” அவருக்கு உணவை பரிமாற அவர் அதையும் கொஞ்சமாக எண்ணி எண்ணி கொறிப்பதை தேற்ற முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தார் அருணா.

“இன்னும் ஒன்னு...”

“வேணாம்மா...”

“என்னங்க.. திண்டுக்கல்லுக்கு போன் பண்ணிங்களா??? எதாவது சொன்னாங்களா...”

“எங்கம்மா எதுவும் செய்தி வந்தபாடில்லை... நம்பிக்கை போய்கிட்டே இருக்கு.. என் பொண்ணு என்ன தவியா தவிக்குறாளோ...” என்று கண்கள் கசிந்தார். தனக்கு வந்த அழுகையையும் கட்டுபடுத்திக்கொண்டு “கடவுள் கண்டிப்பா கைவிட மாட்டாருங்க... நீங்க வேணும்னா பாருங்க ஒரு நல்ல செய்தி வரும்..” என்று தேற்ற முயற்சித்தார்.

“ஹ்ம்ம்.. இத்தனை நாள் கண்ணை மூடிகிட்டு இருந்த உன் கடவுள் இப்போ மட்டும் எப்படி உதவுவார் போடி.. போ...” என்றுவிட்டு வெளியே கிளம்ப போனார். அருள் வந்து 1 வாரம் கழிந்திருந்தது. எப்படியோ வானிலை மாற்றங்களை எல்லாம் தாண்டி வீடு வந்து சேர்வதற்குள் உயிர் தன்னிடம் இல்லை அவருக்கு. பெண் காணமல் போய் 3 வாரம் ஆகி இருந்தது. வெளியில் கேட்போருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாமல் திணறினர். சிலர் அவர்கள் கூறியது நம்பினர், சிலரோ எட்டுகட்டி பேசினார்கள் எங்கோ ஓடிப்போயிருப்பாள் நம்ம கிட்ட சொல்ல சங்கட பட்டுகிட்டு இப்படி சொல்றாங்க... என்றெல்லாம் பேச்சை கேட்க வேண்டியதாக இருந்தது. எப்படியோ மரம் போல மனதை மாற்றி இதையெல்லாம் காதில் போடாமல் இருந்தனர், கோவத்தில் சில நேரம் வெகுண்டு பேசத்தோன்றும் ஆனால் அவரவருக்கு வரும் பொழுது தான் கஷ்டம் புரியும் என்று நினைத்துக்கொள்வர் இருவரும்.

ஏதேதோ நினைப்பில் அவர் கிளம்ப, அவர் கைபேசி மணியடித்தது... நம்பிக்கை இல்லாமல் தெரியாத எண்ணில் இருந்து வரவும் யோசித்தபடியே எடுத்தார்.

“ஹெலோ...”

“அப்பா...”

“கீர்த்திம்மா கீர்த்தி.. எங்கடாம்மா இருக்க?? எப்படிடா இருக்க?? அருணா... பாரு கீர்த்தி போன் பண்ணிட்டா.. இங்க வா...” என்று கத்தவும் அவர் உள்ளே இருந்து வெளி அறைக்கு பதட்டம் கலந்த ஆனந்தத்தோடு ஓடிவந்தார்.  “அயோ... என்னடா ஆச்சு உனக்கு” என்று மகளின் குரலை கேட்டதும் அழுக துவங்கிவிட்டார் அருள்.

அப்பாவின் குரலில் இருந்த சோகம் தாங்க முடியாமல் கீர்த்தியும் அழுக துவங்கிவிட கைபேசியை கீழே வைத்துவிட்டு தேம்பி அழுக துவங்கிவிட்டாள். அருகில் இருந்த இருவர்க்குமே எப்படி தேற்றுவது என்று புரியவில்லை.. மேசையில் இருந்த அலைபேசியை எடுத்து பேச துவங்கினார் விமலா.

“சார்... நான் கோயம்பத்தூர்ல இருந்து பேசுறேன் என் பேரு விமலா... உங்க பொண்ணு என்னோட வீட்டுல தான் இருக்காள்.”

“நன்றிம்மா.. ரொம்ப நன்றிம்மா... எப்படிம்மா அவளை பார்த்திங்க.. அவள் நல்லா இருக்காளா... என்னாச்சும்மா என் பொண்ணுக்கு நான் வந்து கூட்டிட்டு போகவா எங்களுக்கு அவளை இப்பவே பார்க்கணுமே..” என்று பதட்டமாக பேசினார் அருள்.

பெத்த மனம் பித்து என்று சும்மாவாக கூறினர் என்று நினைத்துக்கொண்டு “வேண்டா சார்.. என்னோட பையன் அங்க தான் வேலை செய்யுறான் இன்னைக்கு அவனே சென்னைக்கு கிளம்பி வருவான் இப்போ கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவாங்க நீங்க பயப்பட தேவையில்ல... பத்திரமா வந்துடுவாங்க...” என்று அவர் பதில் கூறவும் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும் இறுதியில் சரி என்று ஒப்புக்கொண்டனர்.

மகள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்ன நிலைமையில் இருக்கின்றாளோ என்ற பயத்தில் தினமும் நடைப்பிணமாக வாழ்ந்த அருணா அருள் இருவருக்கும் காலையில் வந்த தொலைபேசி அழைப்பு தெம்பை தந்தது. சிறியவள் வீட்டில் இருந்தாள் அக்காளை நினைத்து அழுதுக்கொண்டே இருக்கிறாள் என்று தேற்றி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். சிரியவளுக்கும் இந்த செய்தி இனிப்பாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.