(Reading time: 30 - 60 minutes)

சேகரித்து வைத்திருந்த சக்தியில் கொஞ்ச தூரம் வந்தாயிற்று... ஆனால் வந்த பின்பு தான் இன்னமும் மனம் உதைத்து உடம்பெல்லாம் கூசியது, ஏனோ அனைவரும் தன்னை பார்ப்பது போன்ற உணர்வு... மறைந்து மறைந்து இருட்டில் இவ்வளவு நாள் கடத்திவிட்டு இப்போது மீண்டும் இந்த உலகை சந்திக்கவேண்டும் என்றதும் பதட்டப்பட துவங்கியது மனம். தெருவின் ஓரமாக யாரும் பார்துவிடுவாரோ என்றெல்லாம் யோசித்து யோசித்து தலையை நிமிர்ததாமலே நடந்தாள். எங்கு போகிறோம் கையில் பணமில்லை எங்கு இருக்கிறோம் எப்படி வீட்டுக்கு போவது என்றெல்லாம் குழம்பியது மனம்.

சுற்றுப்புற சூழலை பார்த்தால் இது அவளது ஊர் போலவும் இல்லை, வந்து சேர்ந்த திண்டுக்கல் போலவும் இல்லை எந்த ஊர் இது... என்று மனம் குழம்பியது. ஒவ்வொரு கடையின் பலகையை பார்த்துக்கொண்டு வந்தாள். அது கோயம்பத்தூர் என்றது, பார்த்தமாத்திரத்தில் அதிர்ந்தவள் இங்கு இருந்து எப்படி வீட்டிற்கு செல்வது கையில் பணம் இல்லை, இப்போது வந்தது போல ஏறி செல்ல வேண்டும் என்றால் அந்த வண்டி ஓட்டுபவனுக்கு தெரிந்திருக்க வேண்டும் ஆனால் மனம் தான் யாரையும் நம்பவில்லையே... மனம் போன போக்கில் நடந்துக்கொண்டே இருந்தாள். இருட்ட துவங்கிவிட்டது, காவலர் நிலையத்துக்கு போகலாம் என்றால் அங்கு செல்லவும் பயமாக இருந்தது. என்னவென்று சொல்வது ஒரு சிகப்பு விளக்கு இடத்தில் இருந்து தப்பித்தேன் என்றா என்று மனம் கலங்கியது.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பேருந்து நிலையம் இருந்தது, நடந்து வந்த வழியெல்லாம் முக்காடை போட்டுக்கொண்டு வந்துவிட அதுவே மற்றவர் அவளை திரும்பி பார்க்க செய்தது அது அறியாதவள் வேறு விதமாக யோசித்து குறுகிப் போனாள். பேருந்து நிறுத்தத்தை கடக்கும் போது நான்கு பேர் ஏதோ மொழியில் அவளை கிண்டல் செய்ய புரியாவிட்டாலும் சைகைகள் புரிந்துவிட இன்னும் ஒதுங்கி சென்றாள். ஓட்டத்தின் நடுவில் சேலை தலைப்பு தலையில் இருந்து சரிந்துவிட பதட்டத்தோடு இன்னும் வெளிச்சம் இருக்கும் இடமாக பார்த்து சென்றாள். வேக வேகமாக வந்து ஒரு கடையின் முன் நின்றாள் சுற்றும் முற்றும் பார்த்தவள், கடைகளில் இருக்கும் தொலைபேசி மூலம் அன்னையை அழித்துவிடலாம் அவ்வளவு தான் இப்போது இருக்கும் பிரச்சனை முழுதும் பறந்துவிடும் அன்னையிடம் சென்றுவிடலாம் என்றெல்லாம் மனதை தேற்றிக்கொண்டாள்.

அவள் முன்னே சென்று பேச தயங்கி தயங்கி போக... “கீர்த்தி” என்று யாரோ அழைத்தனர் அதுவும் ஒரு ஆணின் குரல் உள்ளூர மீண்டும் ஒரு சில்லிட்ட உணர்வோடு அப்படியே நின்றாள் திரும்பி பார்க்க பயந்து. அடுத்த அழைப்பு தனக்கு பின்னாலேயே கேட்டது... “கீர்த்தி... இங்க என்ன பண்ற?? ஏன் இப்படி இருக்க என்று...” ஆனால் இந்த குரல் பரிவாக இருந்தது கீர்த்திக்கு அவளை யாரும் தொடர்ந்து வந்திருப்பார்களோ என்ற அச்சத்தை சிறிதுப்போக்கியது.

பொறுமையாக திரும்பி பார்த்தவளுக்கு ஆச்சர்யம் தான் அங்கு நின்று கொண்டு இருந்தது விரேன் தான். ஒருநிமிடம் பயம் தயக்கம் கலக்கம் எல்லாம் கலந்த உணர்வு கண்ட மாத்திரத்தில் கண்ணில் இருந்து நீர் சொட்டியது. இவளின் உணர்வும் மனநிலையும் புரியாமல் அவன் விழிக்க அவள் சிறிது பொருத்து கண்ணீரை துடைத்துக்கொண்டு தொண்டையை செருமிக்கொண்டாள். அவன் திரும்பி பார்க்க அவளை கிண்டல் செய்து பின்னால் வந்தவர்கள் இப்போது அவளோடு இன்னொரு ஆண் இருப்பதை பார்த்துவிட்டு நழுவத்தொடங்கினர். “என்ன நியாபகம் இருக்கு தானே...” என்று அவன் கேட்கவும் அவள் மௌனமாக தலையை அசைத்தாள். “சரி இங்க நின்னு பேசுறது சரியில்ல... பக்கத்தில தான் என்னோட வீடு அங்க போய் பேசிக்கலாம் வா..” என்றான்.

சுர்ரென்று இருந்தது அவளுக்கு என்ன தெரியும் இவனுக்கு என்னை எத்தனை நாளாக தெரியும். இவன் அழைத்தாள் உடனே நான் வந்துவிடுவேன் என்று நினைத்தானோ என்று மனதில் பொருமினாள். அவளது முகம் மாற்றத்தை பார்த்தவன் பின்புலம் எதுவும் புரியாததால் எதார்த்தமான தயக்கம் என்று நினைத்து... “ஹே நான் என்ன பண்ண போறேன் என்னை பார்த்தால் அவ்வளவு பயமாவா இருக்கு” என்று மெல்லிய முறுவலோடு கிண்டல் செய்தான். பொருத்தமில்லாத நகைச்சுவை அவளை இன்னும் குத்தியது வாய்திறந்து திட்ட வந்தவள் அருகே ஒரு குரல் கேட்டு நிறுத்தினாள்.

“இதுதான் உன்னோட ப்ரிண்டாபா” என்று வயதில் கொஞ்சம் மூத்தவள் வந்து நின்றார். அவள் அவரை பார்க்கவும் விரேன் அறிமுகம் செய்தான். “இது என்னோட அம்மா.. இங்கதான் எங்களோட வீடு... மீதியை போய் வீட்டுல பேசலாமே...” என்றான். அவனிடம் இருந்த நம்பிக்கையோ இல்லை அந்த அம்மாவின் பரிவான பார்வையோ தயக்கம் தெரிவிக்க முடியவில்லை அவர்களோடு சென்றாள். போகும் வழியெல்லாம் எதுவும் பேசாமல் இருந்தாள் பெரியவள் விசாரிக்கும் கேள்விக்கு மட்டும் பதில் கூறினாள், ஆனால் இது விரேனுக்கு அன்று பார்த்த முகத்தை காட்டிலும் வேறுபட்டு இருந்தது. எல்லாவற்றிற்கும் பதில் கூறியவள் விரேனின் அன்னை என்ன காரணமாக இங்கே வந்தாள் என்று விசாரித்ததற்கு மட்டும் பதில் இல்லாமல் மௌனமாய் இருப்பதை குறிக்க மறக்கவில்லை ஏதோ நடந்திருக்க வேண்டும் என்று நினைத்தனர் இருவரும். ஆனால் இருவரும் யூகித்தது ஒரு காதல் கதையின் சோக முடிவை, எவனையேனும் நம்பி வீட்டை விட்டு வந்திருக்க வேண்டும் அதான் தயங்குகிறாள் போல என்று நினைத்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.