(Reading time: 20 - 39 minutes)

சில நொடிகளில் நடந்தவை எல்லாம் கண்முன் ஓட என்ன செய்வது என்றே புரியாமல் அதிர்ந்து இருந்த இருவரும் அவள் பெயரை சொல்லி கத்திக்கொண்டே பின்னோடு செல்ல பார்த்தனர் ஆனால் வாகனத்தின் வேகம் மேலும் அதிகபடுத்தி சென்றுவிட்டது. பைத்தியம் பிடித்ததுப் போல இருந்தது மதுவுக்கும் அனுவுக்கும் சுற்றி முற்றி பார்த்துத்தனர் உதவிக்கு யாரேனும் கிடைக்க மாட்டார்களா என்று... படபடவென இருதயம் அடித்துக்கொள்ள கைகள் தானாக நடுங்க துவங்கிவிட்டது அடுத்து என்ன செய்யவேண்டும் என்றும் புரியவில்லை கண்களில் இருந்து தாரை தாரையாய் கொட்டும் நீரும் அடுத்து செய்ய வேண்டியதை யோசிக்கும் மூளையை தடுத்தது.

ஒரு சில நிமிடங்களில் அடுத்து அடுத்து அடுத்து என்று மனம் பதைக்க, விரல்கள் நடுங்குவதொடு மீராவின் தந்தைக்கு அழைத்தாள். முதல் சில அழைப்புகள் எடுக்கப்படவில்லை. யார் மீது குற்றம் சொல்ல முடியும் திருமண நிகழ்ச்சியில் இருப்பவர்கள் எப்படி அழைப்பை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது... “ஐயோ... எடுக்கலையே அனு... என்ன பண்றது... என்ன பண்ணனும்... என்ன பண்ணுவே” என்று பதட்டத்தில் சொன்னதையே சொன்னாள் மது... மீண்டும் மீண்டும் அவள் அழைப்பு வர மீராவின் தந்தை எடுத்தார்.

“ஹலோ... ஹலோ... ஹலோ அங்கிள்...”

“என்னம்மா... ஏன்ம்மா பதட்டமா பேசுற என்னாச்சு...” என்று முதல் பேச்சிலேயே அவளது குரலில் இருந்த பதட்டம் அவருக்கு ஒட்டியது.

“அங்கிள்.. இங்க.. கீர்த்தி... கீர்த்திய யாரோ கடத்திட்டு போயிட்டாங்க அங்கிள்.. எங்களுக்கு என்ன பண்றதுனே தெரியலை அங்கிள்...” என்று பேசியவாறே அழுதுக்கொண்டே தெருவிலேயே அமர்ந்துவிட்டாள். மதுவிற்கு இருக்கும் துணிச்சல் கூட அனுவுக்கு இல்லாமல் போக நடுக்கத்தில் சுத்தி நடப்பவை எதுவும் புரியாமல் மதுவை பிடித்தவண்ணம் அமர்ந்து அழ துவங்கிவிட்டாள்.

“என்னது... என்னம்மா சொல்ற... இப்போ தானே தம்பி ட்ரோப் பண்ணிட்டு வந்தான்... எங்க இருக்கீங்க... இருங்க நான் கிளம்பி வரேன்” என்று பதட்டத்தின் உச்சிக்கே போய்விட்டார் தோழியின் தந்தை.

காரில் கடத்தபட்டவளின் நிலையோ இதைவிட மோசம்... ஏறிய மறுவினாடியே மயக்கமருந்து ஊற்றிய கைகுட்டையால் அவளை மயக்கத்தில் ஆழ்த்தினர். “டேய் அந்த ஒத்த அடி பாதையிலேயே போயி ஊருக்கு வெளியே போயிடு... ரொம்ப இருட்டுரதுக்குள்ள போயிடு... எப்படியும் இன்னைக்கு பந்த்ன்னு எந்த பிரச்னையும் வந்திர கூடாதுன்னு எல்லா போலீஸ்காரனும் ஊருக்குள்ள தான் இருப்பானுங்க... நீ வேகமா போ... இல்லாட்டி நைட் எதாவது செக்கப்ன்னு ரயில்வே போஸ்ட்கிட்ட நிறுத்திட போறானுங்க...” என்று கண்களில் வெறியோடு கடுமையாக கூறினான் அந்த குடிகாரன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

சிறிது நேரத்திலேயே போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்றுவிட்டனர் மீராவின் தந்தை, இரு தோழிகள், மற்றும் சிலர். என்ன செய்வதென்றே புரியாத அழுகை மட்டும் வந்துக்கொண்டே இருந்தது தோழிகள் இருவருக்கும்.

“அழுகாதம்மா... என்ன நடந்துச்சு அதை முதல்ல சொல்லுங்க...”

மது தான் அறிந்தவை அனைத்தையும் தட்டு தடுமாறி சொல்லி முடித்தாள், ஆனால் அவள் கூறியதை ஒரு சந்தேகத்தோடே கேட்டுக்கொண்டிருந்தார் காவலாளர்.

“எதுவும் மறைக்காமல் நல்லா யோசிச்சு சொல்லுங்கம்மா... உங்களுக்கும் அந்த பொருக்கிங்களுக்கும் வேற அறிமுகமே இல்லையா...”

“சார் அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க.. இவங்க எல்லாரும் என்னோட பொண்ணு கல்யாணத்துக்காக சென்னைல இருந்து வந்திருக்காங்க... இந்த ஊரே இவங்களுக்கு புதுசு...”

“ம்ம்ம்ம்...” என்று தலையாட்டி பொறுமையாய் கேட்கும் காவலரையும், தங்களுக்குகாக வக்காலத்து வாங்கும் தோழியின் தந்தையையும் பார்த்துக்கொண்டிருந்தாள் அனு. அவளுக்கு மட்டுமே முழுமையான உண்மை தெரிந்து இருந்தது.. ஆனால் சொல்ல தான் பயமாக இருந்தது. சொல்லாமல் இருந்தால் தோழியின் நிலைமை...?? என்று யோசித்தவள் பொறுமையாக “சார்...” என்றாள்.

அவளின் குரலுக்கு அனைவரும் திரும்பி அவளை பார்த்தனர். “எங்களுக்கு அந்த ஆளை முன்னாடியே தெரியும் சார்...” என்று துவங்கி முன்தினம் நடந்த அருவருப்பு, கீர்த்தி அவன் முகத்தில் உமிழ்ந்துவிட்டு வந்தது என்று அனைத்தையும் கூறினாள். இவள் கூற கூற மதுவின் கண்கள் வியப்பில் பெரிதாகியது.

“என்ன காரியம் பண்ணிருக்கீங்க அனு..” என்று கோவத்தில் அனுவை அடித்தவள் முகத்தை மூடிக்கொண்டு அழதுவங்கிவிட்டாள். எப்படியோ மீண்டும் அடுத்து என்ன என்று யோசிக்க துவங்கிய பின் சம்பவம் நடந்த இடம், அவர்களிடம் இவர்கள் கண்ட அடையாளங்கள் என்று சின்ன சின்ன குறிப்பும் கேட்டரியபட்டது. வயதிற்கு மீறிய அதிர்ச்சியை இவர்கள் சந்திக்க, விழாவில் பங்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களை ஊருக்கு அனுப்பிவைப்பது என்று முடிவு செய்தார் தோழியின் தந்தை. இவர்கள் இந்த விஷயமாக சுத்தி திரியவே அன்று மதுவால் கீர்த்தியின் அன்னைக்கு அழைக்க முடியவில்லை, அழைக்கவும் தைரியம் வரவில்லை. ஆனால் எவ்வளவு நேரம் தான் மறைக்க முடியும், அவளது கைப்பையில் இருந்த கீர்த்தியின் அலைபேசி அடித்துக்கொண்டே இருந்தது அவளின் அன்னையின் அழைப்பால். பெருமூச்சை உள்ளே வாங்கிக்கொண்டு மது எடுக்க போகும் சமயத்தில் அழைப்பு நின்றுவிட்டது. மறுநாள் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்ததாலோ என்னவோ அவர்களும் மீண்டும் அழைக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.