(Reading time: 14 - 28 minutes)

ன்னடா ஜீவா பிக்னிக் வந்தும் கூட எங்க கூட பேச மாட்டியா? பஸ்ஸில வந்த நேரத்திலருந்து அண்ணாகிட்டயே பேசிட்டு இருக்க....... பின் சீட்டுக்கு வாடா......என்ற நண்பனை “இதோ வரேன் ரெண்டு நிமிஷம் என்று அனுமதி வாங்கி விட்டு….

சொல்லுண்ணா……….

இல்ல அவ அண்ணனை எப்படி சமாளிக்கணும்னு அடிக்கடி யோசிப்பேன், முதல்ல எனக்கு உள்வீட்டுல இருக்கிற எதிரிங்களை எப்படி சமாளிக்கறதுன்னு பிளான் செய்யணும் போலிருக்கு அதான் யோசிச்சேன் என்றான் தம்பியை முறைத்தபடியே………

என்ன இருந்தாலும் உனக்கு என் ஹெல்ப் தான் வேணும் மறந்துடாத என்றவனாய்………..

“ஏய் டெமோன் இன்னா இங்க வந்து உக்காரு என்றான் அனிக்காவுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த அவல் ஃபிரண்ட் திவ்யாவை……….

என்னடா அந்த பிள்ளயைப் பார்த்து டெமோன்ங்கிற……..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அதெல்லாம் நான் சொல்ல வேண்டாம் , இப்ப பாரு அவளேச் சொல்லுவா…….

ஏ திவ்யா பாப்பா இங்க வா……….

என்னது நான் பாப்பாவா, இங்க இருக்கிற யார்கிட்டயும் கேட்டுப் பாரு நான் தான் டெமோன் னு சொல்வாங்க… வேணும்னா எங்க வீட்டுல வந்துக் கேளு இல்லன்னா என் ஆஃபீஸ்ல வந்துக் கேளு.என்று வீரமாக எழுந்து ஜீவனிடம் மல்லுக் கட்டினாள் திவ்யா……..

ஜீவன் ரூபனுக்கு கண்ணசைவில் அனிக்கா அருகில் உட்காரச் சொல்லியவனாக இங்கே திவ்யாவிடம் வம்பு வளர்த்தான். சற்று நேரத்தில் அந்தக் கீச்சுக் குரலில் அவள் விடாமல் பேசியதைக் கேட்டு கேட்டு அவன் காது ஜவ்வு ங்கொய்ய்ய்ய்……..என வீரிடவே…….

இவ சாப்பிடறது எல்லாம் இவ பேசறதுக்கே காணாது போல அதான் இவ்வளவு ஒல்லியா இருக்கா………என்னச் செய்யலாம் பேசாம பின் சீட்டுக்கு ஓடிப் போயிரலாமென்று முடிவெடுத்து அதைச் செயல் படுத்தினான். இப்போது ஜீவன் இருந்த சீட்டில் திவ்யா உட்கார அடுத்து வேறு பெண் உட்கார திவ்யா பேச இனிதே மறுபடி ஆரம்பித்தது ஸ்கூல் கலாட்டா குறித்த கலகலப்பு.

ஜன்னல் வழியே அதிகாலை நேரக் காற்றின் சுகத்தை உணர்ந்துக் கொண்டு பொழுது புலர்ந்திராத அந்த நேரத்தில் முனுக் முனுக்கென்று மின்னும் நட்சத்திரங்களை ரசித்தவாறு இருந்த அனிக்கா, சட்டென்று திரும்பியவள் ……………

அந்த நட்சத்திரங்களைப் பார்த்தியா திவி……. என்றவள் ரூபனைப் பார்த்து ஆச்சரியப் பட்டாள்.

நீங்களா அத்தான் , இங்கப் பாருங்க அந்த ஸ்டார்ஸ………எவ்வளவோ அழகா இருக்குல்ல, என ஒவ்வொன்றாய் பேசிக் கொண்டே வந்தாள். ரூபனுக்கு தான் இருப்பது பூலோகமா சொர்க்கமா என்றிருந்தது. அவளுடைய ஒவ்வொரு பேச்சுக்கும் தலையாட்டிக் கொண்டே வந்தான். அவளுடைய போக்கில் அவளை விட்டு விட்டான். இடையே பேசி காதலைச் சொல்ல இது தகுந்த தருணமாக அவனுக்கு தோன்றவில்லை.

இரவெல்லாம் பிக்னிக் செல்லும் உற்சாகத்தில் விழித்து இருந்ததன் காரணமாக சற்று நேரத்தில் அவளுக்கு தூக்கம் வந்து விட்டது போல எந்த தயக்கமுமில்லாமல் அவன் தோளில் தலைச் சாய்த்து தூங்க ஆரம்பித்தாள்.

பக்கத்தில் யாரும் அவர்களை தவறாய் பார்த்து விடக் கூடாதே என எண்ணி அக்கம் பக்கம் பார்க்க அங்கும் ஒரு சிலர் மிக உற்சாகமாய் பாட்டுகள் படித்து ஆரவாரித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். திரைப் பட பாடலொன்றைப் பாடியவாறே அவர்கள் மேல் கண் வைத்திருந்த ஜீவனை ரூபன் கண்டான்.

சகோதரர் இருவரும் கண்களாலேயே பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இருவர் புருவமும் ஏறி இறங்கி ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டது.

சீண்டிக் கொண்டே இருந்த ஜீவன் சும்மா நடத்து நடத்து என்று சட்டென்று கண்ணடித்து சமிக்ஜை செய்தான். பார்த்துக் கொண்டிருந்த ரூபனுக்கு உற்சாகம் கூடியது.

தன்னுடைய இடது பக்கத் தோளில் தலை சாய்த்து தூங்கிக் கொண்டிருந்தவள் பஸ்ஸின் வேகத்தில் மறு பக்கம் ஜன்னலில் முட்டிக் கொள்வாளோ என்கின்ற பயத்தில் தன் வலது கையால் அவள் தூக்கம் கலைந்து விடாமல் அவன் தலையை தன் மேல் நன்றாக சாய்த்துக் கொண்டான். சற்றுச்சாய்வாக அவளுக்கு ஏற்ற விதமாக அமர்ந்துக் கொண்டவனாய், மனதில் எதையோ வென்று விட்டவன் உணர, பஸ் சீட்டில் தலை சாய்த்து கண் மூடினான்.

ஹே பீச் வந்துட்டு இறங்குங்க…………….என்ற ஆரவாரத்தில் தான் கண் விழித்தான். கடற்கரையோரம் காற்று முகத்தில் அறைந்து புத்துணர்ச்சி தந்துச் சென்றது. அனிக்காவிற்க்கு வழி விட்டு இவன் எழும்பிச் செல்லாவிடில் அவனை அவள் தாண்டிச் செல்லும் அபாயம் இருந்ததால் அவசரமாக எழுந்ததில் உயரம் காரணமாக மேலிருந்த ஸ்டாண்டில் முட்டிக் கொண்டான் அவன்.

அச்சச்சோ உக்காருங்க அத்தான் என்றவளாய் அவன் தலையை வேகமாக தடவி விட ஆரம்பித்தாள். இன்னிக்கு ரொம்ப நல்ல நாள் போலவே என்று எண்ணியவன் தன் தலை தட்டியதால் எழுந்த வலி மறந்து அவளுடைய தனிப்பட்ட கவனிப்பில் மனம் மகிழ்ந்தான்.

அவர்களை இடையூறுச் செய்யாமல் ஜீவன் கடந்துப் போக……..

ஏ ஜீவா, ஏ ஜீவா என உதவிக்காக அவனைக் கூப்பிட்டாள்.

இப்ப என்ன அனி……….. என்றான்

அத்தானுக்கு தலைல பட்டுட்டு………….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.