(Reading time: 17 - 33 minutes)

வள் ஒப்புதல் அளிக்கவும் சந்தோஷ் சந்தோசமாகிப் புன்னகைத்தான்.

“இப்போ தான் மாப்ள முகத்துல பிரகாசமே வந்திருக்கு” சித்தார்த் அவன் பங்குக்கு கேலி செய்தான்.

சிறிது நேரம் முன் “டாடி வேண்டும்” என அரற்றிய அபூர்வாவை அணைத்துக் கொண்ட சித்தார்த் அவளை மெல்ல தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தான்.

“பில்லி”

“ஹ்ம்ம்”

“நிலா பேபி நமக்குத் தான் பேபி. அவ படிப்பு முடிச்சு இப்போ வேலைக்குப் போறா”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்..

“ஹ்ம்ம்”

“நிலா இன்டிரியர் டிசைன் ப்ராஜெக்ட் வொர்க் பண்ணினது சந்தோஷ் சீப் ஆர்கிடெக்ட்டா இருந்த ஸ்டார் ஹோட்டல் கன்ஸ்ட்ரெக்ஷன்ஸ்ல தான்”

சித்தார்த்தை நிமிர்ந்து பார்த்தாள் அபூர்வா.

“நம்ம நிலா பேபிய காலேஜில் எல்லோருக்கும் இஷாவா தான் தெரியும். ஆரம்பத்தில் இஷா தான் நிலான்னு சந்தோஷ்க்கு தெரியல”

“ஏன் சித்து நீ நிலா போட்டோஸ் எல்லாம் சந்தோஷ்க்கு ஷேர் பண்ணினதில்லையா”

“இல்லடா... நம்ம போட்டோஸ் மட்டும் தான் அவனுக்கு அனுப்பிருக்கேன். நிலா பேபி  போட்டோஸ் எல்லாம் அவனுக்கு அனுப்பினதில்லை”

“ஏன் சித்து”

“அது அப்படி தான்”

“எப்படி தான்”

“எனக்கு சொல்லத் தெரில பில்லி. நிலா பேபி எனக்கு கடவுள் உன் மூலமா குடுத்த பொக்கிஷம். ஐ ஆல்வேஸ் பீல் வெரி ப்ரோட்டேக்டிவ் அபோட் ஹர்”

“எனக்கு தெரியும் சித்து..எனக்கு எப்படி டாடியோ அப்படி தான் நிலாவுக்கு நீ”

அவள் இதை சொன்னதும் சிலிர்த்துப் போனான். உண்மையில் அப்படி ஓர் உணர்வு தான்  சித்தார்த்தினுள் வியாபித்திருந்தது.

“அப்படித் தான் பில்லி. சந்தோஷ் என்கிட்டே நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்டான்னு சொன்ன போது எங்க ரெண்டு பேருக்குமே அந்த பொண்ணு நிலான்னு தெரிஞ்சிருக்கல”

“இதெல்லாம் எப்போ நடந்துச்சு சித்து”

“ஆறு மாசம் முன்னாடி தான். அவன் என்கிட்டே தான் ஷேர் பண்ணினான். அவனோட காதலின்  ஆழத்தைப் பார்த்து எனக்கே ஆச்சரியம். அவன் லவ் பண்ற பொண்ணு ரொம்ப லக்கின்னு நினச்சேன். நிலாகிட்ட லவ் சொல்றதுக்கு முன்னாடியே அவன் அவங்க அம்மா அப்பாகிட்ட சம்மதம் வாங்கிருந்தான்”

“நிஜமாவா. அவங்க ஒன்னும் சொல்லலையா”

“லவ் சொல்றதுக்கு பர்மிஷன் கேட்ட பையனோட ஆசையை அவங்களால மறுக்க முடியுமா என்ன”

“ஹ்ம்ம்”

“இவன் நிலா பேபி கிட்ட எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. என் அப்பா அம்மாவ உன்  பேரண்ட்ஸ் கிட்ட பேச சொல்லவான்னு கேட்டிருக்கான். நிலா பேபிக்கும் இவன் மேல ஒரு நல்ல அபிப்ராயம் ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்கு ..லைட்டா பிடிச்சிருந்திருக்கு”

“ஆஹான்....லைட்டா பிடிச்சிருக்கா...அதானே...உன் பேபிய நீ விட்டுக் கொடுத்துட்டாலும்” அலுத்துக் கொள்வதைப் போல பூரிப்புடன் சொன்னாள் அபூர்வா.

“நிலா பேபி அவன் முன்னாலேயே எனக்கு போன் போட்டு என் அண்ணாகிட்ட பேசுங்கன்னு சொல்லி குடுத்துடா”

“ஹஹஹஹா பில்லி...அவன் மெல்ல தயக்கமா சார்...ன்னு கூப்பிட்டதும் நான் சந்தோஷ் தான்னு கண்டுபிடிச்சுட்டேன். இருந்தாலும் ஒரு சந்தேகம். ஒரு அரை மணி நேரம் கொஞ்சம் குரல் மாத்தி பேசி அவன் தான்னு கன்பார்ம் ஆனதும் அவன கதற வச்சுட்டேன் ஹஹஹ்ஹஹா”

“நானே பரவாயில்ல போல” சித்தார்த் காதைப் பிடித்து திருகினாள் அபூர்வா.

“நிஜமா மிரண்டு போய்ட்டான். அப்புறம் நான் தான்னு தெரிஞ்சதும் அவனுக்கு பயங்கர ஷாக். நான் லைன்ல இருக்கும் போதே பேபிகிட்ட இஷா நீ....நீ...அபி  சிஸ்டர் நிலாவான்னு பாவமா கேட்டான்”

“கொஞ்சம் அதிர்ச்சியா தான் இருந்திருக்கும். நம்ம கூட வளர்ந்த பொண்ணு அடையாளம் தெரியலைன்னு”

“இல்ல பில்லி. அவனுக்கு கொஞ்சம் கில்டி பீல் ஆச்சு”

“ஏன்..பிரெண்ட் தங்கச்சிய லவ் பண்ணதா”

“சம்திங் லைக் தட். கொஞ்சம் உளறினான். நான் தான் அதட்டி நீ மாப்பிளையா கிடைக்க நாங்க குடுத்து வச்சிருக்கனும்னு அவன என்கரேஜ் பண்ணேன். ஏன்னா அவன் எந்த அளவு நிலா மேல பிரியம் வச்சிருந்தான்னு எனக்கு நல்ல தெரியும்டா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.