(Reading time: 17 - 33 minutes)

க்கா...உனக்கு நிஜமா ஓகேவா அக்கா” தமக்கையிடம் ஆர்வமாய் கேட்டாள் நிலா. ஏற்கனவே அபூர்வாவின் சம்மதத்தை சித்தார்த் நிலாவிடம் கூறிவிட்டிருந்தான்.

“அக்கா நான் அவர்கிட்ட ஸ்ட்ரிக்டா சொன்னேன். என் அக்கா ஒகே சொல்லணும். அப்போ தான் எனக்கு சம்மதம்ன்னு” நிலா மகிழ்ச்சியாக தன் தமக்கையிடம் அளவளாவிக் கொண்டிருந்தாள்.

“நிலா பாப்பா என்ன அக்கா பாசம் இன்னிக்கு பொங்கி வழியுது. இவன்கிட்ட தானே முதல்ல பர்மிஷன் கேட்ட. அம்மா, அத்தை மாமா எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு. எனக்கு மட்டும் தான் தெரியல” கோபம் போல காட்டிக் கொண்டாள் அபூர்வா.

“அது எல்லோர்கிட்டேயும் சொன்னாலும் நீ சரின்னு சொன்னா தானே அக்கா...”  நிலா பதற்றம் அடைந்தாள்.

என்ன தான் சித்து நிலாவிற்கு எல்லாமுமாக இருந்தாலும் நிலா விஷயத்தில் எந்த ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டி இருந்த போதும் பைனல் வொர்ட் அபூர்வாவுடையதாகவே இருந்தது.

“அக்கா கிட்ட கேளு பேபி அவ ஒகே சொன்னா தான்” தன் முடிவுக்கு அபூர்வா மறுப்பு சொல்லப் போவதில்லை எனும் போதும் நிலாவிடம் இவ்வாறு தான் எப்போதும் சொல்வான் சித்தார்த். உன் அக்கா சம்மதம் இல்லாமல் உன் விஷயத்தில் நான் எந்த முடிவையும் தனித்து எடுக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக உணர்த்தி இருந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

“நிலா பேபி உன் அக்கா சும்மா உன்ன சீண்டிப் பார்க்குறா”

“சித்து.....” அவனை முறைத்தாள் அபூர்வா.

“அம்மா நீங்க இங்க எப்போ வருவீங்க” தன் அன்னையிடம் கேட்டாள் அபூர்வா.

“இவளுக்கு இங்க வேலை  இன்னும் மூணு மாசம் இருக்கே. அதுக்கு அப்புறம் தான் அங்க வரணும்”

“நான் ஜெனீவா கான்பரன்ஸ் பிறகு ப்ரீ ஆகிடுவேன். அப்புறம் நாம எல்லோரும் இங்க” என்று ஆரம்பித்து ஏதோ நினைத்தவள் சித்தார்த் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளவும் அவன் உரையாடலை லாவகமாக தொடர்ந்து முடித்து வைத்தான்.

“நான் போறேன் சித்து”

“எங்க போற. ஒழுங்கா உக்காரு இங்கேயே. நேத்தில இருந்தே நீ சரி இல்ல அபி”

அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் அவள்.

“நல்ல வேளை சமாளிச்சுட்ட சித்து. அம்மாக்கும் நிலா பாப்பாக்கும் நான் இப்படி இருக்கேன்னு தெரியாதுல்ல அப்புறம் அவங்க வருத்தப்படுவாங்க ”

“நீ தான் குறும்பும் சிரிப்புமா முகமூடி போட்டுட்டு இருக்கியே”

“உன்கிட்ட மட்டும் தானே சித்து ஐ கேன் பி மைசெல்ப். நீ எனக்கு ஒரு கண்ணாடி போல சித்து. என்னோட ரியாலிடிய  பிரதிபலிக்கிற கண்ணாடி”

அவன் கூறவும் அங்கே சில நொடிகள் கனத்த மௌனம் நிலவியது.

“சரி எனக்கு வேலை இருக்கு சித்து. நான் போய் பார்க்கணும்” அவள் முகம் தெளிவாக இருக்கிறது என்று உறுதி செய்தவன் அவளை அனுப்பி வைத்தான்.

சிறிது நேரத்தில் ரத்னாவதி சித்தார்த்தை அழைத்தார்.

“சித்து.... அபி பக்கத்துல இல்லையே” ரத்னாவதி கேட்கவும்

“இல்லை அவ கீழ போய்ட்டா. சொல்லுங்க அத்தை”

“எனக்கு நேத்துல இருந்து மனசு ஒரே குழப்பமா இருக்கு சித்து. நேத்து நைட் உன் மாமா என்னை நேர்ல கூப்பிட்ட மாதிரி இருந்துது. டக்குனு எழுந்து பார்த்தா கனவு. ஆனால் இத்தனை வருஷத்தில் இப்படி வந்ததில்ல. இன்னிக்கு அபி முகத்தை பார்க்கவும் எனக்கு அவர் முகமா தெரிஞ்சா. அதான் என்னால சரியா பேச கூட முடில அபிகிட்ட. நிலா கல்யாணம் விஷயம் பேசிட்டு இருப்பதால் அவரை மிஸ் செய்கிறேனோ என்னவோ”

சித்தார்த் முதலில் சாதரணமாக கேட்டுக் கொண்டிருந்தவன் ரத்னவாதி சொல்லிக் கொண்டே போகவும் கவனமானான்.

“எத்தனை மணி இருக்கும் அத்தை”

“ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேல இருக்கும் சித்து...ஏன் பா கேக்குற”

“இல்லை சும்மா தான் அத்தை. விடிகாலை கனவு பலிக்கும்னு சொல்வாங்களே”

“இத்தனை வருஷம் ஓடி போச்சு.. நீ இல்லைனா அபி என்ன ஆகிருப்பாளோ. அவர் கடைசியா சொன்னது இன்னும் நினைவு இருக்கு சித்து”

“ரதி, அபி குழந்தையா இருந்த போதே உன்னையும் நிலாவையும் அவ பொறுப்பில் நிம்மதியா விட்டுட்டு போவேன். இப்போவும் அப்படி தான். முன்பெல்லாம் அபி பத்தின கவலை எனக்கு இருக்கும். நான் இல்லாம என் பூக்குட்டி என்ன ஆவாளோன்னு. இப்போ அந்த கவலை இல்ல ரதி. சித்து இருக்கான் அவளுக்கு. அவளை பத்திரமா பார்த்துக்குவான்”

இதை ரத்னாவதி சித்தார்த்திடம் கூறவும் அன்று விஜயகுமார் அவனின் கைப்படித்து கூறியது அவனுக்கும் நினைவு வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.