(Reading time: 17 - 33 minutes)

சித்து நீ எனக்கு எந்த விளக்கமும் சொல்ல தேவை இல்ல. என்னிக்கு நிலாவ உன் கையில் குடுத்தேனோ அன்னிக்கே அவ மேல உனக்கு எல்லா உரிமையும் குடுத்துட்டேன். உனக்கு பரிபூரணமா சம்மதம்னா எனக்கும் ஒகே தான். எனக்கு அவன் நிலா பாப்பாவ லவ் பண்றேன்னு சொன்னது அவ்வளவா  கோபம் இல்லை. ஆனா இடியட் என்னை என்னத்துக்கு வம்புக்கு இழுக்குறான், இவன் கல்யாணம் பண்ணிக்கணும்னா பண்ணிக்கிட்டு போகட்டுமே”

“அப்படி இல்லடா. பொதுவா நம்ம சொசைட்டில இருக்க மெண்டாலிட்டி அப்படி தானே இருக்கு. அவங்க அம்மா அப்பா கேக்கலாம் இல்லையா”

“இருந்தாலும் இவன் எப்படி என்கிட்டே நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணுன்னு சொல்லலாம்”

“எல்லோரும் நம்மளை புரிஞ்சுக்கணும்னு நாம எதிர்ப்பார்க்க முடியாதே. வி ஹாவ் அவர் ரீசன்ஸ். அதை எல்லோர்கிட்டேயும் போய் சொல்லிக்கிட்டும் இருக்க முடியாது. சோ இதெல்லாம் கண்டுக்காம விடணும். அதுக்காக இவ்வளவு கோபப் படுவியா. ஹ்ம்ம்”

அவள் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி அவள் கண்களைப் பார்த்து நிதானமாக கேட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“சித்து எனக்கே தெரியல. கொஞ்சம் கோபமா இருந்துச்சு தான். ஆனா என்னை அறியாமலே நான் கால் போன போக்கில் ஆடினேன் சித்து. ஆட ஆட எனக்கு டாடி நெனப்பா வந்துச்சு” மீண்டும் அவன் மார்பில் சாய்ந்து ஆறுதல் தேட முயன்றாள்.

“சந்தோஷ் நிலா பத்தி சொன்ன போது முன்னே மாமா சொன்னது தான் எனக்கு ஞாபகம் வந்தது. உனக்கும் அது ஞாபகம் வந்திருக்குமா பில்லி” அவன் மனதில் நினைத்தை சொல்ல வில்லை. மாறாக அவளை மெல்ல அணைத்துக் கொண்டான்.

“முன்னாடி ஒரு நாள் மதுரை போயிருந்தப்போ டாடி சொன்னது உனக்கு மறந்திருக்கும் சித்து. எனக்கு முழுசா ஞாபகம் இருக்கு. நிலாக்கு நீ இருக்க, எனக்கு டாடி இல்லையே” அபூர்வாவும் மனதில் நினைத்ததை வெளியில் சொல்லவில்லை. 

ப்போது அபூர்வா சித்தார்த்துக்குப் பத்து பதினொன்று வயதிருக்கும். சொந்த ஊரான மதுரைக்குச் சென்றிருந்தனர் அபூர்வா சித்தார்த் குடும்பத்தினர். மீனாக்ஷி திருக்கல்யாணமும் அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவமுமாய்  மதுரையே திருவிழாக் கோலம் பூண்டிருந்த சமயம்.

“ஏன் டாடி அழகர் ஆத்துல இறங்கி வர்றாரு”

“போச்சுடா.. வா சுசி நாம வேலைய பார்க்கலாம். இனி இவ ஏன் ஏன்ன்னு விடமா கேட்டுட்டே இருப்பா. உங்க அண்ணனோட பொறுமை எல்லாம் எனக்கு இல்ல” ரத்னாவதி சுசீலாவை கூட்டிக் கொண்டு அகல அங்கே விஜயகுமார் மடியில் அபூர்வாவும் அருகில் சித்தார்த் மடியில் நிலாவும் மட்டுமே இருந்தனர்.

“அதுவாடா பூக்குட்டி. சுந்தரேஸ்வரர் மீனாக்ஷி கல்யாணத்தில் அழகர் தானே மீனாக்ஷி தேவியை தாரை வார்த்துக் கொடுக்கணும்” சொல்லிக் கொண்டிருந்தவரைப் பாதியில் இடையிட்டாள்.

“தாரை வார்த்துக் கொடுக்கணும் அப்படின்னா என்ன டாடி”

“மீனாக்ஷி தேவி அந்த பராசக்தி இல்லையா. அவங்களுக்கு அம்மா அப்பா எல்லாமே அவங்க அண்ணன் விஷ்ணுவாகிய அழகர் தான். என்னோட  செல்ல பெண்ணை எப்போதும்  பொக்கிஷமா மதிச்சு அவளை சந்தோஷமா வச்சுக்கனும். எனக்கு எப்படி எல்லாமே அவளோ அது போல உனக்கு இனிமேல் எல்லாம் அவளாக இருக்கணும் இனிமே அவளை நீ தான் பத்திரமா பார்த்துக்கணும்னு சொல்லி மீனாக்ஷி கை பிடிச்சு சுந்தரேஸ்வரர் கையில் அழகர் கொடுக்குறது தான் தாரை வார்த்து கொடுக்குறது”

“எப்படி டாடி அழகருக்கு தெரியும் சுந்தரேஸ்வரர் மீனாக்ஷிய பத்திரமா பார்த்துப்பார்ன்னு”

“அழகருக்கு அவரோட தங்கச்சின்னா உயிர். அவருக்கு ஈஸ்வரன் தான் மீனாக்ஷிக்குப் பொருத்தம்ன்னு தெரியும்”

“அப்போ என்னைய யாரு உயிரா பார்த்துப்ப்பான்னு உங்களுக்குத் தெரியுமா டாடி அவருக்குத் தான் என்னை நீங்க தாரை வார்த்துக் கொடுப்பீங்களா”

“ஆமா டா பூக்குட்டி. அந்த மீனக்ஷி தேவி அம்சமான என் குழந்தைக்குப் பொருத்தமானவன் யாருன்னு டாடிக்கு தெரியும். நீ பெருசானதும் நிறைய படிச்சு பேரும் புகழும் அடைஞ்ச பிறகு சரியான நேரம் பார்த்து உன்ன தாரை வார்த்துக் கொடுப்பேன் சரியா”

“சரி டாடி”

அன்று அந்த உரையாடல் அபூர்வா சித்தார்த் விஜயகுமார் மூவர் மட்டுமே அறிந்த ஒன்று. அபூர்வா தந்தை சொன்னதை மிக ஆழமாக தன் மனதில் பதித்திருந்தாள். சந்தோஷ் அவள் கல்யாணம் பற்றி பேச்செடுத்ததும் அவள் கோபம் கொண்டதன் காரணமும் இது தான்.

ந்தோஷ் சென்ற பின் சித்தார்த் அறைக்கு வந்த அபூர்வா அவன் ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டு வந்த வழியே திரும்ப எத்தனித்தாள்.

“பில்லி இங்க வா” சிட் அவுட்டில் லாப்டாப் வைத்து ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் அவளை அழைத்தான்.

“நீ ஏதோ வேலையா இருக்க சித்து. அப்புறம் வரேன்”

“முக்கியமா எந்த வேலையும் இல்லை” பின்னால் திரும்பி அவளை அழைத்தான்.

“அம்மா கிட்டேயும் நிலா கிட்டேயும் பேசுவோமா” அவனருகில் வந்து அமர்ந்து கேட்டாள்.

“ இரு வீடியோ சாட் போடுறேன்”

வீடியோ சாட்டில் தோன்றிய நிலா சித்தார்த் அபூர்வாவை பார்த்ததும் உற்சாகமானாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.