(Reading time: 18 - 35 minutes)

ப்போது சாதாரண குரலில் பேச ஆரம்பித்தான் சகிதீபன்.

“டிராமா தான் மாயா.. நான் பண்ணுறது டிராமாதான்.. ஆனா நல்ல எண்ணத்தில் எடுத்த முடிவு இது.. இதுக்கு பின்னாடி நிச்சயம் வன்மமோ வெறுப்பும் இல்லை!” என்றான் அவன்.

“ அது எனக்கும் தெரியும் கீதன்..” உடனே பதில் வந்தது அவளிடமிருந்து. ஒற்றை புருவத்தை உயர்த்தி, “ என்ன தெரியும்?” என்று கேட்டான் அவன்.

“உங்க வீட்டில் எல்லாரையும் விட உங்களுக்குதான் விஷ்வானிகா மேல அதிகம் பாசம்னு எனக்கு தெரியும்.. அதுனாலதான் நான் உங்க அப்பாகிட்ட” என்று  ஆரம்பித்தவள் வாயை மூடிக் கொண்டாள். காரில் அழுத்தமான மௌனம்  நிறைந்திருந்தது.

“நான் பாரதியார் வாசகன் மாயா..”என்றான் சகிதீபன். இப்போது ஏன் இதை சொல்கிறான்? என்று யோசித்த மைத்ரேயி அதை வாய்விட்டே கேட்டாள்.

“அதாவது பாரதியார் என்ன சொல்றார்?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“அவர் ஆயிரம் சொல்லி இருக்கார் கீதன்.. நீங்க எதை சொல்ல வர்றிங்க?”

“பெண்களுக்கு கருத்து சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் எப்போதும் இருக்குன்னு சொன்னவர் அவர்..”

“சரி அதற்கு?”

“அவரின் கொள்கைகளை செவ்வனே பின்பற்றும் இந்த சகிதீபன், மைத்ரேயி என்ற பெண் தன்னுடைய கருத்தினை மனம் விட்டு சொல்லாமல் இருக்க ஒரு காரணம் ஆகிவிட்டான்னு நாளைக்கு இந்த உலகம் என்னை பேசாதா? அதை நான் தாங்குவேனா?”என்று கேட்டான்.

பெரிதாய் புன்னகைத்திருந்தாள் மைத்ரேயி..

“ப்பா.. உங்க கிட்ட பேசி ஜெயிக்கவே முடியாது பாஸ்”

“உங்க கருத்துக்கு நன்றி .. ஆனால் நீங்க சொல்ல வந்ததை இன்னும் முடிக்கலையே பாஸ்!” என்றான் அவன்.

“ ஹா ஹா.. சரி சொல்லுறேன்.. அதாவது, உங்களுக்கு வினி மேல இருப்பது கண்மூடித்தனமான கோபமில்லை, கணக்கிடமுடியாத அன்புன்னு எனக்கு தெரியும் கீதன். அந்த அன்பை அங்கிள் புரிஞ்சுக்காமல் பேசினா அதை நீங்க தாங்கிடுவீங்களான்னு ஒரு கேள்வி எனக்குள் வந்திச்சு.. அதனால்தான் அவரை குறுக்கிட்டு நான் பேசினேன்.”

“..”

“என்னத்தான் நான் பண்ணது சரின்னு என்னை நானே தெளிவுபடுத்திக்கிட்டாலும், உங்க வீட்டார் எல்லாருடைய மனசிலும் நான் சின்ன சலனத்தை உருவாக்கிட்டேனோன்னு ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது..”

“..”

“அந்த குற்ற உணார்ச்சியின் வெளிப்பாட்டில்தான் உங்க கிட்ட அந்த மாதிரி உளறிட்டேன்” என்று மைத்ரேயி விளக்கம் அளிக்கவும், இப்போது பெருமூச்சு விடுவது சகியின் முறையானது.

“என்ன இவ்வளவு நீண்ட பெருமூச்சு?”

“இப்போவாவது ஒத்துக்கிட்டீங்களே மாயா!”

“என்ன ஒத்துக்கிட்டேன்?”

“நீங்க பேசினது பேச்சில்லை.. உளறல்னு!” என்று சொல்லி பெரிதாய் சிரித்து வைத்தான் சகிதீபன்.. சற்று முன்பு அவனுக்குள் பிரவேசித்த நிராசையானது வந்த தடையமே இன்றி திரும்பி போனது.

“  ஆனால் நீங்க சொல்லுறதிலும் ஒரு உண்மை இருக்கு மாயா..”

“என்ன உண்மை?”

“எனக்குன்னு தீர்க்கவேண்டிய சில சிக்கல்கள் இருக்கு..”

“ம்ம்”

“நான் படிப்பை முடிச்சிட்டு வீட்டுக்கு திரும்புறேன்னு தெரிஞ்சதுமே வீட்டில் எல்லாருக்கும் ஒரு சந்தோஷம் இருந்தது..”

“ம்ம்”

“அந்த சந்தோஷத்துக்கு காரணம் பிரிவாற்றாமையின் முடிவு மட்டும் இல்லை..”

“ம்ம்”

“ இது சந்தோஷங்களின் ஆரம்பமாகவும் அமையும்னு ஒரு நம்பிக்கைதான்!”

“ம்ம்”

“முதலில் விஷ்வா வாழ்க்கையில் நல்லது நடக்கணும்.. அவளை சரி படுத்தனும்..”

“ம்ம்”

“உங்களை பார்த்ததும் அந்த கடமை உணர்ச்சி கொஞ்சம் காணாமல் தான் போச்சு”

“..”

“ சும்மா பேச்சுக்காக உங்களை மாயான்னு கூப்பிடல.. என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாயை நீங்க!”

“மாயைன்னா நிரந்தரமில்லாதது கீதன்!” என்றாள் மைத்ரேயி தவிப்புடன்.

“ஆனால் இன்றியமையாதது மாயா..” என்றான் அவன் தீர்மானமாய்.

“ என்ன சொல்கிறான்? நான் அவனுக்கு இன்றியமையாதவளா?” இமைக்கொட்டாமல் அவனை ஆழ்ந்து பார்த்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.