(Reading time: 18 - 35 minutes)

னிமே இப்படி பண்ணனும்னு கனவிலும் நினைக்க மாட்டேன்!” என்று அவள் உறுதியளிக்கும் காட்சி அவன் இதழ்களில் புன்னகையை கொண்டு வந்திருந்தன. ஆனால் அதை அவளிடம் காட்டிவிட்டால் அவன் சகிதீபன் இல்லையே! மனதில் சந்தோஷ மழையில் நனைந்தவன், வெளியில் சஹாரா பாலையில் வாழ்பவன் போல முகத்தை வறட்சியாய் வைத்துக் கொண்டான்.

பல வாக்குறுதிகளுக்கு பிறகு, அடுத்த பிரச்சனை அங்கு ஆரம்பித்திருந்தது. யார் அவளுடன் இரவில் தங்குவது? என்பதுதான். அனைவருமே அவளுடன் இருக்க முன்வர இப்போது சகி வாயை திறந்தான்.

“யாரும் தங்க வேண்டாம்..இதென்ன நாம கட்டினா ஹாஸ்ப்பிட்டலா? காலையிலிருந்து இங்கேயே சுத்திட்டு இருக்கோம்.. நர்ஸ்களும் டாக்டர்களும் நம்மள பார்த்தாலே தலை தெறிக்க ஓடுறாங்க.. வினிக்கு பயப்படுற மாதிரி இனி ஒன்னும் ஆகாதுனு டாக்டரே சொல்லியாச்சு.. அவ வீக்கா இருக்கா.. நாம கிளம்பிட்டா அவ கொஞ்சம் தூங்குவா”என்றான் சகி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

மற்றவர்களுக்கும் அவனது கூற்றே சரியென்று பட்டது. வேணுவும் தன் மகளுக்கு தனிமையை தருவது அவசியம் என்று உணர்ந்திருந்தார். அனைவரும் அங்கிருந்து வெளியேற சகியின் கையை பிடித்துக் கொண்டாள் விஷ்வானிகா.

“அண்ணா..!!” தோற்றிருந்தாள் அவள் பந்தயத்தில்! சகி தன்னை “விஷ்வா”என்று அழைக்கும்வரை அவனை “அண்ணா”என்று அழைப்பதில்லை என்று சொல்லியவள் விரும்பியே தானே அந்த பந்தயத்தில் தோற்றாள். ஆனால் அவளது அன்புருகும் குரலில் தோற்றது என்னவோ சகிதீபன்தான். தொண்டைக்குழியில் ஏதோ சுமையேறியது போல பிரம்மை தோன்றிட அவள் பக்கம் திரும்பினான்.

“அண்ணா..சகி அண்ணா”மீண்டும் பொறுமையாய் அவனை அழைத்து வைத்தாள் விஷ்வானிகா.

“ம்ம்??”

“என்னை மன்னிச்சிருண்ணா..சத்தியமா இனி இப்படி பண்ணவே மாட்டேன்..”

“..”

“என்னாலதானே அப்பா உன்னை திட்டினாரு?”

“..”

“ஆனா.. நான் அரை மயக்கத்தில் இருந்தப்போ நீ எப்படி தவிச்சன்னு எனக்கு தெரியும்அண்ணா” என்றாள். சட்டென அவளைப் பார்த்தான் சகிதீபன்.இப்படி மாட்டிக் கொண்டோமே என்று மானசீகமாய் குட்டு வைத்துக் கொண்டவன்,

“சும்மா உளறாமல் தூங்கு” என்றான். அதோடு நிற்காமல் நகர நினைக்க, மீண்டும் அவன் கையை பிடித்து இழுத்தாள் விஷ்வானிகா.

“ப்ச்ச்..என்ன பிரச்சனை உனக்கு?” போலியான சலிப்பில் அவன் கேட்க,

“கிட்ட வாயேன்”என்றாள் வினி. அவள் அருகில் அவன் குனிய,

“ம்ம்..மீசையில் மண்ணு ஒட்டல சகிண்ணா”என்றாள் அவள் குறும்பாய். அதற்குமேல் அவனால் புன்னகையை மறைக்க முடியவில்லை. சட்டென நாற்காலியில் அமர்ந்துகொண்டு அவள் கையை பிடித்துக் கொண்டு,

“வி….ஷ்…வா…” என்று அவள் பேருக்கு வலிக்குமோ என்ற கவனத்துடன் மென்மையாய் உச்சரித்தான். அவள் உடலின் ஒவ்வொரு செல்லும் புன்னகைத்தது.

“ எல்லா கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும்.. அந்த நல்லதை மட்டும்பிடிச்சுக்கிட்டு நாம மேல ஏறி வந்துடனும்… சரியா?” என்றான்.பல வருடங்களுக்கு பிறகு இத்தனை கனிவாய் சகி, அவளிடம் பேசுகிறான்.அவளுக்கு வேறு ஏதும் வேண்டுமா என்ன? தலையை நாலா புறமும் ஆட்டி வைத்தாள். 

அவள் தலையை பாசமாய் வருடிவிட்டவன், “நீ வர வேண்டிய இடத்துக்கு தான் வந்துருக்க”என்றான்.

“அடப்பாவி, என்னை பைத்தியக்கார ஹாஸ்ப்பிட்டலில் அட்மிட் பண்ணிருக்கீயா?” என்று வெகுண்ட குரலில் வினி கேட்கவும்,

“ச்ச..ச்ச..இது அதுக்கும் மேல”என்று சிரித்தவன் அவளின் அடுத்த கேள்விக்குபதில் சொல்லாமல் ஓடியே போயிருந்தான்.

பெரிதொரு பாரம் நீங்கிய உணர்வில் ஆழ்ந்து உறக்கத்தில் பயணிக்க ஆரம்பித்திருந்தாள் விஷ்வானிகா. அவளுக்குகொடுக்க பட்ட அறை இருளாக இருக்க, எதிர் அறையின் வெளிச்சமும்,ஜன்னல் வழி தெரியும் நிலவின் ஒளியும் தான் அவ்வறையில் பிரவேசித்தது.

அந்நேரம் அழுத்தமான காலடிகளுடன் அவளை முன்னேறி வந்தான் அவன். தனதுகடமையே அவளை பார்ப்பதுதான் என்பது போல அவளையே இமைக்காமல் பார்த்தான். நல்ல உறக்கத்தில் இருந்த வினி, ஏதோ குறுகுறுப்பில் விழிகளை பிரிக்க, அவள் இரு விழிகளுக்கும் அவனது உருவம்.

அந்த இருளிலும் அவனது பளீர் சிரிப்பு அழகாய் மின்னியது. தூக்கி வாரிப் போட எழுந்து அமர்ந்தவள் அவனது முகத்தை பார்க்க முயற்சிக்க, நிலவின் ஒளி அவனது பிறை நெற்றியை தீண்டிட “V” என்ற ஆங்கில எழுத்தின் தளும்பு தெரிந்தது.

அதை பார்த்ததுமே “வருண்!!” என்று விஷ்வானிகா அவனைஅழைக்க, அந்த கள்வனின் முகத்தின் புன்சிரிப்பு!

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.