(Reading time: 7 - 13 minutes)

ண்ணா அவ சேஞ்ச் பண்ணிட்டு படுத்துப்பா, நான் பார்த்துக்கிறேன். என்ற திவ்யாவை என் அண்ணன் இவளுக்கும் அண்ணனா என ஒரு பார்வை பார்த்து வைத்தான் ஜீவன்.

ஆண்கள் அகன்றதும் அறை உள்ளுக்குள் தாழிடப்பட்டது. தன்னுடைய ஈர உடையோடு கடற்கரையோரம் கைகளை கால்களில் கோர்த்தவனாய் அமர்ந்தவன் மிகவும் தன்னந்தனியனாய் உணர்ந்தான்.

அண்ணே என் டிரெஸ் இருக்கு மாத்திக்கிறியா? அந்த டி ஷர்ட் கொஞ்சம் பெரிசு தான்……….. சைஸ் உனக்கு சரி வரும்…………..

ம்ப்ச்ச்……….

அது தான் காப்பாத்திட்டில்ல……..அப்புறம் எதுக்கு இப்படி கவலையா இருக்க…… அவளுக்கு ஒன்னும் ஆகாதுன்னா……..

பதிலே வராமல் இருக்க ரூபனின் இறுகிய முகத்தினின்று எதையுமே அவனால் கண்டுக் கொள்ளவியலவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

மணித்துளிகள் கடந்தன, அண்ணனும் தம்பியும் அமைதியாய் அமர்ந்திருந்தனர். காற்றில் சிலு சிலுப்பில் வெயிலில் ரூபனின் உடைகள் ஓரளவு காய்ந்திருந்தது. அமைதியைக் கலைத்து சட்டெனச் சொன்னான்……….

அது யாராயிருக்கும்டா………….யாரா இருந்தாலும் விடவே மாட்டேன்? நான் விடவே மாட்டேன்.

ஹேய் அண்ணா என்னச் சொல்லுற நீ?

ம்ம்…… அங்க அவ தானா மூழ்கியிருக்க வாய்ப்பே இல்லடா....... யாரோ அவளை மூழ்கடிச்சிருக்கணும். இப்ப நான் என்னச் செய்யணும்னு எனக்கு புரியலை. அவ அண்ண்ன் மட்டும் இங்க இருந்திருந்தா போலீஸைக் கூட்டிருப்பான்? தலையை கைகளால் தாங்கிக் கொண்டான். ஏதோ தப்பா நடக்குது? என்னன்னு புரியலை. இது வேற நம்ம ஸ்கூல் காலேஜ் க்ரூப். என்னச் செஞ்சாலும் அது தப்பாயிடும். என்னச் செய்யட்டும்?..........

.....................

காலையிலிருந்து தன்னிடம் கண்ணாமூச்சி ஆடுபவளை நினைவில் கொண்டு வந்தவன்.............என்ன ஆச்சுன்னு நான் கேட்டா சொல்லுவாளோ என்னவோ? நீ கேட்டுச் சொல்றியா? தவிப்பாய் வெளிவந்தன அவன் வார்த்தைகள்.

அது ஏன் நீ கேட்டா அவச் சொல்ல மாட்டா? அதெல்லாம் சொல்லுவா?

ம்ம்……..குனிந்து மணலில் விரலால் வரைந்துக் கொண்டிருந்தவன் சொன்னான்.

அவ இன்னும் அஞ்சு நிமிஷம் மட்டும் என் கண்ணில படாம இருந்திருந்தா நானும் கடலோடயே போயிருந்திருப்பேன்.

விலுக்கென நிமிர்ந்த ஜீவன் அவன் தோளில் கைப் போட்டு அவனை இறுக அணைத்துக் கொண்டான்.

லூசா அண்ணா நீ……….. இன்னிக்கு நீ அவக்கிட்ட உன் மனச சொல்லிட்ட சீக்கிரம் அம்மாக் கிட்டச் சொல்லி உனக்கும் அனிக்காக்கும் மேரேஜ் விஷயம் பேசணும். உடனே உங்க கல்யாணத்தை முடிக்கணும். அப்புறம் உன் கல்யாணம் முடிஞ்சா தானே என் ரூட் க்ளியராகும்………விளையாட்டாய் பேச முனைய அதற்கு அவன் குரல் ஒத்துழைக்காமல் கமறியது.

ஆண்கள் அழக்கூடாதாம் எந்த மடையன் சொல்லியிருப்பானோ தெரியவில்லை. அடக்க அடக்க இயலாமல் கண்ணீர் ஊற்றாய் பெருகியது இருவர் கண்ணிலும். சீக்கிரம் தன்னைக் கட்டுப் படுத்தியவர்களாய் எழுந்தனர்.

நான் கொஞ்சம் வாரேன், நீ அவளைப் பார்த்துக்க?

அண்ணா நம்ம க்ரூப்பில யாரும் அப்படிக் கிடையாது. எல்லோருக்கும் ஒரு உதவின்னா அவ தான் முன்னால போயி நிப்பா. வீட்டுல அவளுக்கு ஒரு அண்ணந்தான் ஸ்கூலில நிறைய……கூடப் படிக்கிற எல்லாருக்கும் அவ பெட்……….. யாரும் அவள ஒண்ணும் செஞ்சிருக்க நினைக்க கூட மாட்டாங்க…..நா அவக்கிட்ட விபரம் கேக்குறேன். நீ கவலைப் படாதே.

நான் கொஞ்சம் வாக் போயிட்டு வரேண்டா என்றவனாய் அகன்றான். காலையில் இருந்த உற்சாகம் துள்ளல் மறைந்தவனாய் முன்பு போல தன் கூட்டுக்குள் சுருங்கிக் கொண்ட அண்ணனைப் பார்த்து மனம் கனத்துப் போனது ஜீவனுக்கு.

சுவாசக் காற்றின்

அவசியத்தை

என் சுவாசமாய் இருந்து

உணர்த்தியவளே

நீயின்றிப் போனால்

நின்று விடும்

என் சுவாசமும்.

தொடரும்

Episode # 18

Episode # 20

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.