(Reading time: 12 - 23 minutes)

ங்கையின் கலகலப்பான பேச்சும் அவளுக்கும் ப்ரியாவை பிடித்திருப்பதை அறிந்தவுடன் ஆதர்ஷின் முகம் இழந்திருந்த பிரகாசத்தை மீட்டிருந்தது.

“எனக்கு ப்ரியாவை பிடிச்சிருக்கு.  அவளோட பதிலுக்காகதா வெய்ட் பண்ணிட்டிருக்கே” தன்னருகில் உட்கார்ந்திருந்த தங்கையின் காதில் ரகசியமாக சொன்னவன் அவசரமாக தன்னறைக்கு சென்றுவிட்டான்.

காணாமல் போயிருந்த மகளின் உற்சாகத்தால் பெற்றோர் மனம் நிறைந்து போனவர்களாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.

“அப்பா! ஆதர்ஷ்கு ப்ரியாவை பிடிச்சிருக்கு.  ஸோ கூடிய சீக்கிரம் எனக்கு நிறைய புது துணி கிடைக்கும்… அப்படிதானேபா?” தந்தையின் தோளில் சாய்ந்து செல்லம் கொஞ்சினாள்.

“உனக்கு இல்லாமலாடா…. இப்போ தலைவலி எப்படியிருக்கு?” மகளின் நலனை பரிவாக விசாரித்தார் அந்த அன்பு தந்தை.

“கவலைபடற அளவுக்கு ஒன்னுமில்லப்பா… லேசான தலைவலிதா தூங்கி எழுந்தா கலையில சரியாயிடும்”

“இதையேதானம்மா நானு சொன்னே… நீங்க வீணா கவலைபடறீங்க” வடிவின் அருகில் உட்கார்ந்திருந்த ஜெய் சொல்லவும்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“என் மகன் சொன்னா, சரியாதா இருக்கும்.  சரி! எல்லாரு சாப்பிட வாங்க… நேரமாச்சு..”

எல்லோரும் சாப்பாட்டு அறைக்கு செல்லவும், ‘ஹப்பா! ஜெய் நம்பிட்டா… இல்லைனா கேள்வி மேல கேள்வி கேட்டிருப்பா’ என்று நினைத்த மைத்ரீ நிம்மதியாக இரவு உணவை முடித்தாள்.

இத்தனை வருட நட்பில் தன் தோழியை தெரியாதவனா ஜெய்? அவளுக்கு தலைவலி என்பது அவன் கேள்விகளுக்கு பயந்து அவள் சொன்ன பொய் என அறிந்திருந்தான். 

உணவை முடித்து தன் வீட்டை அடைந்தவன் விசாரணையை ஆரம்பித்தான்.   அதன் முதல்படியாக மைத்ரீக்கு குறுஞ்செய்தியை அனுப்பினான்.

“தூங்கிட்டியா மைதி?”

“இல்லை குரங்கே…”

“எங்கிட்ட ஏன் பொய் சொன்ன?”

“நானா? எப்போ ஜெய்?”

“உனக்கு தலைவலின்னு சொன்னியே”

‘தப்பிச்சோம்னு நினைச்சியே மைத்ரீ…. எல்லா போச்சு’

“என்ன புது பொய் சொல்லாம்னு யோசிச்சிட்டிருக்கியா? பதிலை காணோம்”

‘ஒரு பொய் போதாதா… இன்னொன்னா… அப்புற உன்னோட குரங்கு மூஞ்சிய யாரு பாக்கறது? என்னால முடியாது’

“………..” ஒரு எம்டி மெஸ்ஸெஜை அனுப்பியிருந்தான் ஜெய்.

இது அவர்களுக்கு இடையேயான ஒரு பழக்கம்.  ஒருவர் மற்றொருவர் மேல் கோபம் கொண்டால் இப்படி எம்டி மெஸ்ஸெஜ் அனுப்புவது வழக்கம்.

‘எம்டி மெஸ்ஸெஜா?!’ அலறியவள் உடனடியாக ஜெய்யை அழைத்தாள்.

மூன்று முறை அழைத்தும் மறுமுனையில் அழைப்பு ஏற்கபடவில்லை.

வேறு வழியின்றி சரணடைந்தாள் மைத்ரீ.

“சாரி ஜெய்! நான் சொன்னது பொய்தா… எல்லாத்தையும் நாளைக்கு உனக்கு சொல்றே… ஃபோன் எடுடா எரும… ப்ளீஸ்”

மறுபடியும் ஜெய்யை அழைத்தாள் மைத்ரீ.  இப்போதும் அழைப்பு ஏற்கபடவில்லை.  அவன் அழைப்பை ஏற்க போவதில்லை என்பதை புரிந்து கொண்டவள் மீண்டும் குறுஞ்செய்தியை அனுப்பினாள்.

“இப்போ, என்னடா வேணு குரங்கே? உங்கிட்ட ஷேர் பண்ணாம, நான் யாரிட்ட ஷேர் பண்ண முடியும்? கொஞ்சமாவது யோசிச்சு பாரு எரும… நாளைக்கு நிச்சயமா உனக்கு எல்லா விஷயமு தெரியும்.. என்னை நம்பு ஜெய்… ப்ளீஸ்”

மேலும் சிறிது நேரம் அவளை தவிக்கவிட்டவன்

“ஓகே” என்றான்.

‘உனக்கு எவ்வளவு கொழுப்புடா, காண்டாமிருக? எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்காமலா போகும்… அப்போ இதுகெல்லா சேர்த்து வட்டியு முதலுமா கொடுக்கிறேன் பாரு… எங்கிட்ட வந்து நீ கெஞ்சனு… அப்பவு நான் என்னோட கெத்த விடாம உன்னை சுத்த விடலை…. என் பேரு மைத்ரீ இல்லை’

ஜெய்யிடம் சமாதானமான நிம்மதியில் உறங்கி போனாள் அவனது தோழி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.