(Reading time: 12 - 23 minutes)

ந்த பெங்களூரு டிராஃபிக்கு ஒரு முடிவே இல்லையா? இத்தனை சிக்னலை தாண்டி காலேஜுக்கு போறதுக்குள்ள நான் நொந்து நூடுல்ஸாகிடறனே…. இந்த காலேஜ் டைமிங்க்ஸையாவது மாத்தலாம்… அதையு மாத்தமாட்டானுங்களே… இந்த பீக் அவர்ல நாங்க கஷ்டபட்டு காலேஜுக்கு போறதுலதா அவனுங்களுக்கு சந்தோஷம்’ இன்று வீட்டிலிருந்து தன் டியோவில் புறப்பட்டதிலிருந்து இத்துடன் நான்காவது சிக்னலில் காத்திருக்கிறாள் சரயூ. 

சரயூவிற்கு பெங்களூரு டிராஃபிக் ஒன்றும் புதிதல்ல.  இருப்பினும் நேற்றிலிருந்து மனதில் மூண்டிருந்த எரிச்சல் அவளை புலம்ப வைத்தது.

இவள் ஸ்கேரி ஹௌஸ் பயணத்தை வெற்றிகரமாக முடித்திருந்தும் நந்தி விஷயத்தை இவளுக்கு சொல்லாமலேயே ஜெய், மைத்ரீயை அங்கிருந்து அழைத்து சென்று விட்டிருந்தான்.  நந்தி விஷயம் இன்னும் அவளுக்கு தெரியாமல் போனதால் எரிச்சலுற்றவள் இன்று காலையிலிருந்து அவள் கடந்து வந்த எல்லா டிராஃபிக் சிக்னலிலும் ஜெய்யை அர்ச்சித்து கொண்டிருந்தாள்.

‘என்னதா அவசரமோ?! அந்த ஃபோன் வந்ததும் மைதிய அழைச்சிட்டு ஓடிட்ட இல்ல சஞ்சு…. உன்னை என்ன பண்ணுறேன்னு பாரு’

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

க்ரீன் சிக்னல் விழவும் அந்த சாலையிலிருந்து இடபுறமாக திரும்பியவள் தனது கவனக்குறைவால் எதிரில் வந்தகொண்டிருந்த அந்த இரு சக்கர வண்டியை இடித்திருந்தாள்.

வலைவில் இரு வண்டிகளும் நிதானமாக வந்ததால் சரயூவும் அந்த வண்டியிலிருந்த இருவரும் கீழே விழாமல் சுதாரித்தனர்.

வண்டியை ஓட்டி வந்தவன் அப்படியே உட்கார்ந்திருக்க இன்னொருவன் வண்டியிலிருந்து இறங்கினான்.

“நீங்கல்லா வண்டி ஓட்டலன்னு யாரு அழுதாங்க இப்போ? காலையில வந்து எங்க உயிர வாங்குறீங்க” கடுமையாக அவன் பேசவும்

தன் மேல் தான் தவறென்பதால் “சாரி! தெரியாம நடந்துடுச்சு” மன்னிப்பு கேட்டாள்.

“பரவாயில்லை விடுங்க… ஏதோ தெரியாம நடந்துடுச்சு… நீங்க போங்க” வண்டிலிருந்தவன் சொல்லவும் சரயூ வண்டியை கிளப்பினாள்.

“மச்சா! நீ எதுக்காக அவளை போக சொல்லுற?”

“சும்மாயிருடா!” கோபமாக நண்பனுக்கு பதிலளித்தவன், சரயூவிடம் “நீங்க கிளம்புங்க” சரயூ நின்றிருந்தவனை தயக்கத்தோடு ஏறிட்டாள்.

“நீங்க அவனுக்காக தயங்க வேணா.. நான் தானே வண்டியை ஓட்டிட்டு வந்தே… நான் சொல்ற நீங்க போங்க” கனிவாக பேசியவன் தன் நண்பனை முறைத்தான்.

“அவன்தா சொல்லிட்டானே… நீ கிளம்பு” எரிச்சலாக சொல்லிவிட்டு வண்டியில் ஏறிகொண்டான்.

சரயூ காலேஜை நோக்கி பயணத்தை தொடர்ந்தாள்.

பொதுவாக இம்மாதிரியான பிரச்சனையை எளிதாக விடாத நண்பன் இன்று அவள் மீது தவறிருந்தும் அவளை அமைதியாக அனுப்பி வைத்ததை எண்ணி குழம்பினான்.

யோசனையிலிருந்த வெளிவந்தவனோ வண்டி தாங்கள் வந்த வழியே திரும்பி சென்று கொண்டிருப்பதை பார்த்து மேலும் குழம்பி போனான்.

“மச்சா கிரண்! எதுக்கு நாம வந்த வழியே போற? இந்த வழில போனா தியேட்டருக்கு நேரத்துக்கு போக முடியாதுடா”

“அது எனக்கு நல்லாவே தெரியும் கௌதம்.  கொஞ்ச நேர சும்மா உட்காருடா… வண்டி ஓட்டிட்டிருக்கேல்ல”

“உனக்கு என்னதா ஆச்சு இன்னைக்கு? அந்த பொண்ணு மேல தப்பிருந்தும் அதிசயமா அவள போக சொல்லிட்ட.. இப்போ என்னடான்னா தியேட்டருக்கு போகாமா திரும்பி போயிட்டிருக்க.. நீ என்ன செய்றன்னு எனக்கு புரியல”

“………….”

கிரணிடமிருந்து பதிலேதும் வராததால் பொறுமையிழந்தான். 

“வண்டி ஓட்டிட்டிருந்தா கூட பரவாயில்ல… சிக்னல்ல நின்னுக்கிட்டு பதில் சொல்லமாட்டேங்குற… நான் கேக்கறது காதில் விழுகுதா, கிரண்?

 “……………….”

‘என்ன பண்ணுறா இவ?’ யோசித்தபடி கிரணை வண்டியின் கண்ணாடியில் நோட்டமிட்டான்.  நண்பன் எதையோ மிகவும் ரசனையோடு பார்த்து கொண்டிருந்தான்.  அவனின் பார்வையை தொடர்ந்த கௌதம் திகைத்தான்.

‘அதானே பார்த்தே… இவ அந்த பொண்ணை போன்னு சொன்னப்பவே நான் உஷாராயிருந்திருக்கனு… மிஸ் பண்ணிட்டே…’

கிரணின் தோளைப் பற்றி உலுக்கினான் கௌதம்.

“ஹே கௌதம்! உன்னை சும்மாதானடா உட்கார சொன்னே…” எரிந்துவிழுந்தான் கிரண்.

“இதுக்கெல்லா நான் பயப்படமாட்டேண்டா!” சற்று முன்சரிந்து வண்டி சாவியை சட்டென கைபற்றினான் கௌதம்.

“நீ அந்த பொண்ணை ஃபாலோ பண்ணுறன்னு தெரியுது… இப்போ மட்டும் என்ன விஷயம்னு சொல்லல… ரெண்டரை நிமிஷத்துல க்ரீன் சிக்னல் விழுந்திரும்… அவ போயிடுவா.. நீ இங்கேயே நின்னுடுவ.. எப்படி வசதி?”

“நீயெல்லா ஃப்ரெண்டா… இல்ல… நீ துரோகிடா…”

“கிரண்! நீ எனக்கு என்ன பேரு வச்சாலும் பரவாயில்ல.  என்ன விஷயம்னு தெரியாம சாவி உன் கைக்கு வராது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.