(Reading time: 13 - 26 minutes)

07. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

திய உணவு நேரத்திற்குப் பிறகு ஆரம்பித்த வகுப்பு நேரம் நர்மதா, யமுனாவிற்கு ஓய்வு நேரம் தான்... யமுனா ஆசிரியைக்களுக்கான அறையில் உட்கார்ந்து, அடுத்த வகுப்பு நேரத்தில் நடத்தப் போகும் பாடம் குறித்து குறிப்பு எழுதிக் கொண்டிருந்தாள்... நர்மதா அப்போது தான் அந்த அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தாள்...

"நர்மதா... இது உனக்கு ஃப்ரி பீரியட் தானே... எங்கப் போயிருந்த...??"

"பிரின்ஸிபல் மேடம் ஐ பார்க்கப் போனேன்... இன்னிக்கு ஒரு 3 மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போக வேண்டியிருக்கு... அதான் பர்மிஷன் வாங்கப் போனேன்..."

"ஏன் எதுக்கு..??"

"இன்னிக்கு பத்திரிகை அடிக்கறதைப் பத்தி பேச, மாப்பிள்ளை வீட்ல இருந்து வராங்களாம்... அதான் அம்மா சீக்கிரம் வீட்டுக்கு வர சொன்னாங்க..."

"அதுக்கு ஏன் நீ போகனும்...?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

"ஒருவேளை மாப்பிள்ளையும் கூட வரலாம்... உன்னை அவர் இன்னும் நேர்ல பார்க்கல இல்ல... அதனால நீ எதுக்கும் அவங்க வரும்போது வீட்ல இருன்னு அம்மா சொன்னாங்க... அதான் சீக்கிரம் போகனும் யமுனா..."

"ம்ம் அம்மா சொல்றது கரெக்ட் தான்... நிச்சயம் முடிஞ்சிடுச்சுல்ல... துஷ்யந்த் உன்னை மீட் பண்ண நினைக்கலாம்.."

"ஓ.."

"சரி.. அவர் ஏதாவது உன்கிட்ட பேசினா.. தயங்காம நீயும் பேசு... கேக்கறதுக்கு திணறாம பதில் சொல்லு.. சரியா..??"

"ம்ம்.."

"என்ன நர்மதா... என்கிட்டேயே ஒத்த எழுத்துல பதில் சொல்ற... துஷ்யந்த்க் கிட்ட எப்படி பேசப் போறியோ..."

"இப்போ என்ன.. துஷ்யந்த் வந்தா தான் வருவாரு... அது தெரியாம அவர்க்கிட்ட பேச ட்ரெயினிங் எடுக்க சொல்றியா..??"

"அப்பா என்ன கோபம் வருது உனக்கு... அப்படி வந்தா அவர்க்கிட்ட ஃப்ரியா பேசுன்னு தான் சொன்னேன்... சரி நான் கிளாஸ்க்குப் போறேன்... நீ போகல..??"

"ம்ம் போகனும்... நீ போ, நானும் 5 நிமிஷத்துல போய்ட்றேன்.." என்று அமர்ந்திருந்தவளுக்கோ... ஒருவேளை துஷ்யந்தை நேருக்கு நேராக பார்த்தால், அவர் கிட்ட நல்லப்படியாக பேச முடியுமா..?? என்ற கேள்வி பிறந்தது...

என்ன நர்மதா.. துஷ்யந்த் என்ன பேயா.

 பிசாசா.. இப்படி பயப்பட்ற... எல்லாத்தையும் சமாளிச்சுக்கலாம், இப்போ கிளாஸ்க்குப் போ.. என்று மனதில் நினைத்தப்படியே வகுப்பறைக்கு சென்றவளுக்கு... வீட்டில் அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருப்பது தெரியவில்லை... அந்த அதிர்ச்சியிலிருந்து தன்னை சமாளித்துக் கொள்வாளா அவள்??

சிறிது நேரம் ஓய்வெடுத்த செல்வா தனது அறையிலிருந்து வெளியே வரவும், துஷ்யந்த் வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது... கோமதியும், விஜியும் டைனிங் ஹாலில் உட்கார்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தனர்... மாடியிலிருந்து இறங்கி வந்தப்படியே "அண்ணா.." என்று செல்வா அழைத்ததும் தான் பெரியவர்கள் இருவரும் கவனித்து வரவேற்பறைக்கு வந்தார்கள்...

ஒரு புன்னகையோடு செல்வாவை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தான்  துஷ்யந்த்...

"என்ன ராஜா... போன வேலையெல்லாம் நல்லப்படியா முடிஞ்சுதா..??"

"என்ன முடிஞ்சுதாவா... நான் தான் சொன்னனேம்மா.. சக்ஸஸா முடிஞ்சதுன்னு..." என்று செல்வா கூறினான்...

"அண்ணா கை கொடு..." என்று கை குலுக்கி வாழ்த்தினான்... அதற்குள் விஜி இருவருக்கும் டீ எடுத்துக் கொண்டு வந்தார்... டீ யை எடுத்துப் பருகிய படி..

"அண்ணா... நான் வேற ஒரு விஷயமா உன் பி.ஏ க்கு போன் பண்ணேன்... அவன் உன்னை புகழ்ந்து தள்றான் தெரியுமா..?? பாஸ் காலையிலிருந்த மூடுக்கு மீட்டிங்க எப்படி அட்டண்ட் பண்ண போறாரோன்னு யோசிச்சேன்... ஆனா அவர் பிச்சி உதறிட்டாருன்னு  என்கிட்ட சொன்னான்... எனக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சாலும், அவனோட வாயால உன்னை புகழ்ந்ததை கேட்கும் போது சந்தோஷமா இருக்கு.. அண்ணா உன்க்கிட்ட ஏதோ பவர் இருக்கு ண்ணா... அதான் அந்த பி.ஏ சொன்ன மாதிரி பிச்சி உதறுற.. என்றான்.

செல்வா சொன்ன அந்த நேரம், துஷ்யந்திற்கு கங்காவின் முகம் தான் ஞாபகத்திற்கு வந்தது... அவள் தானே இவன் உள்ளிருந்து, இவனை இயக்கிக் கொண்டிருப்பவள்...

"செல்வா... அந்த பி.ஏ புதுசா இப்போ தானே சேர்ந்திருக்கான்... அதான் அவனுக்கு எல்லாம் பிரம்மிப்பா தெரியுது... 8 வருஷமா பிஸ்னஸ் பண்றோம், இதைக் கூட கத்துக்கலன்னா எப்படி... அந்த மீட்டிங்கை நீ அட்டண்ட் பண்ணியிருந்தாலும் சக்ஸஸா முடிச்சிட்டு வந்திருப்ப... என்னம்மா நான் சொல்றது சரி தானே...??"

"நான் தான் அதை அடிக்கடி சொல்வேனே ராஜா.."

"இருந்தாலும் உன்னோட அளவுக்கு வர நான் கத்துக்கனும் அண்ணா..."

"சரி நீ எப்போ வந்த... பூனால புது ஆஃபிஸ் ஆரம்பிக்கிற வேலை எப்படியிருக்கு..."

"நான் மதியம் தான் வந்தேன் ண்ணா... மத்த டீடெய்ல்ஸ்ல்லாம் அப்புறம் பேசிக்கலாம்... இப்போ திரும்பவும் கை கொடு... என்று செல்வா கை நீட்டியதும், துஷ்யந்த் எதற்கு என்று கேள்வியாக பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.