(Reading time: 13 - 26 minutes)

னைவி என்ற உரிமையோடு வேறொருத்தி வரப் போகிறாள்... அவன் நம்பிக்கையெல்லாம் உடைந்துப் போக, இப்போது இந்தப் பொருட்களையெல்லாம் மனைவியாக வரப் போகிறவளுக்கு பரிசாக கொடுக்க முடியுமா..?? இல்லை கங்காவிற்கு வாங்கியதை தூக்கியெறிய தான் முடியுமா..??

இது என்ன உயிரற்ற பொருட்கள் மதிப்பில்லாதது... ஆனால் மனம் முழுவதும் கங்காவையே சுமந்துக் கொண்டிருக்கிறான் இவன்... உடலுக்கு அழிவுண்டு, ஆனால் ஆன்மாவிற்கு அழிவில்லை என்பார்கள்... இவன் உயிர் பிரிந்தாலும், இவன் ஆன்மா கங்காவை நினைத்தே வாழ்ந்துக் கொண்டிருக்கும்... அப்படியிருக்க இன்னொரு பெண்ணை எப்படி மணப்பான்...

இது அந்த பெண்ணுக்கு செய்யும் துரோகம் அல்லவா..?? எவ்வளவு ஆசைகளோடும், கனவுகளோடும் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பாள் அவள்... கடைசியில் ஏமாற்றம் தானே மிஞ்சும்...  அந்த குற்ற உணர்வில் தினம் துடித்துக் கொண்டிருக்கிறான் இவன்...

இவன் உணர்வுகள் கங்காவிற்கும், இவனின் அன்னைக்கும் ஏன் புரியவில்லை...?? திருமணமே செய்யாமல் இப்படியே இருக்கிறேன் என்று சொன்னால் புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்களே... எளிதில் எப்படி மனதை மாற்றிக் கொள்ள முடியும்..?? இவனை பற்றி தான் யோசிக்கவில்லை... அந்த பெண்ணை பற்றியாவது யோசிக்கலாமே...??

அன்று கங்கா பேசியதில் உணர்ச்சிவசப்பட்டு, அன்னையிடம் திருமணத்துக்கு சம்மதம் சொல்லிவிட்டான்... அவர்கள் இப்படி உடனடியாக திருமணத்தை நிச்சயம் செய்வார்கள் என்று இவன் எதிர்பார்க்கவுமில்லை... ஆனால் எல்லாம் வேகமாக நடந்து முடிந்துவிட்டது... ஆனால் திருமண தேதி நெருங்க, நெருங்க... ஏதோ குற்றம் செய்வது போல் மனசாட்சி கொள்கிறது... எப்படி இதை சரி செய்வது என்று புரியவில்லை...

இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால், கங்காவும், அம்மாவும் வருத்தப்படுவார்கள்... இந்த திருமணத்தை செய்துக் கொண்டால், அந்த பெண்ணுக்கு இவன் செய்வது துரோகம்... என்ன செய்வது என்று புரியவில்லை...  அலுவலகத்தில் எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளை சமாளித்திருக்கிறான்... ஆனால் இதற்கான தீர்வு தான் அவனுக்கு தெரியவில்லை... யோசித்து யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம்... கண்களை மூடிய படி கட்டிலில் சாய்ந்தான்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

ட்டோ வந்து வாசலில் நிற்கும்போது, ஏற்கனவே அங்கு கார் நின்றிருந்தது...

"அய்யோ அவங்கல்லாம் வந்துட்டாங்க போலயே... 3 மணிக்குன்னு சொல்லி, அங்கிருந்து கிளம்பறதுக்கு 3.30 ஆயிடுச்சு.. வழியெல்லாம் ட்ராஃபிக், இப்போ அம்மா தையா தக்கான்னு குதிப்பாங்க.. யோசித்தப்படியே ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்துவிட்டு இறங்கினாள் நர்மதா..

தன் மகளின் வரவை எதிர்ப்பார்த்தப்படி வாசலையே பார்த்துக் கொண்டிருந்த மல்லிகா... ஆட்டோ வந்து நிற்கும் ஓசை கேட்டதும், "இதோ நர்மதா வந்துட்டா.." என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தது, கேட்டை திறந்துக் கொண்டு வந்தவளுக்கு கேட்டது...

கதவை ஒட்டியப்படி இருந்த சுவரோரம் போடப்பட்டிருந்த சோஃபாவில் மூவரும் அமர்ந்திருந்தனர்... கதவின் அருகே கோமதியும், அவரின் பக்கத்தில் விஜியும், மூன்றாவதாக செல்வாவும் அமர்ந்திருந்தனர்...

அதனால் வீட்டுக்குள் வரவிருக்கும் அவளை மூவரும் எதிர்பார்த்திருந்தனர்... அதுவும் அண்ணனுக்கு மனைவியாக வரப் போறவளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த செல்வாவின் விழிகள் உள்ளே நுழைந்தவளை பார்த்ததும், ஒரு நொடி அதிர்ச்சியை காட்டி... பின் உள் வாங்கியது...

வீட்டுக்குள் நுழைந்ததும் கோமதியை பார்த்தவள்... "ஸாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சு.." என்றாள்.

"பரவாயில்லம்மா... நாங்களும் இப்போ தான் வந்தோம்... ஒன்னும் பிரச்சனையில்லை..." என்று கோமதி சொல்ல...

"ஒரு இடத்துக்குப் போனா வர முன்னப் பின்ன தான் ஆகும்... அதுவும் வேலைக்குப் போனா மணி அடிச்சதும் உடனேவா கிளம்பமுடியும்.." என்று விஜி கூறினார்.

அவர்கள் பேசுவதை ஒரு புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு... அவர்கள் அருகில் இருந்தவனை ஏனோ பார்க்க தோன்றவில்லை... துஷ்யந்த் தான் வந்திருக்கிறான் என்று நினைத்தவளுக்கு... ஏனோ அவனை நேருக்கு நேராக பார்க்க வேண்டும் என்ற ஆசையோ.. எதிர்பார்ப்போ இல்லை...

ஒருவேளை வந்திருப்பது துஷ்யந்த் அல்ல... அவனுடைய சகோதரன் என்பது தெரிந்திருந்தால், அவனை ஏறெடுத்து பார்த்திருப்பாள்... பார்த்து அதிர்ந்தும் போயிருப்பாள். ஆனால் அதற்குள்,

"நர்மதா கொஞ்சம் உள்ள வா.." என்று அவளை உள்ளே அழைத்த மல்லிகா.. தன் கணவரிடம் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.

"இதோ வந்துட்றேன்..." என்று நர்மதா பெரியவர்களிடம் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தாள்...

வரவேற்பறையிலிருந்து உள்ளே வந்த அறை கொஞ்சம் நீளமாக இருக்கும்... அது பூஜை அறையாகவும், ஃபிரிட்ஜ், கிரைண்டர் போன்ற சாமான்கள் வைக்கவும் பயன்படுத்தப்பட்டது... அந்த அறையின் ஒருபக்கம் படுக்கயறைக்கு  போகும் வழியும், மறுபக்கம் சமயலறைக்கு செல்லும் வழியும் இருக்கும்...

அறைக்குள் நுழைந்தவள் நேராக பெட்ரூம்க்கு செல்ல... பின்னாலேயே வந்த மல்லிகா பொறிய ஆரம்பித்தார்...

"ஏண்டி... சீக்கிரம் வான்னு தானே சொல்லி அனுப்பிச்சேன்... இதான் சீக்கிரம் வர்றதா...??"

"இது என்ன எங்க அப்பா போட்ட ரோடா.. இல்ல நான் வி.ஐ.பி யா..?? வர்ற வழியெல்லாம் எவ்வளவு ட்ராஃபிக் தெரியுமா..?? வீட்டுக்குள்ள இருக்க நீ ஈஸியா சொல்லிடுவ... தினம் போய்ட்டு வர எனக்கு தான் தெரியும்...

அதான் அவங்களே ஒன்னும் சொல்லல இல்ல... அப்புறம் என்னம்மா.." என்று எரிச்சல் காட்டினாள்...

"சரி சரி... ஃப்ரஷ் ஆகிட்டு, கிச்சனுக்கு வா.." என்று சொல்லிவிட்டு சென்றார்...

முகம் கழுவி லேசாக பவுடர் போட்டு, பொட்டு வைத்தவள்... புடவையை சரி செய்துக் கொண்டு கிச்சனுக்கு செல்ல... மல்லிகா பலகார தட்டை இவளிடம் கொடுத்து, எடுத்துப் போக சொல்ல.. "என்னம்மா இது..." என்று சலித்துக் கொண்டே தட்டை வாங்கியவள்... வரவேற்பறைக்கு வந்தாள்...

பெரியவர்கள் இருவருக்கும், தன் தந்தைக்கும் பலகாரத்தை கொடுத்தவள்... பின் செல்வாவிடம் வந்தாள்.. இப்போதும் அவன் முகத்தை நேராக பார்க்காமல், தரையை பார்த்தப்படி அவனிடம் தட்டை நீட்ட...

"இவன் துஷ்யந்தோட தம்பி ம்மா.." என்று விஜி அவனை அறிமுகப்படுத்தவும்... தயக்கங்கள் நீங்க அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி... அவளை அறியாமலே அவள் உதடுகளோ... ரிஷப் என்று சத்தமில்லாமல் உச்சரித்தது.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.