(Reading time: 18 - 35 minutes)

தில் எப்போதோ எங்கிருந்தோ தொடங்கியது வாய் வார்த்தைகள்… அவன் பெண் கேட்டு வந்த போது இவள் ஏன் அப்டி ரியாக்ட் செய்தாள் என்பதற்கான எக்‌ஸ்ப்ளனேஷன் அது….

ஸ்கூல் டேசில் தொடங்கிய மிஸண்டர்ஸ்டாண்டிங்கில் இருந்து இவள் சொல்ல…..

“ஹேய் நான் ஸ்கூலிங் முடியவும் டிஸ்டண்ஸ் மோட்லதான் ஸ்டடீஸ கண்டின்யூ செய்றதாவே இருந்தேன்…. பிஸினஸை ஃபுல்டைம்மா பார்க்கிற ப்ளான்…..எந்த ப்ரொஃபஷனல் கோர்ஸும் ட்ரைப் பண்றதா ஐடியாவே கிடையாது…. நிமுவ அவ இஷ்டப்பட்ட அளவு படிக்க வைக்கனும்…. அவ மேரேஜுக்கு ரெடியாகுறதுக்குள்ள ஃபினான்ஸியலி நான் அதுக்கு ரெடியாகனும்ன்றதுதான் அப்ப எனக்கு மனசுல இருந்த ஒரே விஷயம்….. அப்றம்  இப்டி  சீட்டிங் செய்து ஸ்கோர் வாங்கி என்ன செய்யப் போறனாம்…?” என ஆதங்கமாய் புலம்பிய அவன்…

“ இப்பவாவது நான் என்ன படிச்சுறுக்கேன்னு தெரியுமா? பிகாம் முடிச்சுட்டு எம்பிஏ படிச்சுட்டுதான் இருக்கேன்….இன்னும் முடிக்கல…. பிஸினஸையும் அதையும் சேர்த்து ஹேண்டில் செய்றது செம சேலஞ்சிங்கா இருக்குது….” என இன்னொரு டோன் குறைபடுதலுக்கு போய்

“ஸ்கூலிங்ல எல்லா க்ளாஸிலும் நான் க்ளாஸ் ரெப் தெரியுமா…. உனக்குத்தான் நம்ம ஸ்கூல் பத்தி தெரியுமே…. ரெப்தான் எல்லாருக்கும் ஹோம்வொர்க் நோட் கரெக்க்ஷன் செய்யனும்…. க்ளாஃஸ்வொர்க் எல்லாம் போட்ல எழுதிப் போடனும்…..டெய்லி ஈவ்னிங், அன்னைக்குள்ள லெசனை எல்லாரும் படிச்சு ரெப்ட்ட அன்ஸ்வர்ஸ் சொல்லிட்டு போகனும்…. எல்லா லெசனையும் 40 டைம்ஸ் கேட்கிற ஒருத்தன் திரும்ப வீட்ல வந்து படிச்சாகனுமா என்ன மார்க் வாங்க….?...அப்போ அது ஈசியா இருந்துது….. இங்க ஆஃபீஸ் அவர்ஸ் முடிஞ்சு…..லேட் நைட் புக் எடுத்துட்டு உட்கார்ந்தா…..யாராவது ரீட் பண்ணி சொல்ல மாட்டாங்களான்னு தான் ஃபீல் வருது….” என அடுத்துமாய் சொல்ல..…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

பேசிக் கொண்டே படுக்கையில் அவனருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்திருந்த அவன் மனைவியோ

“இதெல்லாம் அநியாயம்ங்க ஆஃபீஸர்…..ஹோம்வொர்க்கே செய்யாம எல்லோர் ஹோம்வொர்க்கையும் செக் செய்ற வேலை பார்த்திருக்கீங்க சார் நீங்க….”  என அவனை ஓட்டினாலும்…..

 “இனி  ஸ்டடீஸ்ல நான் உங்களுக்கு ஹெல்ப் செய்றேன்பா….” என்று இளகியபடி அவன் முகம் பார்க்க…

“ஆமா….ஆமா…. நைட் உன் கூட சேர்ந்து  நான் கண்டிப்பா ஓஹோன்னுதான் படிக்கப்போறேன்…” என்றபடி அவன் அவளை பின்னிருந்து அணைக்க….

அவன் என்ன அர்த்தத்தில் கிண்டல் செய்கிறான் என புரியவும் இவள் அவன் கையில் ரெண்டு அடி போட்டபடி…..

“படிப்பு விஷயத்தில் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாங்கும்” என முறுக்கிக் கொண்டவள்….

அன்னைக்கு நைட் மறக்காம “ரியூ இன்னைல இருந்தேவா…?” என்றவனை இழுத்துப் பிடித்து லாப்டாப் முன் உட்கார வைத்து…. இவள் ஒரு டாபிக் வாசிக்க தொடங்கினாள்.

கெமிஸ்ட்ரி ஸ்டூடண்டான இவளுக்கு அந்த மேனேஜ்மென்ட் பேப்பர் ரொம்ப ட்ரையாக தோன்ற…. ஆனால் அதற்குள்….  “இத அப்பப்ப ஃபாலோ பண்ண வேண்டி இருக்கும் ரியு…..”என தொடங்கி   அதன் ப்ராக்டிகல் இம்ப்ளிமென்டேஷன் அவன் பேச….. அடுத்த வந்த நேரம் அவளுக்கு கொஞ்சம் எளிதாகவே தெரிந்தது…..பிடித்தது….

விவன் ரூம் பெட்டின் ஒரு ஓரத்தில் டேபிளை இழுத்துப் போட்டு அதில் லேப் டாப் வைத்து இவள் சொல்லிக் கொண்டிருக்க… இவள் அருகில் இருந்து கேட்க ஆரம்பித்த அவன்… எத்தனை பொஷிஷனுக்கோ மாறி….. எப்போதோ இவள் மடியில் தலை வைத்து படுத்தபடி டிஃஸ்கஸ் செய்ய ஆரம்பித்திருந்தான்……

ஒரு கட்டத்தில் “இன்னைக்கு இவ்ளவு போதும்…..ஆனா இந்த பார்ட்க்குள்ள கொஃஸ்டியனரை இப்பவே முடிச்சுடுங்க…..” என இவள் அவனை எழுப்ப…

“ இதுவுமா…?” என ஒரு டோனில் கேட்டாலும்…அடுத்து கடகவென அவன் அதை முடிக்க…….

“good cute rat” என இவளிடமிருந்து ஒரு பாராட்டு…..எல்கேஜி குழந்தைய தட்டி கொடுக்ற மாதிரி அவனுக்கு கன்னத்தில் ஒரு தட்டு வேறு….

இப்பொழுது இவள் கையை பற்றியவன்…..இவள் முகத்தைப் பார்க்க……அண்ணலும் நோக்கினாள்….அவளும் நோக்கினாள் மொமன்ட்……அதாவது அப்டின்னு ரியு நினச்சுட்டு பார்க்க…

“உன்ட்ட ஒன்னு சொல்லனும் ரியு…”

“ம்….”

“நீ…”

“ம்….?”

“சரியான ராட்சசிடி” 

“ஆன்…” வெடுக்கென இவள் கையை உருவ…

“ராட்சசி….”

“கரண்டி ராட்சசி…..”

“புக் ராட்சசி… “

“பொண்டாட்டி ராட்சசி…. “

அவன் அவளை அப்படி ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல…..அருகிலிருந்த பில்லோவால் அவனுக்கு அத்தனை அடி இவளிடமிருந்து….

 “யாராவது ஃபர்ஸ்ட் நைட்ல உட்காந்து இப்டி மொக்க  பாடம் சொல்லி தருவாங்களாடி….?” அதுவரை அவன் சொல்லிக் கொண்டிருந்த அதே டோனில்தான் அவன் இதையும் சொல்ல…. ஆனா சட்டென அசைவற்று நின்றுவிட்டாள் ரியா…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.