(Reading time: 18 - 35 minutes)

ங்கு கனவில் ருயம்மா தேவி இருள் சூழ்ந்த அந்த அதிகாலை நேரத்தில் மறைந்து மறைந்து எங்கோ சென்று கொண்டிருந்தாள்… ஸ்னானம் செய்தல் போன்ற பெண்ணுக்கே தேவையான ப்ரத்தியேக தனிமை பொழுதுகளை அவள் இப்படித்தான்  உருவாக்கிக் கொள்வாள்…..

வெகு அதிகாலை…..அல்லது  இரவுப் பொழுதில் இக்காரியங்களுக்காக தேசப் பெண்களும் வெளிவரும் அந்நேரம் சற்று தொலைவு ஆண் உடையில் சென்று….எதோ ஒரு மறைவில் பெண் உடைக்கு மாறி….

பின் திரும்பி வரும் நேரம்…..மறுபடியுமாய் பாதி வழியில் ஆண் வேடம் தரித்து என…..இன்றுவரை  வெற்றிகரமாகவே சாமாளித்திருந்தாள்…. இன்று காலையும் அவ்வாறு வந்திருந்தவள் வழக்கம் போல் முழு பெண்ணுடையில் அக்குளிர்ந்த நீருக்குள் இறங்கி நீராட துவங்கினாள்….

அருகில் ஏதும் ஊர்ப்பகுதி இல்லை என்பதால் போலும்…..இன்று இவள் முழு தனிமையில் ஸ்னானம் முடித்து உடை மாற்றி கரையேறியவள் செவியில் விழுகிறது “ தேவி…” என்ற குரல்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

மானகவசரின் குரல்…. இவள் துள்ளிப் போய் அருகில் நீருக்குள்ளிருந்த பெரும் பாறையின்  பின் அண்டினாள்… முழு பெண்ணுடையில் சபைக்கு வர தகுதியான கோலத்தில்தான் அவளிருக்கிறாள்… இருப்பினும் ஏனோ அவரை ஆண் கோலத்திலேயே கண்ணோடு காண்காண இயலவில்லை……இதில் பெண்ணுருவிலா?

இவள் என்ன சிந்தித்துக் கொண்டு நின்றென்ன….? அவள் மௌனத்தை சம்மதம் போல் பாவித்து அருகில் இறங்கி வந்து கொண்டிருந்தான் மானகவசன்…. நிமிர்ந்து காண நாணம் தடை போட…எதிரில் நிற்கிறான் என தெரிந்தும் இடபுறமாய் எங்கோ பார்வையை வீசினாள்….

அவனது பார்வைக்கே படருகிறது இவள் முகத்தில் செம்மை…

மானகவசனோ போர்களத்திற்கு இவனோட வர துணிந்த நங்கை இன்றுவரை ஆண் உருவில் அவன் அருகில் அத்தனை கம்பீரமாய் சூழ்நிலைகளை எதிர் கொண்டவள்…… இன்று இவனை கண்ணோடு கண் நோக்க இயலாமல் தவிக்கும் அழகை சில நொடி பருகினான்….

முதன் முதலாக முழு பெண்ணுடையில் தன்னவள் முகம் காண்கிறான் அவன்….

மெல்ல புரிகின்றது ருயம்மாவுக்கு…..நிமிர்ந்து பாரமால் ….கேட்பவை கேளாமல் நின்றிருந்தால்…இவள் இப்படியேதான் நின்று கொண்டிருக்க வேண்டும்….. அவராக எதுவும் சொல்ல போவதில்லை போலும்….

ஒருவாறு தன்னை சமாளித்து அவரை நேருக்கு நேராய் கண்ணோக்கினாள்…

“பரிச பொருள் தருகிறேன் என ருயம்மரிடம் கூறி இருந்தேன்…..” என்றான் அவன் இதழிலும் எல்லா இடத்திலும் குறும்பு கொப்பளிக்க….

கூறியபடி ஸ்னானத்தால் விரிந்து வழிந்து கொண்டிருந்த அவள் முடியிடா நீண்ட கூந்தலில் சில புரளும் அவள் முன் நெற்றிக்கு அந்த தங்க சுட்டிகையை சுமக்க கொடுத்தான்….

 இந்நொடி அவன் வதனத்தில் குறும்பென்று எதுவுமில்லை…. உரிமைகள் சங்கமிக்கும் உணர்வு நிலையைத் தவிர இருவர் இதயத்திலும் அக் கணம் ஏனோ ஏதுமில்லை…

அவ்வாறு  அவன் நெற்றியில் வைத்த சுட்டியை தீவிரமாக பிடித்து அது கீழே விழாதவாறு முறையாக கூந்தலோடு கொழுவிக் கொள்கிறாள் இவள்……..அவன் செயலில் எதேதோ நிறைவின் அலைகள் அவளுக்குள் அசைந்தாடுகின்றது…

சில வினாடிகள் கழிய…. மானகவசன் கரை நோக்கி செல்ல…. கேட்டுவிட்டாள் ருயம்மா….  “தாங்கள் என்னை எப்போது பெண் என புரிந்து கொண்டீர்..?”

தொடரும்

Episode # 20

Episode # 22

{kunena_discuss:1063}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.