(Reading time: 18 - 35 minutes)

ர்ஸ்ட் நைட்டா…???!!!! இவன் என்ன சொல்றான்? பாப்பா பிறந்த பிறகுதான் எல்லாம்னு சொல்லிட்டு இருந்தான்….இப்ப என்ன ஆச்சு…?’ அதற்கு மேல் அவள் யோசிக்கும் முன்

“என்ன முழு மனசா அக்சப்ட் செய்துட்டு இன்னைக்குத்தான் ஃபர்ஸ்ட் டைம் என் கூட இருக்க  ரியு….அத சொன்னேன்…. மத்தபடி நோ ப்ளான் சேஞ்ச்” என அவன் சொல்ல….. சொன்ன அவன் குரலில் இதுவரை இருந்த விளையாட்டுத்தனம் விலகி இருக்க…… அது அன்றைய நாளின் அவர்களது உறவின் நிலையை முழுதுமே உணர்த்துவிக்க போதுமானதாய் இருந்தது அவளுக்கு….

“சரி ரியுமா….தூங்கலாம்…..லேட் ஆகிட்டு இதுக்கு மேல விழிச்சுருக்க வேண்டாம் நீ…..” அவன் சொல்ல…..

அவனது பெட்டில் அவனோடு தூங்க வேண்டும் என்ற புரிதலும் உணர்தலும் அவளுக்குள் உண்டாக்கிய அழகிய அலையை அனுபவித்தபடி… தன் ரூம் வாசலை நோக்கி நடந்தாள்…..இவ நைட் ட்ரெஸெல்லாம் அங்க  தானே இருக்கு…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

“அங்க எங்க போற ரியு…?” விவனும் இப்போது இவள் கூட வந்தான்…

“ட்ரெஸ் மாத்தனும்பா….”

“ம்…எடுத்துட்டு இங்க வந்துடலாம்…”

அவன் அந்த தீ இன்சிடென்டால அந்த ரூம்க்கு அவள தனியா அனுப்ப யோசிக்கிறான் என்பது புரிகிறது இவளுக்கு…. அங்க மட்டுமல்ல எங்கயுமே அவன் கண்பார்வையை விட்டு அவளை அனுமதிப்பதாய் இல்லை அவன்….

இதற்குள் இவள் கையை அவன் பற்ற….  இவள் புற செயலாய் அவன் விரல்களுக்குள் தன் விரல்களை கோர்த்தாள்….

இப்பொழுது இவளுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு இவனது ரூமிற்கு வந்தாயிற்று…..

அந்த பாத்ரூமிற்கு ஃஸ்விமிங் பூலிலிருந்து வரவும் வழி இருப்பதால் அதைவிட இதை சேஃபாக அவன் நினைக்கிறான் என இவள் புரிய…

இந்த ட்ரெஸிங் ரூமிலும்….தரையில் நீரை ஊற்றி ஈரமாக்கினான் அவன்… சட்டென தீ பற்றுவதை அது தடுக்கும் என அவன் யோசிப்பது இவளுக்கு புரிகிறது….

“தரை வெட்டா இருக்குது ரியுமா….ரொம்ப கேர்ஃபூல்லா மாத்திட்டு வா…. டோர க்ளோஸ் செய்துக்கோ…ஆனா லாட்ச் போடாத…” சொல்லிவிட்டு அவன் வெளியே சென்று நின்று கொள்ள….

எத்தனைதான் அவன் இவளிடம் விளையாடிக் கொண்டிருந்தாலும்….உள்ளுக்குள் அவன் மனம் எங்கு சுற்றிக் கொண்டு இருக்கிறது என உணர்கிறாள் இவள்..….

அடுத்து பெட்டில் வந்து இவள் படுத்துக் கொள்ள அவனோ இவள் அருகில்தான் என்றாலும் படுக்காமல் சற்று சாய்ந்து கால் நீட்டி அமர்ந்து கொண்டவன்….

“நீ தூங்கு ரியு….எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்….” என இவளை தூங்க செல்ல…..

அதற்கு மேல் ஏனோ வெறும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருக்க  இவளுக்கு முடியவில்லை….

அவன் அருகில் படுத்திருந்தாள்தானே…. மெல்ல திரும்பி இப்போது அவன் மடியில் முகம் வைத்து அவனை இடுப்போடு இரு கையால் அணைத்தாள்…

அதில் அவன் உடல் ஒரு நொடி  இறுகி பின் தளர்ந்த அந்த செயலில்தான் அவன் எத்தனை அழுத்ததில் இருக்கிறான் என்பதே இவளுக்கு புரிகிறது…

அதற்குள் இவள் தலையில் வருடலாய் கை வைந்திருந்த அவனோ…. “ரியுமா இப்டி இந்த பொசிஷன்ல நீ படுக்க கூடாதுன்னு சொல்வாங்கன்னு நினைக்கிறேன்” என அவன் அறிவுறுத்த….

சற்றாய் எழுந்து அவன் மார்போரம் தலை சாய்த்து ஒற்றை கையால் அவனை அணைக்க…

அவனோ இவள் உச்சந்தலையில் இதழ் பதித்தான்…..

“என்னாச்சு ரியூ…?” அவன் ஆரம்பித்த நேரம் இவள் பேச துவங்கி இருந்தாள்….

ரியாவைப் பொறுத்தவரை நடப்பதெல்லாம் ஸ்பிரிட் வொர்க்……ஆனால் விவன்க்கு இவ ட்ரீமே தெரியாதுன்றப்ப அதோட அந்த மானகவசர் வரதுங்கர் வாய்ஸ் பத்தி எதுவும் இவ சொல்லி இருக்காதப்ப….அவன் இத ஹியூமன் வொர்க்கா நினைக்கிறதும் சேஃப்டிக்காக இப்டி கண்விழிச்சு உட்காந்துட்டு இருப்பதும் நேச்சுரல் தானே….

ஆனால் அவன் நிம்மதி இவளுக்கு முக்கியம்….

ட்ரீம்ஸ் பத்தி அவன் சொல்ல வேண்டாம் என சொல்லி இருப்பதாலும்…..அங்கு டாக்டரைப் பார்க்க போகும் போது பிடிவாதமாய் அவன் தவிர்ப்பதாலும்… இந்த பாத்ரூம் வாய்ஸ் பத்தியுமே இப்ப வரை சொல்ல தோணல…..அதவிட சொல்ல சிச்சுவேஷனும் அமையல…..இப்ப எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என முடிவெடுத்தாள்…. 

 “நான் உங்கட்ட கொஞ்ச விஷயம் ஓபனா பேசனும்பா…”

“சொல்லு ரியூ “

“என் ட்ரீம்ஸ் பத்தி உங்கட்ட சொல்லனும் விவன்….. கண்டிப்பா அத தெரிஞ்சு வச்சு நீங்க மெடிகல் ரிப்போர்ட்ட மனுப்லேட் செய்றீங்கன்னுலாம் பின்னால நினைக்க மாட்டேன்…. அதுக்காகத்தான நான் சைக்கிக்ட்ட போறப்ப வரமாடேன்றீங்க…” சரியாகவே ஆரம்பித்தாள் விஷயத்தை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.