(Reading time: 16 - 32 minutes)

ரொம்ப தாகமா இருக்கு வாங்களேன் எதாவது ஜீஸ் ஷாப் போய்ட்டு போலாம்..நீங்களும் வீட்டுக்கு தான் போறீங்கனா நா உங்ககூடவே வந்துரேனே..

யோசனையாய் அவளிடம் தலையசைத்துவிட்டு அருகிலிருந்த ஜுஸ் கடையில் சென்று அமர்ந்தனர்..அதிசயமாய் அவள் அமைதியாய் குடிக்க கார்த்திக்கிற்கு தான் பக் பக்கென்று இருந்தது..அவனே பேச்சு கொடுத்தான்..உங்க பொட்டிக் வேலைலா எப்போ ஆரம்பிக்குறீங்க சஹானா??எனக்குலா இன்வைட் உண்டா??

என்ன இப்படி கேட்டுட்டீங்க கார்த்திக் நா பொட்டிக் ஓபன் பண்ணிணா கண்டிப்பா உங்கள சீவ் கெஸ்ட்டாவே கூப்டுருவோம்..

ஏன்ங்க அப்படி சொல்றீங்க த்ரீ மந்த்ஸ்ல ஆரம்பிக்க போறேன்னு தான சொன்னீங்க??இப்போ அதுக்கு மேலேயே ஆய்டுச்சே..

ம்ம் அப்போ சொன்னேன்..பட் இப்போ அதெல்லாம் செட் ஆகும்நு தோணல கார்த்திக்..இப்போ கான்ஸென்ட்ரேஷனே ஒழுங்காயிருக்க மாட்டேங்குது..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

என்னாச்சு சஹானா நீங்க இப்படி பேசி நா பாத்ததேயில்லையே என்னாச்சு..??

பெருசா ஒண்ணுமில்ல கார்த்திக் கல்யாணம் பண்ணி செட்டில் ஆய்டலாமாநு பாக்குறேன்..

ஓ..சூப்பர்ங்க இது கூட பெஸ்ட் தான்..அப்பறம் என்ன சார்ட்ட சொன்னா வேலைய ஆரம்பிச்சுருவாருல..

ம்ம்ம் வேலைலா கம்மிதாங்க..அப்பாக்கு கஷ்டம் தர கூடாதுநு நானே பையன்லா பாத்துட்டேன்..அப்பா ஓ.கே சொன்னா போதும்..

எதுவும் கூற தோன்றவில்லை என்றாலும் கேட்டுதான் ஆக வேண்டுமென்று தட்ஸ் க்ரேட் பையன் என்ன பண்றாரு சஹானா??

 அதுவரை ஜுஸ் அருந்தியபடியே பேசி கொண்டிருந்தவள் சட்டென நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து அப்போ யாரு என்னனு தெரியாம தான் ஒன் மந்த்தா என்ன அவாய்ட் பண்ணீங்களா கார்த்திக்???

ஒரு நொடி இதயதுடிப்பு வேகமாய் இருப்பதாய் உணர்ந்தான்..இந்த நேரடி தாக்குதலை அவன் எதிர்பார்க்கவில்லை..அவளை கண்ட நாள் முதல் தனக்குள் ஓர் அழகான உணர்வு இல்லாமல் இல்லை..ஆனால் காதல் என்று என்றுமே நினைத்ததில்லை..அதுவும் போக கார்த்திக் பொண்ணுங்க விஷயத்துல எக்ஸ்பர்ட்லா கிடையாது ஆனால் ஏனோ சஹானாவின் அந்த துறுதுறுப்பும் அவனையொத்த ரசனையும் அவனுக்கு பிடித்திருந்தது..காலேஜ் நாட்களில் நண்பர்களோடு சைட் அடித்ததுண்டு அதன் பிறகு மீண்டும் இன்று அவளை ஏனோ பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது நிஜம்..இவையனைத்தையும் மீறி தன் குடும்பம் சேகர் என அனைவரையும் நினைத்து தன் மனதை அடக்கி கொண்டதும் நிஜம்..இப்போது தன் முன் இருப்பவள் தன்னிடம் கேட்பதற்கு அவனால் என்ன கூறமுடியும்..??

ஹலோ கார்த்திக் ??

ஹாங்ங் என்ன சொன்னீங்க சஹானா??

தூங்குறவங்கள எழுப்பிரலாம் ஆனா தூங்குற மாறி நடிக்குறவங்கள என்னைக்குமே எழுப்ப முடியாது கார்த்திக்..

ஒன்றும் பேசவில்லை அவன்..

சோ நீங்க பேச மாட்டீங்க..சரி ஓ.கே லெட் மீ கம் டு த பாய்ண்ட்..எனக்கு இந்த பாத்தவுடனே வர லவ்லலா நம்பிக்கை கிடையாது பட் உங்க கூட பழகின இந்த த்ரீ மந்த்ஸ்ல ஏனோ உங்கள நா அட்மையர் பண்ண ஆரம்பிச்சுட்டேன்..நா பசங்களோட பழகாதவ கிடையாது பட் உங்கள பாத்தா வர அந்த பீல் வேற யார்கிட்டேயும் எனக்கு இருந்ததுஇல்ல..எப்போலா நா உங்களவிட்டு தள்ளி இருக்கனும்நு நெனைச்சேனோ அப்போலா அதவிட வேகமா நீங்க மனசளவுல ரொம்ப பக்கமா வந்தீங்க..பட் இந்த ஒன் மந்த் உங்கள பாக்காமயிருக்கும் போதுதான் எனக்குள்ளயிருக்குற அந்த பீல்லோட அர்த்தம் புரிஞ்சுது..வெக்கத்தவிட்டு சொல்றேன் அக்சுவலா எனக்கு  எந்த வெட்கமும் இல்ல..லவ் யு சோ மச் கார்த்திக் வாண்ட் டு லிவ் மை ஹோல் லைவ் இன் யுவர் ஆம்ஸ் அண்ட் வாம்த்..எனக்கு ப்ரபோஸ்லா பண்ண தெரியாது தோணிணத சொல்லிட்டேன்..

அவளையே பார்த்திருந்தவன் சில நிமிட மௌனத்திற்கு பிறகு பேசினான்..சஹானா பர்ஸ்ட் ஆப் ஆல் ஐ அஅம் வெரி சாரி நா உங்கள எந்த விதத்துலயாவது டிஸ்டர்ப் பண்ணிருந்தா..வாண்ட்டட்டா எதுவும் பண்ணல பட் ஏதோ உங்கள இந்த அளவுக்கு யோசிக்க வச்சுருச்சுநு நினைக்கும் போது ஐ பீல் பேட்..என் பேமிலி பேக்ரௌண்டுக்கு இந்த லவ் எல்லா செட் ஆகாது..ஒரு மூத்த மகனா எனக்கு நிறைய கடமைகள் இருக்கு..அதையும் தாண்டி சேகர் சார் என்னோட வெல் விஷர்..அவருக்கு என்னால துரோகம் பண்ண முடியாது உங்களுக்கு புரியும்நு நம்புறேன் ப்ளீஸ் இனி இந்த டாப்பிக் வேண்டாமே..கண்டிப்பா ஒரு நல்ல ப்ரெண்ட்ஸா இருப்போம்..

பேசி முடிச்சுட்டீங்களா நா என் லவ்வ சொன்னேன் நீங்க அதுக்கு என்ன நினைக்குறீங்கநு உங்க தாட்ஸ்ஸ நா கேக்கல அண்ட் என்ன சொன்னீங்க ப்ரெண்ட்ஸா??நண்பர்கள் காதலர்களானா லைவ் வரம்மா இருக்கும் பட் காதலர்கள் நண்பர்களானா வாழ்க்கை சாபமாய்டும் கார்த்திக்..நா உங்ககிட்ட எதிர் பார்க்குறது வரத்தை தான்..அத தர முடிலனா பரவால்ல அட்லீஸ்ட் சாபமாக்காம இருந்தா போதும்..போலாம் என விறுவிறுவென்று வெளியே சென்றுவிட்டாள்..அவன் பில் கட்டிவிட்டு வெளியில் வருவதற்குள் சற்று தூரத்தில் அவள் ஆட்டோவில் ஏறுவது தெரிந்தது..செய்வதறியாமல் நின்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.