வாட் என்ன சொன்னேனா???
ஐ அம் சாரி மிஸ்டர் கார்த்திக்..நா நல்லா யோசிச்சுட்டேன் என் முடிவுல எந்த சேஞ்ச்சும் இல்ல..நீங்க குட் பாய்யா உங்க முடிவ மாத்திக்கோங்க அத தவிர உங்களுக்கு வேற ஆப்ஷனேயில்ல..சரி டைம் ஆச்சு நா கிளம்புறேன்..பை புஜ்ஜுப்பா..என்று கண்ணடித்து சென்றாள்..கார்த்திக்கோ மொத்தமாய் குழம்பி போனான்..நாம என்ன சொன்னோம் இவ என்ன பண்றா..கடவுளே இதெல்லாம் எங்க போய் முடிய போதோ தெரிலயே..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...
படிக்க தவறாதீர்கள்..
இப்படியாய் இருவரும் முரண்பாடாகவே நாட்களை தள்ள அன்று கார்த்திக்கின் கல்லூரிகால நெருங்கிய நண்பர்கள் ஷ்யாம்,கிஷோர் இருவரும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தனர்..அவர்களோடு ஒரு கெட் டு கெதர்க்காக கிளம்பினான்..அந்த காபி ஷாப்பில் அமர்ந்து பல மாத கதைகளை பேசினர்..பின் மூவருடைய திருமண பேச்சு வர கார்த்திக் தயங்கியவாறே சஹானாவை பற்றி கூறினான்..அவர்களுக்கும் கார்த்திக்கை பற்றி தெரியுமென்பதால் சரிடா நீ சொல்றத சொல்லிட்ட அவ கேக்கலனா என்ன பண்ண முடியும்..விடு அவளாவே கொஞ்ச நாள்ல மனச மாத்திட்டு போய்டுவா..-கிஷோர்..
டேய் உருப்படியா ஒரு ஐடியா குடுக்குறியா..நல்ல பொண்ணுணு சொல்ற எந்த விதத்துலயும் செட் ஆகாதுநு சொல்ற இருந்தும் நீ தான் வேணும்னு சொல்றானா உன்ன எவ்ளோ லவ் பண்றாநு அதுலயே தெரிலயா..நாம ரெண்டு பேருக்கும் தான் லவ் செட்டாகல அட்லீஸ்ட் அவனாவது நல்லாயிருக்கட்டுமே என்று ஷ்யாம் சிரிக்க..
தேங்க் யு சோ மச் ப்ரோ..உங்களுக்காவது கொஞ்சமே கொஞ்சமா அறிவு வேல செய்தே..மிஸ்டர் நீங்களும் எனக்கு ப்ரோ முறைதான் இருந்தாலும் எனக்கு ப்பேவரா பேசாததால உங்கள நா மைண்ட்ல வச்சுக்குறேன்..கல்யாணத்துக்கப்பறம் வீட்டுக்கு வாங்க நல்ல காரமா கொழம்பு வச்சு கொல்றேன்..என இருவரையும் பார்த்து பேச அங்கு கார்த்திக்கோ தலைசுற்றாத குறையாக இருந்தான்..
சிஸ் நீங்க தான் அந்த குட்டிசாத்தானா சாரி சஹானாவா??என ஷ்யாம் அவன் பங்கிற்கு பத்த வைக்க..
சோ ஸ்வீட் ஆப் யு கார்த்திக் எனக்கு நிக் நேம்லா வச்சுருக்கீங்களா..நம்ம மனசுக்கு ரொம்ப புடிச்சவங்களுக்கு தான நாம செல்ல பேர்லா வைப்போம்..நைஸ் அப்போ கூடிய சீக்கிரம் உங்க மைண்ட் மாறிடும்..ஓ.கே யு பீப்புள் கேரி ஆன்..பை ப்ரோ என ஷ்யாமிற்கு மட்டும் கூறிவிட்டு கிஷோரை காரமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தாள்..
டேய் என்னடா நடந்துது இங்க??-கிஷோர்..
ஹா ஹா மச்சி சான்ஸேயில்லடா..மை குட்நஸ் இப்படி ஒரு கேரக்டர நா பாத்ததேயில்ல..கண்டிப்பா யு டு வில் மேக் அ ப்யூட்டிபுல் லைவ்டா..யோசிக்காம ஓ.கே சொல்லிடு..-ஷ்யாம்..
கிஷோரும் கார்த்திக்கும் சேர்ந்து ஷ்யாமை ஒரு கை பார்த்தனர்..டேய் டேய் விடுங்கடா ஒரு அப்பாவி தனியா சிக்கினா இப்படியா பண்றறது..சரி கார்த்திக் நீ இங்கதான் இருப்பநு அவளுக்கு எப்படி தெரியும்..
அதான் எங்க வீட்டுல ஒண்ணு இருக்கே ஷரவ் அவளோட ப்ரெண்ட் அவகிட்ட தான் போட்டு வாங்கிருப்பா..என்றான் கடுப்பாய்..
எத்தனை நாட்கள் ஆயினும் சஹானாவின் மனது மாறுவதாயில்லை கார்த்திக்கை தான் தடுமாற வைத்து கொண்டிருந்தாள்..கார்த்திக் முடிந்தவரை அவளை கோபபடுத்த என்னவெல்லாம் உண்டோ அனைத்தையும் செய்து கொண்டிருந்தான்..இதற்கிடையில் அவனே வாய்பிழக்கும் அளவிற்கு ஒன்றை செய்தாள் நம் சஹானா..இரவு மணி 11:45 கார்த்திக் மாடியில் தனதறையில் டாக்யுமெண்ட் ஏதோ பார்த்து கொண்டிருக்க பால்கனியில் ஏதோ உருட்டும் சத்தம் கேட்க,இந்த நேரத்துல என்ன சத்தம் இது பூனை கூட கிடையாதே என யோசனையாய் கதவை திறக்க..அங்கு அவன் கண்ட காட்சியில் ஒரு நொடி மூச்சு விடவும் மறந்துவிட்டான்..பால்கனியின் சுவரில் பல்லி போல ஒட்டிக் கொண்டு ஏறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள் அவனின் குட்டிசாத்தான்..
அவன் அப்படியே நிற்பதை கண்டவள் யோவ் நீ லவ் பண்ணலனா கூட பராவால்ல அதுக்காக இந்த நிலைமைல கூட பிடிச்சு வச்ச பிள்ளையார் மாறி நிக்குறதா வந்து தூக்கி விடுங்க கார்த்திக்..என்று அவள் முடித்த போதுதான் வேகமாய் வந்து கை கொடுத்து தூக்கிவிட்டான்..அவசரமாய் அவளை உள்ளிழுத்து கதவை பூட்டியவன்..அவளை எரிக்கும் பார்வை பார்த்தான்..சஹானா நீ ஏன் இப்படியிருக்க இந்த நேரத்துல தனியா அதுவும் இப்படி யாருக்கும் தெரியாம கொஞ்சமாவது மனசுல பயமிருக்கா??அப்படி என்ன தலை போற காரியம் என பொரிந்து தள்ள..ஷ்ஷ்ஷ் ரிலாக்ஸ் நீங்க இப்படி கத்துறதுலயே எல்லாரும் வந்துருவாங்க வெய்ட் என தன் நைட் பைஜாமாவிலிருந்து ஒரு கிப்ட் பாக்ஸை எடுத்து அவனிடம் கொடுத்தாள்..இத புடிங்க,.
என்னதிது??
பர்ஸ்ட் புடிங்க கார்த்திக்..எதுவும் பேசாதீங்க 5 4 3 2 1 ம்ம்ம் இப்போ குடுங்க..ஹேப்பி பர்த்டே டு மீ ஹேப்பி பர்த்டே டு மீ ஹேப்பி பர்த்டே டு டியர் சஹானா..என மெல்லியதாய் அவள் பாட என்ன கூறவென்று தெரியாமல் பேச்சிழந்திருந்தான் கார்த்திக்..தேங்க்ஸ் பார் யுவர் கிப்ட் கார்த்திக்..ஏனோ உங்ககிட்ட தான் பர்ஸ்ட் விஷ் கேக்கனும்னு தோணிச்சு அதான் வந்தேன்..ஓ.கே பாய்..என அவள் கிளம்ப அவசரமாய் ஹாப்பி ரிடண்ஸ் ஆப் தி டே சஹானா என்றான் மெதுவாய்..கண்களில் அப்படி ஒரு மின்னல் அவளிடத்தில்..பாத்துப்போ..ரீச் ஆய்ட்டு இன்பார்ம் பண்ணு..அழகாய் தலையசைத்து விடைபெற்றாள்..அவனுக்கோ அந்த இரவு தூங்கா இரவாய் அமைந்தது..காலை எழுந்தவுடன் அவளுக்கு வாழ்த்து மெசெஜ் அனுப்பிவிட்டு நா உன்ன பாக்கனும் பேசலாமா??என்று சேர்த்து அனுப்பினான்..ஐ லவ் டு டூ தட் என்று பதில் வந்தது..பைத்தியம் என்று சிரித்து கொண்டே அவளை பார்க்க தயாரானான்..
ஹலோ மக்களே..ப்ரபோசல் எப்படியிருந்தது..ஹீரோ சார் டோட்டல் ப்ளாட் என்ன பண்ண போறாருநு பொறுத்திருந்து பாப்போம்..
தொடரும்
{kunena_discuss:1097}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.