(Reading time: 16 - 32 minutes)

சோர்வாய் வீட்டினுள் நுழைந்தவனை ஹாலிலேயே வரவேற்றார் கீதா..வாப்பா என்ன ரொம்ப டயர்ட்டா இருக்க ரொம்ப வேலையா காபி சாப்டுறியா??

அதெல்லாம் வேண்டாம்மா என்றவாறு தன் பையை அருகிலிருந்த சோபாவில் வைத்து விட்டு தன் தாயின் மடியில் படுத்து கொண்டான்..ஏனோ அவளின் முகமே அவனை சுற்றியது..ரொம்ப ஹார்ஷ்ஷா பேசியிருப்போமோ..என்ன நினைச்சுருப்பா??பாவம் சின்ன பொண்ணுதான எடுத்து சொன்னா புரிஞ்சுருந்துருப்பா..என வாதிட்டு கொண்டிருக்க அங்கு கீதாவோ,டேய் கார்த்தி தெரியுமா உனக்கு இப்போலா அப்பா என்கூட கிச்சன்ல வந்து சின்ன சின்ன ஹெல்ப் பண்றாருடா..என்ன தனியா விடுறதேயில்ல..அவரோட இப்படி மனசுவிட்டு பேசி ரொம்ப வருஷமாச்சுடா..எல்லாத்துக்கும் அந்த சஹானா பொண்ணுதான் காரணம்..நல்ல பொண்ணு இல்லடா??ஏன் அந்த பொண்ணு இப்போலா வரதேயில்லயோ தெரில..என ஆதங்கப்பட சட்டென எழுந்து தன் அறைக்குள் புகுந்து கொண்டான்..

ஒரு வாரம் கழித்து அவளிடமிருந்து அழைப்பு வந்தது..தயக்கத்தோடே எடுத்து பேசினான்..

கார்த்திக் நா உங்கள பாக்கனும்..ஒரு ½ மணி நேரம் எனக்காக வர முடியுமா??

அது வந்து..

பயப்படாதீங்க நா உங்கள கடத்திட்டு போய் கட்டாய கல்யாணம் பண்ற ஐடியாலலா இல்ல நம்பி வரலாம் என அவன் பதில்கூறும்முன் இடத்தை கூறிவிட்டு வைத்துவிட்டாள்..

இவள எப்படி சமாளிக்குறதுன்னே தெரிலயே..என்ன பண்ணபோற கார்த்திக் என்று தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டான்..சில நிமிடங்களில் கிளம்பி வெளியே வந்தவனின் எதிரில் ஷரவந்தி வந்து நின்றாள்..என்ன அண்ணா இன்னைக்கு ஆபீஸ் இல்லையா கேஷ்வல்ஸ்ல கிளம்பீட்ட??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ஆங்ங்ங் அது ஒரு ப்ரெண்ட்ட பாக்க போறேன்டா அதான்..

ஓ,.ஆமா உன்ட்ட கேக்கனும்நு நெனைச்சேன் உனக்கும் KCக்கும் எதாவது சண்டையா??உன் பேச்செடுத்தாலே கடிச்சு கொதறாங்க..

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லயே ஷரவ்..நா அவங்கள பாத்தே ரொம்ப நாள் ஆச்சு..சரி லேட் ஆச்சு கிளம்புறேன்..பை..

அங்கு இவனுக்கு முன் வந்து காத்திருந்தாள் சஹானா..கண்களில் கோபம்,முகமோ கலையிழந்திருந்தது..அதை பார்த்தவனுக்கோ எங்கேயாவது ஓடிவிடலாம் போலிருந்தது..

கார்த்திக் உங்ககிட்ட இத காட்டுறதுக்குதான் கூப்டேன் பாருங்க என்று ஒரு கவரை அவனிடத்தில் கொடுத்தாள்..கேள்வியாய் அதை வாங்கி பிரிக்க உள்ளே இருந்த அத்தனையும் க்ரீட்டிங் கார்ட்ஸ்..அனைத்துமே அவளுக்கு வந்தது..காதல் கடிதங்கள்..அவனுக்கோ தர்ம சங்கடமாயிருந்தது..இதெல்லாம் எதுக்கு என்கிட்ட காட்டுறீங்க சஹானா??

தலையில் அடித்து கொண்டவள் எல்லாம் என் விதி வேற என்ன..உருகி உருகி லவ் லெட்டர் எழுதி பின்னாடி சுத்தினவன் மேலலா வராத இந்த பாழா போன லவ் என்ன பாத்து சிரிக்கவே காசு கேக்குற உங்க மேல வந்துருக்கே..இவனுங்க எல்லாரோட சாபம்தான் இப்போ என்ன இப்படி பாடா படுத்துதுநு நினைக்குறேன்..அவளையே பார்த்திருந்தவனின் கண்களில் சிறு சிரிப்பு..

சிரிக்காதடா என்று ஆள்காட்டி விரலை காட்டி அவள் மிரட்ட அவளின் அந்த ஒருமை அழைப்பு அவனுக்குள் சாரலை பரப்பியது..சாரி..இதோ பாருங்க கார்த்திக் நா எதுக்காகவும் யார்கிட்டேயும் கெஞ்சினதில்ல..அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது..பட் நா இப்போ அதபத்தி கவலபடல..எப்படியாவது கஷ்டபட்டு என் லவ்வ ஏத்துக்கோங்கநு கேக்கலாம்நு தான் வந்தேன்..என்னால முடில ஏன் நா இப்படி ஆய்ட்டேன்னு எனக்கே தெரில..

சஹானா..

யோவ்..ஒழுங்கு மரியாதையா என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணி குழந்தை குட்டிய பெத்துகிட்டு சந்தோஷமா 100 வருஷம் வாழ்ற..அதவிட்டுட்டு கத சொல்ல ஆரம்பிச்ச உன்ன நானே கொன்னுடுவேன் என டேபிளில் இருந்த போர்க்கை எடுத்து அவன் முன் நீட்டினாள்..

எவ்வளவு முயன்றும் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை..சிரித்துவிட்டான்..அவனேயே அவள் கண்கொட்டாமல் பார்க்க சட்டென சூழ்நிலை உணர்ந்து வாயை மூடிக் கொண்டான்..சஹானா ப்ளீஸ் ட்ரை டு அண்டெர்ஸ்டாண்ட்..லவ்ங்கிறதுக்கு நாம சம்மதம் இருந்தா போதும் ஆனா கல்யாணம் ரெண்டு பேமிலி சம்மந்தபட்டது..சேகர் சார் நல்லவர்தான் ஆனா அதுக்காக யாரோ வந்து அவர் பொண்ண கல்யாணம் பண்ணிகிறத அவரால ஏத்துக்க முடியுமா..ஏன் நா ஷரவந்திய அப்படி யாருக்கு வேணா கல்யாணம் பண்ணி வச்சுருவேனா..நீ இன்னும் குழந்தையாவே பேசிட்டு இருக்க.அதனால தான் நா சொல்றத உன்னால புரிஞ்சுக்க முடில..கொஞ்ச நாளைக்கு உன் கான்சென்ட்ரேஷனை வேற எதுலயாவது இன்வால்வ் பண்ணு எதாவது அச்சீவ் பண்ணணும் நினைச்சுக்கோ..அந்த கேப்ல நிதானமா யோசி உன் முடிவு எந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்குநு யோசி அதுக்கப்பறமும் இப்படியேயிருந்தனா மத்தத அப்பறம் பாக்கலாம்..ஹேய் உன்கிட்ட தான் பேசுறேன்..என அவள்முன் சொடுக்கு போட கனவிலிருந்து மீண்டவளாய் ஓ..சாரி என்ன சொன்னீங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.