(Reading time: 15 - 29 minutes)

ரினுள் நுழையும்போதே அருளுக்கு வர்ஷினி அழைத்து தகவல் தெரிவித்திருக்க, அவர்கள் வரும் நேரத்தை தோராயமாக கணக்கிட்டு வெளியே வருவதற்கும், இருவரின் கார்களும் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.

போர்டிகோவினுள் காரை நிறுத்திவிட்டு இறங்கினர் மூவரும். அவர்களைக் கண்டு, “வாங்க வாங்க… பயணம் எல்லாம் எப்படி இருந்தது? சிரமம் ஒன்றும் இல்லையே?” என்று அன்போடு வினவினான் அருள்.

“சேச்சே!!! ஒரு கைக் குழந்தை எதிரிலே வந்தது. அதனிடம் வழி கேட்டு வந்துட்டோம் அண்ணா…” என்றவாரே அருளிடம் வந்தாள் வர்ஷினி. நம்ம வர்ஷினியா! என நீங்கள் கேட்பது புரியுது. ப்ரியாவின் மூலமாக அருளை அடிக்கடி சந்தித்ததால் இருவரும் சகோதர பாசத்துடன் பழக ஆரம்பித்திருந்தனர். அதனால் இலகுவாக அவன் காலை வார முடிந்தது வர்ஷினிக்கு.

“ஹே வாலு… என்னைக்கோ நான் ‘எங்க ஊருலே கைக்குழந்தைக்கு கூட எங்க வீடு தெரியும்னு சொன்னத வைச்சு ஓட்டறியா? போதும்மா… இன்னும் பத்துநாள் இங்கே தான இருக்கப்போற… நிதானமா வெச்சு செய்” என்றவாறு அவள் கையில் இருந்த பையை வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டபின் தான் அவள் பின்னே இருந்த ப்ரனிஷும் யாதவும் அவன் கண்ணில் விழுந்தனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

ப்ரியா யாதவுடனான வர்ஷினியின் புகைப்படத்தைக் காட்டியிருப்பதால் அவனால் சுலபமாக அடையாளம் காண முடிந்தது. ஆனால், யாதவுடன் நின்றிருந்தவனை யாரென்று அறிய முடியவில்லை. ஒரு வகை குழப்பத்துடன் ப்ரனிஷை நோக்கினான் அருள்.

அருள் யாரைப் பார்க்கிறான் என்று திரும்பிய வர்ஷினிக்கு அவன் ப்ரனிஷை புதியவனைப் பார்ப்பதைப் போல காணவும், ‘ப்ரனிஷைப் பற்றி ப்ரியா கூறவில்லையோ?’ என்று எண்ணி, தானே அவர்களது அறிமுகப் படலத்தை துவங்கலாம் என அருளிடம் அறிமுகம் செய்து வைத்தாள். “அருள் அண்ணா… இவர் ப்ரனிஷ் அண்ணா. யாதவோட க்ளோஸ் ஃப்ரெண்ட்” என்று அவள் கூறியதும் அருளின் முகத்தில் இருந்த அந்நியத்தன்மை அகன்றது.

“ஹலோ பில்கேட்ஸ்… எப்படி இருக்கீங்க? நாங்க என்ன புண்ணியம் செய்தோமோ, என் தங்கைக்காக உங்க பொன்னான நேரத்தை ஒதுக்கி வந்துருக்கீங்க” என்று சிரிப்புடன் வரவேற்றான் அருள்.

“அண்ணா… உங்களுக்கு இவரை ஏற்கனவே தெரியுமா?” என்று வர்ஷினி ஆச்சரியமாக கேட்க, ப்ரனிஷோ, ‘டக்குன்னு இந்த கேரெக்டர் பேரு ஞாபகம் வரலயே… யாரா இருக்கும்? வர்ஷினி இவ்வளவு உரிமையா பேசறான்னா… எனக்கு இவனைத் தெரியலை. ஆனா, என்னை ஏதோ பேர் வெச்செல்லாம் கூப்பிடறான்’ என குழப்பத்துடன் பார்த்திருந்தான்.

“ப்ரியா என்னிடம் ஒரு மணிநேரம் பேசினால் அதில் பாதி நேரம் உங்க மூவரைப் பற்றிதானே பேசுவா? தெரியாம எப்படி போகும்” என்று மூவரையும் உள்ளே அழைத்து வந்தவனின் கண்கள் ப்ரனிஷை அளவெடுத்தது.

“சாரி… நீங்க யாருன்னு உடனே நினைவுக்கு வரலை. மன்னிச்சுடுங்க” என மன்னிப்பு கேட்ட ப்ரனிஷைக் கண்டபோது அருளுக்கு மிகவும் பிடித்துபோனது. “இதில் என்ன இருக்கிறது? ஆனா, அடுத்த தடம் இப்படி யோசிச்சா சும்மா இருக்கமாட்டேன்” என சொன்ன அருளைக் கண்டு மென்மையாக சிரித்தான் ப்ரனிஷ்.

இருவருக்குள்ளும் இருந்த அந்நியத்தன்மை விலக, புதியதாக ஒரு நட்பு கிடைத்த மகிழ்ச்சியில் “என்ன மச்சான் இது…. அடுத்த தடவை உங்களை பார்க்கும்போது கிடா வெட்டி விருந்தே வைக்கிறேன்…” என்று உறவாடியபடியே உள்ளே நுழைந்தான் ப்ரனிஷ்.

வீட்டை சுற்றிப் பார்த்து இமைக்க மறந்து நின்றான் அவன். அவ்வளவு கலை நயத்துடன் பழைய கட்டக்கலையில் நவீனத்தைப் புகுத்திக் கட்டப்பட்டிருந்தது அந்த வீடு. அதுவே அதற்கு ஒரு தனித்துவத்தைத் தந்தது.

“மைண்ட்ப்ளோயிங்” என கூறினான், தன்னை மறந்து. “இதுக்கே இப்படியா? உள்ளே வந்து பாரு… இன்னும் அசந்து போயிடுவீங்க” என்று தன் புது நண்பனிடம் சொல்லியபடி, தன்னை அழைத்த வர்ஷினியிடம் திரும்பினான் அருள்.

“அண்ணா… எனக்கு ப்ரியாவை பார்க்கனும். இப்போ போகலாமா? எங்கே இருக்கா?” என தயக்கத்துடன் கேட்டாள் வர்ஷினி.

“என்ன வர்ஷும்மா இது? உன் வீட்டுல இப்படி கேட்டுட்டு இருக்கே? மேலே இரண்டாவது ரூம்தான் ப்ரியாவோடயது. போய் பாரு” என்றான் அருள். உடனே மின்னலென படியேறினாள் வர்ஷினி.

அவளது வேகத்தைக் கண்டு மனமாற சிரித்தனர் மூவரும்… இனி நடக்கப்போவதற்குப் பின் சிரிக்க முடியுமோ என்னவோ??

ப்ரியா…!!!” என்று மெலிதாக விளித்தபடி அந்த அறையின் கதவைத் தட்டினாள் வர்ஷினி. ஓசையில்லை. மீண்டுமொரு முறை தட்டினாள்.

“ப்ரியா… நான் வர்ஷினி வந்துருக்கேன்” என யாரென்று அறியாததால் கதவைத் திறக்கவில்லையோ என நினைத்துக் கூறினாள். அவள் கூற்று சரியே என்பது போல சிறீது நேரத்தில் திறக்கப்பட்டது கதவு.

உடன் உள்ளே நுழைந்த வர்ஷினி, கட்டிலில் சென்று அமர்ந்த தன் தோழியின் முகம் நோக்கி அதிர்ச்சியடைந்தாள். ப்ரியாவின் முகம் கண்டவுடனே அறிந்துகொண்டாள் அழுதிருக்கிறாள் என்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.