(Reading time: 9 - 18 minutes)

ரிம்மா இப்போ இவங்களுக்கு ட்ரீட்மெண்ட்க்கு எத்தனை ஆச்சுன்னு சொல்லு... கட்டிட்டு கிளம்பறேன்...”

“என்னது கிளம்பறீங்களா...இவங்களை கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு அவங்க வீட்டுல இருக்கறவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அப்பறம் எங்க வேணா கிளம்புங்க...”,என்று பாரதி கூற, சுகுணாவிற்கு பக்கென்று ஆகியது....  ஐயோ இப்படி ஒரு விஷயம் நடந்தது தெரிஞ்சா ராஜா நாளைல இருந்து அவரை  ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணி வைத்து விடுவானே என்று...

“இல்லைம்மா அதெல்லாம் வேண்டாம்... எனக்கு ஒரு ஆட்டோ மட்டும் பிடிச்சு கொடுங்க... நான் போய்டுவேன்... வீட்டுல என் பையன் இருக்கான்.... அவனுக்கு போன் பண்ணி சொல்லிடறேன்....”

“இங்க பாரும்மா பணம் கட்டறதோட எங்க வேலை முடிஞ்சுது... இந்தம்மாவை வீட்டுல எல்லாம் விட முடியாது... நீ அடிச்ச அடிக்கு அடுத்து என் பையனை டாக்டர்க்கிட்ட காட்டணும்... அதனால எங்களை ஆளை விடு...”,என்று உரக்கக் கூறிவிட்டு, ‘நல்லா சண்டி ராணி மாதிரி ஒண்ணைப் பெத்து ஊர் மேய விட்டிருக்காங்க’, என்று முனகினார்...

“என்ன சார்... என்னைத் திட்டறீங்களா... நல்லா சத்தமா திட்டுங்க... உங்க பையனை அடிச்சா மாதிரி உங்களை அடிக்க மாட்டேன்... அதுக்குன்னு அப்படியே போய்டுவேன்னு நினைக்காதீங்க... நீங்க பேசறதுக்கும் சேர்த்து உங்க பையனை நல்லா கவனிச்சுட்டு போவேன்....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“அம்மாத் தாயே, ஆளை விடு... மொதல்ல அந்த பில்லைக் கொண்டா... பணத்தைக் கட்டிட்டு நாங்க கிளம்பறோம்.... ரெண்டு பேரும் வீட்டுக்கு வாங்கடா.... உங்களுக்கு இருக்கு...”,என்று கத்தியபடியே பில் செட்டில் செய்ய சென்றார்கள்.

அவர் அகன்றதும் பாரதி சுகுணாவை பார்த்து, “அம்மா உங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு போன் பண்ணி லேட் ஆனதுக்கு காரணம் சொல்லிடுங்கம்மா...”

“இல்லைம்மா எனக்கு ஒரு பையன்தான்... அவன்கிட்ட இப்போ சொன்னா கவலைப்பட்டு அடிச்சு பிடிச்சு இங்க வரேன்னு சொல்லுவான்... அதுதான் ஹாஸ்பிடல்க்குள்ள வந்த உடனேயே கோவில்ல என் தோழியைப் பார்த்தேன்.... பேசிட்டு வர லேட் ஆகும்ன்னு சொல்லிட்டேன்.... அதனால ஒண்ணும் பிரச்சனை இல்லை... ரொம்பத் தேங்க்ஸ்ம்மா... சரியான நேரத்துல வந்து உதவி பண்ணின...”

“அச்சோ  தேங்க்ஸ் எல்லாம் எதுக்கும்மா... நான் இல்லைன்னா வேற யாராவது ஹெல்ப்  பண்ணி இருக்கப் போறாங்க.....”

“அப்படி மத்ததவங்களுக்கு உதவின காலம் எல்லாம் மலையேறிப் போச்சும்மா... இப்போல்லாம் அடுத்த வீட்டுல கொலையே விழுந்தாக் கூட  கதவை சாத்திட்டு டிவி பார்த்துட்டுதான் இருக்காங்க.... உன்னோட பேரு என்னம்மா”

“என் பேரு பாரதிம்மா... சரி நீங்க இந்த வீல்சேர்லையே உக்கார்ந்துட்டு  இருங்க... நான் போய் ஆட்டோ கூட்டிட்டு வந்து உங்களை கூப்பிடறேன்...”

“உனக்குதான் தேவையில்லாம கஷ்டம் கொடுக்கறேன் பாரதி... என்னை ஆட்டோ மட்டும் ஏத்திவிடுமா.... நான் போய்டறேன்....”

“அதெல்லாம் ஒண்ணும் கஷ்டம் இல்லைம்மா... நீங்க இருங்க...”

“பாரதி அப்பறம் ஒரு விஷயம்...  இப்போ நடந்தது எதுவும் என் பையனுக்கு தெரிய வேண்டாம்... நான் கீழ விழுந்து அடிப்பட்டுக்கிட்டேன்னு சொல்லிடறேன்....”

“ஏம்மா சொன்னா என்ன....”

“இல்லைம்மா சொன்னா வீணா டென்ஷன் ஆவான்ம்மா... இப்போதான் எல்லாம் சுமுகமா முடிஞ்சு போச்சே... அதுதான்....”

“ஓ விஷயம் தெரிஞ்சா அந்தப் பசங்களை  அடிக்கக் கிளம்பிடுவாரோ... நீங்க சொல்றது கரெக்ட்தான்ம்மா... எங்கம்மாவை மட்டும் இப்படி யாரானும் இடிச்சு இருக்கணும், அவங்க கை, காலை உடைச்சு குறைஞ்சது ஒரு ஆறு மாசம் படுக்க வச்சிருப்பேன்...”,என்று கூற, சுகுணா அவனா, விஷயம் தெரிஞ்ச அடுத்த நிமிஷம் ஏரியாவை விட்டு காலி பண்ண வச்சிருப்பான் என்று நினைத்தாலும் தன் மகனை விட்டுக்கொடுக்க விரும்பாமல், ‘ஹி ஹி ஆமாம்மா’, என்றார்.

“ஏம்மா ஆட்டோல உக்கார்ந்து வர்றது ஓகேதானே... கார்ல ஏறக் கஷ்டமா இருக்குமேன்னுதான் ஆட்டோ கூட்டிட்டு வர்றேன்னு சொன்னேன்...”

“இல்லைம்மா கஷ்டமா இருக்காது... அப்பறம் நீ என்ன பண்றேம்மா... படிக்கறையா, இல்லை வேலைக்கு எங்கயானும் போகறியா...”

“நான் லா படிச்சுட்டு ஒரு வக்கீல்கிட்ட  ஜூனியரா ப்ராக்டிஸ் பண்றேம்மா...”

“ஓ வக்கீலா... அதுதான் இத்தனை தைரியமா தப்பைத் தட்டிக் கேக்கற....”

“தட்டிக் கேட்க  வக்கீலா இருக்கணும்ன்னு அவசியம் இல்லைமா... அநியாயத்த பொறுக்காத யார் வேணும்னாலும் தைரியமா கேக்கலாம்...”

பாரதி சுகுணாவை அங்கிருந்த அட்டெண்டரிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு,  ஆட்டோ கூட்டி வர சென்றாள். ஆட்டோ வந்தவுடன்  சுகுணாவை அட்டெண்டர் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி சாய்ந்தாற்போல் உட்காரவைத்து காலைத்தூக்கி சீட்டில் வைத்தாள்.  

“இங்க பாருங்கம்மா... நான் இந்த ஆட்டோ பின்னாடியேதான் வர்றேன்... So நீங்க பயப்படாம உக்காருங்க... ஆட்டோ அண்ணா இவங்களுக்கு கால் ரொம்ப ஆடக்கூடாது... அதனால கொஞ்சம் மெதுவாவே வண்டி ஓட்டுங்க... அம்மா உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க...”, பாரதி கேட்க சுகுணா தன் வீட்டு விலாசத்தை கூறினார்.  ஆட்டோ கிளம்பியவுடன்  தன் வண்டியை எடுத்துக்கொண்டு சுகுணாவின் வீடு வரை பின்தொடர்ந்தாள் பாரதி.

சுகுணா தன் வீட்டை நெருங்குவதற்கு சற்று முன்னதாக,  ராஜாவை அழைத்து வெளியில் வந்து நிற்க சொன்னாள்.... வீட்டை நெருங்கி ஆட்டோ நிற்க வாசலிலேயே ராஜா காத்திருந்தான்... ‘ப்பா.... யாருடா இந்த டக்கர் பிகர்’, என்று ராஜாவைப் பார்த்து ஜொள்ளியபடியே வண்டியிலிருந்து இறங்கினாள் பாரதி.

தொடரும்

Episode 03

Episode 05

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.