(Reading time: 11 - 21 minutes)

தானே மிட் நைட் மோகினி நீயாவது தூங்குறதாவது” – இருதயா

விடு பொன்னு பர்த்டே பேபியா போயிட்டா நாளைக்கு வச்சு செய்யலாம்

“ஹேய் ஓவறா மிரட்டாதீங்கபா என் செல்லக்குட்டி பாவம்” என்று ரேஷ்மி ஷெண்பாவின் கைகளை காட்டிக்கொள்ள

“என்னால இந்த கொடுமைலாம் பார்க்க முடியல பொன்னு” என்று மகி இருதயாவின் தோள்களில் முகம் புதைத்தாள்

“செம்பு கம்பி சீக்கிறம் கேக் வெட்டுங்கோ நேக்கு தூக்கம் தூக்கம வருது” என்று வாய்ஸ் விட்ட திவ்யாவை

அடிங்க யாருடி செம்பு கம்பி கால் மீ ஷெண்பா

நூடுல்ஸ்ஸ சுட்டுட்டு போன நோக்கு இந்த மரியாதை போதும்

ஏய் தாயிர் சாதம் ஐ வில் கில் யு டி

அதை அப்பறம் கில்லிக்கொங்க இப்ப வாங்கோ

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அக்க்க்கா

“கத்தாத!!! திவி அவதான் சாரி சொல்லிட்டாள விடுடி” என்று எல்லோரயும் ஒரு வாரு சமாதானம் பண்ணி செம்புவை கேக் வெட்ட வைத்தனர்

தோழிகள் அனைவரும் முதலில் அவளுக்கு ஊட்ட போட்டோக்காக ஒவ்வொருவருக்கும் ஊட்டிவிடுவது போல் போஸ் குடுக்க தொடங்கினாள்  

எக்ஸ்க்யூஸ் மீ கேக்கும் வாய்க்கும் நடுல ஒரு கிலோ மீட்டர் டிஸ்டன்ஸ் இருக்கு – மகதி

பரவால்ல போட்டோ தானே போஸ் மட்டும் குடு

ஒய் ஒழுங்கா ஊட்டுடி

வாங்குன அறை கிலோ கேக் எனக்கே பத்தாது இதுல ஷேரிங்லாம் முடியாது போடி கஞ்சு

ஹி ஹி வாட் ஐ டூ யா ஹாஸ்டல் ஏ‌டி‌எம்ல பணம் இல்ல மோர்னிங் தான் பில் பண்ணுவேணு சொல்லிட்டாங்க அதான் இருந்த கை காசு எல்லாம் போட்டு கேண்டீன்ல ஆர்டர் பண்ணோம்

நாளைக்கு நைட் கலக்கிர்லாம் விடுடா என்று அவளை சமாதானம் பண்ணி எல்லோரும் போட்டோ எடுத்து முடிக்க

ஓகே மக்களே என் கிஃப்ட் எங்க

“கிஃப்ட்டா?????” என்று அனைவரும் கோரசாக கத்த ஒரு நொடி முழித்து பார்வையால் மிரட்டியவளை பதற விடாது அனைவரும் தங்கள் பரிசை அவள் கைகளில் அடுக்க

செம வெயிட்டா இருக்கு

யெஸ் யெஸ் சீக்கிறம் ஓபன் பண்ணு

இப்ப எதுக்கு பொன்னு மோர்னிங் பண்றேன்

“பரவால்ல சீக்கிறம் பண்ணுங்கோ” என்ற திவ்யாவை ஒரு முறை ஏற இறங்க பார்த்தவள்

ஏதோ சரி இல்லயே என்று மகதியின் கிஃப்ட்டை முதலில் எடுத்து பிரித்து பார்த்தவளின் கண்கள் சிமிட்டவும் மறந்து அதிர்ந்தாள்

சரி மகி ஏதோ விளயாடுகிறாள் என்று மற்றவர்கள் குடுத்த கிஃப்டை பிரித்தவளுக்கு மேலும் அதிர்ச்சி

“அடிபாவிங்களா பிரிச்சு பாரு பிரிச்சு பாருனு சொல்லி இப்படி பாக்கெட் பாக்கெட்டா குடுத்து இருக்கீங்களே”

உனக்கு ரொம்ப பிடுச்சது தான்டி குடுத்து இருக்கோம் என்ஜாய் என்ஜாய் – மகி

“யெஸ் யெஸ் செம்பு அந்த நூடுல்ஸ் பாக்கெட் எல்லாம் என் கிஃப்ட்” என்ற திவ்யவை கண்கலாலேயே கடிக்க தொடங்கினால் ஷெண்பா

ஆம் அந்த பரிசு பொருட்கள் அனைத்துமே கடலை மிட்டாய் கோக்கோ மிட்டாய் அச்சு முறுக்கு என்று நிறய திண்பண்டங்களாய் இருந்தது பொதுவாக ஷெண்பா ஊரில் இருந்து கொண்டு வந்து ஹோஸ்டலில் பறிகொடுக்கும் ஸ்நாக்ஸ்

முறைக்காத பாக்க சகிக்கல – இருதயா

மம்மி... என்ன ஏமாதிட்டாங்க- ஷெண்பா

என்ன பிடிக்கலயா அப்ப குடு குடு- மகி

“ஹேய் நோ நோ என்ன இருந்தாலும் பாசமா குடுத்து இருக்கீங்க இட்ஸ் ஓகே நானே வச்சுக்கிறேன்”

சாப்பாட்டு ராமி நீயாவது வேணாம்னு சொல்றதாவது எப்படிடி இப்படி இருக்க - மகி

அதுலாம் ஒரு கலை... நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட - ஷெண்பா 

உண்மையில் அதுவும் ஒரு கலை தானே  எனக்கு இந்த காய் வேண்டாம் நோன்வெஜ் இருந்தாதான் சாப்பிடுவேன் இந்த டிஷ் ஃப்ரை பண்ணனும் இப்படி பல கண்டிஷன்ஸ் போட்டு சாப்பிடும் பிள்ளைகளுக்கு நடுவில் எதயும் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடும் பிள்ளைகள் தனி அழகு தான்

உன்னைய பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா – ரேஷ்மி

தெரியலயேக்கா......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.