(Reading time: 13 - 25 minutes)

தெல்லாம் நீ ஏன் வொரி பண்ணுற டார்லிங்க்… பரந்தாமன் சார்… எதுவும் சொல்லமாட்டார்… உன் ரித்தி எதுக்கு இருக்குறேன்… நீ வா… நான் பார்த்துக்குறேன்…”

அவளின் கையைப் பிடித்து ரித்தி செல்லமாக அழைக்க, அந்த கள்ளமில்லா பேச்சில் புன்னகை உதிக்க,

“போதும் போதும் கொஞ்சினது… கையை விடு….” என்றபடி அவளின் முன்னே நடக்க ஆரம்பித்தாள் சந்தா லேசாக புன்னகைத்தபடி…

ஸ்வேதாவும், ரித்தியும் கதை அளந்து கொண்டே வர, அவ்வப்போது அவர்கள் இருவரையும் திரும்பி பார்த்து கொண்டே வந்தாள் சந்தா….

“பாரு… உங்க அக்கா… திரும்பி திரும்பி பார்க்குறதை…”

“நீ ஏன் சொல்லமாட்ட?... நாம பத்திரமா வரோமான்னு பார்த்துட்டே போறாங்க… அது புரியுதா உனக்கு?...”

“எல்லாம் எங்களுக்கு புரியும்… நீ ரோட்டை பார்த்து நடடி முதல்ல…”

“நீ முத பார்த்து பார்த்து நட ரித்தி கொத்தி….”

“அடிங்க… குரங்கே… நானும் பார்த்துட்டே இருக்குறேன்… காலையில இருந்து என் பேரை கொலை பண்ணிட்டிருக்குற?...”

“நீ மூச்சுக்கு முன்னூறு தடவை என் பேரை கொலை பண்ணுறீயே… அதவிடவா இது?...”

“வேதா குரங்கே… நீ ரொம்ப பண்ணுற… இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை… ஆமா….”

“என்னடி செய்வ?... செய்டி பார்ப்போம்….”

இருவரும் ஒருத்தருக்கொருத்தர் மல்லுக்கு நிற்க போக, யாரோ உற்றுப்பார்ப்பது போல் இருப்பதை கவனித்தவர்கள், யாரென்று திரும்பி பார்க்க,

சந்தா அவர்கள் இருவரையும் முறைத்துவிட்டு, வேகமாக முன்னே சென்று கொண்டிருந்தாள் வேகமாக…

ஓட்டமும் நடையுமாக அவளைப் பின் தொடர்ந்த இருவரும், சென்னையின் பிரதான சாலையில் இருந்த அந்த கட்டிடத்திற்குள் நுழைந்து, அங்கே இருந்தவர்கள் அவர்களையும் கடிகாரத்தினையும் மாறி மாறி பார்த்திட,

“ஹேய்… ரித்தி… அங்க பாரு… அந்த தாத்தா… நம்மளையே பார்க்குறாரு…”

“யாரு… நம்ம என்றும் பதினாறு தான?... அவர் கிடக்காருடி… சோடாபுட்டி… நீ வா….” என்றபடி ரித்தி கெத்தாக உள்ளே நடக்க, அவளை மௌனமாக பின் தொடர்ந்தாள் ஸ்வேதா…

“ஏம்மா… இது தான் ஆஃபீஸுக்கு வர்ற டைமா?... மணி என்ன ஆகுது?....”

“பேங்க் கரெக்டா, பத்து மணிக்கு தான ஆரம்பிக்கும்… நாங்க தான் 9.40 க்கே வந்துட்டோமே… இன்னும் என்ன டைம் பார்த்து வரணும்?...”

“இருபது நிமிஷம் முன்னாடி வர்றது எல்லாம் ஒரு கணக்கா?... ஆயிரம் தான் இருந்தாலும் இந்த யங்க்ஸ்டர்ஸ் எல்லாரும் எங்களை மாதிரி வர முடியாது தான்…”

அவர் காலரை உயர்த்தி விடாத குறையாக சொல்லிவிட்டு இருவரையும் பார்த்திட, ரித்தி அவருக்கு பதில் சொல்லும் முன்,

“ரொம்ப சரியா சொன்னீங்க சார்… ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து, யார் யார் எப்போ வரான்னு பார்த்து வச்சிகிட்டு வாசல்லயே இன்வெஸ்டிகேஷன் பண்ணுற திறமை எல்லாம் எங்களுக்கு வர வாய்ப்பே இல்ல தான்… ஏன்னா பாருங்க… நாங்க வரதே லேட் தானே….”

ஸ்வேதா சிரித்துக்கொண்டே கூற, அவருக்கு முகம் தொங்கி போனது சட்டென்று…

வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு ரித்தி நிற்க,

“ஏய் ரித்தி… இன்னும் என்ன நின்னுட்டிருக்குற… பாரு டைம் வேஸ்ட் ஆகுது… நம்ம திருவேங்கடம் சார் மாதிரி கரெக்டா டைமை மேனேஜ் பண்ணனும்…” என ரித்தியை பார்த்து மிரட்டலுடன் கூறியவள்,

“அப்படித்தான சார்?...” என அவரைப் பார்த்தும் பவ்யமாக கேட்க,

“நேரமாச்சு… உள்ளே போங்க… சீக்கிரம்…” என்றார் அவர் தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே…

அவரிடமிருந்து நகர்ந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்த இருவரும், மாறி மாறி சிரித்துக்கொண்டிருக்க,

அவர்களை நிமிர்ந்து பார்த்தாள் சந்தா…

“சந்தா… சூப்பர் சீனை மிஸ் பண்ணிட்டடி…  உன் தங்கச்சி இப்போ கொடுத்த கவுண்டரை நீ கேட்டிருக்கணுமே… சே… செம போ…”

ரித்தி, ஸ்வேதாவினை புகழ்ந்து தள்ள, சந்தாவின் பார்வை ஸ்வேதாவின் மீது விழுந்தது…

“யார்கிட்ட என்ன பேசின?...” என அவளின் பார்வை கேட்க,

“எல்லாம் நம்ம என்றும் பதினாறு தான்…” என்றாள் ரித்தி அவள் பார்வையின் கேள்வியை உணர்ந்து…

பின் ரித்தியே, நடந்ததை எடுத்து கூற,

“அவளுக்கு தான் அறிவில்லைன்னா, உனக்குமா இல்லை… பெரியவங்க கிட்ட இப்படியா பேசுவாங்க வேதா?...”

சந்தா ஸ்வேதாவை திட்டும் தொனியில் கேட்க,

“ஹேய்… நீ வேற… அந்த என்றும் பதினாறு எப்ப பார்த்தாலும் நம்மளையே குறை சொல்லிட்டிருக்காரு… என்னைக்காவது வசமா கேட்டுடணும்னு நினைச்சிட்டிருந்தேன்… இன்னைக்கு அவரே வாலண்டியரா வந்து மாட்டினாரு… நம்ம வேதா பொண்ணும் கேட்டுட்டா… அவ்வளவுதான்…”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.