“ஹேய்… ரித்தி… என்ன அங்கேயே பார்க்குற?...”
“இல்ல… இன்னும் கொஞ்ச நேரத்துல சந்தா அந்த ரூம் விட்டு வெளியே வரும்போது, அவ முகத்துல சிரிப்பு இருக்குமான்னு நினைச்சு பார்த்தேன்….”
“நீ சொல்லுறது சரிதான் ரித்தி… அக்கா முகம் வெளிய வரும்போது வாடிப்போயிடும்….”
“இந்த பரந்தாமன் தாத்தாக்கு ஒருநாள் இல்ல ஒருநாள் நான் கச்சேரி வைக்கலைன்னா பாரு…”
“இப்போ நீ சிஸ்டம் ஆன் பண்ணி, வேலையைப் பார்க்க ஆரம்பிக்கலைன்னு வை… உனக்கு மங்களம் பாடிடுவார், நம்ம திருவேங்கடம் சார்… அங்க பாரு… அவர் உன்னை தான் பார்க்குறார்… அதுபோக ஆட்களும் வர ஆரம்பிச்சிட்டாங்க… ஒழுங்கா என்ட்ரி போட ஆரம்பி சொல்லிட்டேன்…”
“ஷப்பா… ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்டி…”
“எது ஓவர்?...”
“ஆமா உன் பாய்ஃப்ரெண்டா இருந்துட்டு உன்னை மட்டும் கவனிக்கவேண்டியது தான?... அதென்ன என்னையும் பார்த்துகிட்டு… சே… உன் பாய்ஃப்ரென்ட் ரொம்ப மோசம்ப்பா…”
“உன் மூஞ்சி……”
வேதா அடுத்து அசிங்கமாக திட்டுவதற்குள், தன் சிஸ்டமை ஆன் செய்து, தன் கவுண்டரை திறந்து, வேலையை பார்க்க ஆயத்தமானாள் ரித்தி நமுட்டு சிரிப்புடன்…
“மே ஐ கம் இன் சார்….”
கதவைத் திறந்து உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்டிட்ட, சந்தாவினை உள்ளே வர சொன்னார் பரந்தாமன்…
“வாம்மா… எதுக்கு இங்கயும் அதே பார்மாலிட்டிஸ்?...”
“பார்மாலிட்டிஸ்னு எதுவும் இல்ல சார்….”
“பின்ன வேறென்ன?...”
“அது மரியாதை சார்...”
“அது மனசுல இருந்தா போதும்மா… இப்படி வெளிப்படுத்திட்டே இருக்க வேண்டாம்….”
“இன்னைக்கு பழகுற பழக்கம் தான் நாளைக்கும் தொடரும்… அது எல்லா நேரத்துக்கும் சரிவராது…”
“ம்ம். உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?...” என்றவர்,
அவளிடம் “போன மாச ரிப்போர்டிங்க் ஃபைல் கொஞ்சம் எனக்கு மெயில் பண்ணிடும்மா… அப்புறம், இன்னைக்கு கேஷ் கவுண்டரை நீயே பார்த்துக்கோ…” என்றதும்,
“சரி சார்….” என்றாள் அவள்....
அமைதியாக பதில் சொன்னவளையே ஒரு நிமிடம் நின்று நிதானமாக பார்த்தவர்,
“திருவேங்கட்த்தை கொஞ்சம் வர சொல்லும்மா…” எனவும், சரி என்றபடி வெளியேற போனவளை தடுத்தவர்,
“சாப்பிட்டியாம்மா?....” எனக் கேட்க,
“சாப்பிட்டேன் சார்… நீங்க சாப்பிட்டீங்களா?...” என்றாள் அவளும் பதிலுக்கு…
“சாப்பிட்டேன்மா…” என்றவர்,
“என்ன முடிவு பண்ணியிருக்குறம்மா?...” எனக் கேட்க,
“முடிவு நான் ஏற்கனவே பண்ணிட்டேன் சார்….” என்றாள் அவள் உலர்ந்த வார்த்தைகளுடன்…
“அதை மறுபரிசீலனை கொஞ்சம் செய்யலாமேம்மா…”
“……………”
“கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா…”
“…………….”
“நான் சொல்லுறதுக்காகன்னாலும் கொஞ்சம் யோசியேன்ம்மா…”
அவர் அப்படி சொன்னதும், அவரை சட்டென நிமிர்ந்து பார்த்தாள் அவள்…
அந்த பார்வையின் அர்த்தம் புரிய, அவர் மனம் தளர்ந்து போனார் கொஞ்சம்…
“நான் திருவேங்கடம் சாரை வர சொல்லுறேன் சார்…”
அவள் கதவைத் திறந்து வெளியே செல்ல, அவள் செல்வதையே இமைக்காமல் பார்த்திருந்தார் அவர்…
“கடவுளே… எனக்கு வழி காட்டுப்பா…”
அவர் தன் மனமுருக வேண்டிக்கொள்ள, அங்கே அறையை விட்டு வெளியே வந்த சந்தாவின் முகத்தினை ஆராய்ந்தாள் ரித்தி…
“ஹ்ம்ம்… இன்னைக்கும் என் டார்லிங்க் முகம் வாடிப்போச்சே…. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்?... சகோ… நீங்க எங்க இருக்கீங்க?... சீக்கிரம் வாங்க… மை டார்லிங்க் இஸ் வெயிட்டிங்க் பார் யூ ஒன்லி…”
அவள் தன் மனமார கூற, வேதாவும் அவள் எண்ணத்தினை புரிந்து கொண்டவளாய் கண் மூடி இமைக்க,
“பார்ரா….. இந்த வேதாக்கு கூட புரிஞ்சிட்டு… ஆனா சகோ… உங்களுக்குத்தான் இன்னும் பொறுப்பு வரலை… நீங்க தான் எப்படியாவது, என் டார்லிங்க் மனசை மாத்தி சீக்கிரம் நல்லது நடக்க வழி பண்ணனும்… கடவுளே… அதுக்கு வழிக்காட்டுப்பா…”
அவளும் மனதார கடவுளிடம் பிரார்த்திக்க,
அந்த நேரம் அந்த பெரிய வீட்டில் இருந்த ஓர் அழகான அறைக்குள் நுழைந்து,
“ஹாய் டார்லிங்க்… நான் வந்துட்டேன்….” என கூக்குரலிட்டான் பிரஷன்…..
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்… எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்?...
படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்…
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அதனையும் குறிப்பிடுங்கள்…
மீண்டும் அடுத்த வாரம் பூக்கும் புது எழில் வானில் சந்திக்கலாம்…
நன்றி….
எழில் பூக்கும்...!
{kunena_discuss:1122}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.