(Reading time: 13 - 25 minutes)

ரித்தி ஸ்வேதாவிற்கு சப்போர்ட்டாக கூற,

“ரித்தி சொல்லுறது கரெக்ட் தான் சந்தாக்கா… எப்போ பாரு… அவர் நம்மளையே தான் திட்டுறாரு…”

“ஆமா… நம்மளை திட்டுறதுக்கு அவருக்கு வேண்டுதல் பாரு… லேட்டா வந்தா திட்ட தான செய்வாங்க… பின்ன தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா?...”

சந்தா சற்றே காட்டமாக கேட்க,

“சாரிக்கா… இனி இப்படி பேச மாட்டேன்…. சாரி…” என்றாள் ஸ்வேதா உடனேயே முகம் வாட…

அவளின் முக வாட்டம் பொறுக்காத ரித்தி,

“அடடா… சந்தா… இங்க பாரு… அவ பாய் ஃப்ரெண்டை திட்டிட்டோம்னு பயபுள்ளைக்கு எவ்வளவு பீலிங்க்ஸ்… சே.. புல்லரிக்குது… போ….” என இரு கன்னத்திலும் கைவைத்து சொல்லிக்காட்ட,

சட்டென சந்தாவின் முகத்தில் புன்னகை உதித்த்து…

“திருந்தாத ஜென்மமே…” என அவளின் உதடுகள் உச்சரித்து முடிக்க,

ஸ்வேதா ரித்தியின் மீது ஒரு பைலை எடுத்து அடிக்க,

“வேலையைப் பாருங்கடி…” என்றபடி நகர்ந்த சந்தாவின் காதருகே,

“அடடா…. என் டார்லிங்க்… சிரிக்குறா… சிரிக்குறா… நோட் பண்ணுங்கப்பா… அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்…” என ரித்தி கூற,

மீண்டும் உதித்த புன்னகையுடன் ரித்தியை திரும்பி பார்த்த சந்தாவினை பார்த்து புன்னகைத்தனர் ரித்தியும், ஸ்வேதாவும்…

அப்போது அவர்கள் பணிபுரியும் பேங்க் மேனேஜர் தி கிரேட் பரந்தாமன் அவர்களின் இருக்கைக்கு அருகே வர,

“குட்மார்னிங்க் சார்…” என்றனர் மூவரும் எழுந்து….

“வெரி குட்மார்னிங்க்…. எத்தனை தடவை சொல்லியிருக்குறேன்… இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் வேண்டாம்னு…”

அவர் சற்றே குறைப்பட்டு கூற,

“இது ஃபார்மாலிட்டிஸ் இல்ல சார்… மரியாதைலிட்டிஸ்…..”

ரித்தி சிரிப்புடன் கூற,

“அதானே பார்த்தேன்… என்னடா உன் வாலுத்தனம் இன்னும் ஆரம்பிக்கலையேன்னு… ம்ம்… என்ன இருந்தாலும் நீ என் நண்பன் சொக்கநாதன் பேத்தி ஆச்சே… அவனுக்கு இருக்குற அதே சேட்டை உனக்கும் அப்படியே இருக்குது….”

அவரும் புன்னகை மயமாக சொல்லிவிட்டு அகல,

“அட்டா… மனுஷன் சும்மா இருக்காம சொக்கு பேரை சொல்லிட்டு போயிட்டாரே…!!!!!”

ரித்தி புலம்ப,

“அதுக்கு?...”

ஸ்வேதா கேள்வியாய் கேட்க

“கை பரபரன்னு அரிக்குது… ஒரே ஒரு போன் போட்டு பேசிட்டா சரியாகிடும்… அவ்வளவேதான்….”

ரித்தி கண்களை உருட்டி சந்தாவை பார்த்துக்கொண்டே கூற, சந்தா கண்டும் காணாத மாதிரி அமர்ந்திருக்க,

“திரும்ப மாட்டாளே… போன்னு சொல்லிட்டாளே போதுமே… தீண்ட்த்தகாத பொருள் மாதிரி தொடக்கூடாதுன்னு சொல்லிடுவா…. சே…. இந்த டார்லிங்க் ரொம்ப படுத்துறாப்பா… முடியலை…”

மனதிற்குள் ரித்தி சந்தாவிற்கு அர்ச்சனை செய்ய,

“என்ன ரித்தி… ஏதோ சொல்லுற மாதிரி இருக்கு?....”

எரிகிற தீயில் எண்ணையை ஊற்றினாள் ஸ்வேதா….

“உன் வேலையைப் பாருடி…. பேசாம….”

ரித்தி பல்லைக்கடித்துக்கொண்டே கூற,

“நீ என்ன தான் பல்லைக்கடிச்சாலும், ஆஃபீஸ் டைம் முடியாம நீ போன் எடுக்க முடியாது…. ஹாஹா…..”

வேதா சன்னமாக சிரிக்க, அவளின் டேபிளில் ஒரு பைலை தூக்கி பொத்தென்று வைத்தாள் ரித்தி…

பதிலுக்கு தாக்க இருந்த வேதா, டெலிபோன் ஓசை கேட்டு அமைதியானாள்…

“உன்னை அப்புறம் வச்சிக்கிறேன் இரு….”

“ஹாஹா… டார்லிங்க்… பாரு… உன் தங்கச்சி என்னை வச்சிக்கப் போறாளாம்….”

ரித்தி சந்தாவினை துணைக்கழைத்துக்கொண்டு பேச, அதை கவனித்து தனக்குள்ளேயே புன்னகைத்தவள், லேசான சிரிப்புடன் டெலிபோன் ரிசீவரை எடுக்க,

“சந்தா… கொஞ்சம் உள்ளே வாம்மா…. ஒரு முக்கியமான டீடெயில் பத்தி கேட்கணும்….” என்றார் பரந்தாமன்….

“இதோ வரேன்… சார்….” என்றவள் ரிசீவரை கீழே வைத்துவிட்டு, அவரது அறை நோக்கி செல்ல, இங்கே ரித்தி அவள் போகும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.