(Reading time: 16 - 32 minutes)

மாம்.. ஆனால் நீ கூடத்தான் நான் என்னோட விருப்பத்தை சொல்றதுக்கு முன்னாடி அந்த மாதிரி யோசிச்சது இல்லை.. அப்புறம் ஓகே சொன்னாதானே.. சோ சுராவும் யோசிப்பா .. பாரக்கலாம்..”

“ஹ்ம்ம். நீங்க சொல்றதும் சரிதான்..”

இவர்கள் இருவரும் இங்கே வழக்காடி கொண்டு இருக்க,

அர்ஜுனும், சுராவும் அந்த இடங்களை சுற்றி பார்த்தபடி நடந்து கொண்டு இருந்தனர். அமைதியான அந்த ஊரும், அங்குள்ள மக்களும் மிகவும் கவர்ந்து இழுத்தது.

சற்று நேரத்தில் “அர்ஜுன் .. நாம் இங்கே இன்னிக்கு ஸ்டே பண்ணலாமா?” என்று வினவினாள்.

அவளின் ஆர்வத்தை பார்த்த அர்ஜுன் , அங்குள்ள travel agents இடம் பேசி அன்று இரவு அங்கே தங்கும் விதமாக நான்கு டென்ட் ஏற்பாடு செய்தான்.

பின் இருட்டும் வரை சுற்றி விட்டு, இரவு டெண்டிற்கு வந்து சேர்ந்தனர். ராகுல் நிஷா இருவரும் வர , agents ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கேம்ப் fire சுற்றி அமர்ந்து கொண்டனர்.

கல கலவென்று பேசிக் கொண்டு இருந்த நால்வரில் நிஷா சீக்கிரம் தூங்க செல்ல, ராகுல் சற்று தூரம் நடந்து விட்டு வருவதாக சென்றான்.

அவர்கள் இருவரையும் பார்த்த சுபாவோ

“பாஸ்.. ரெண்டு பேரும் இன்னிக்கு புல்லா கடலை போட்டு முடிச்சுட்டு, இப்போ திரும்பி ட்ரீம்ஸ் காண வேற கிளம்பிட்டாங்க.. ப்ரோ என்னடான்னா தனியா நடக்க கிளம்பிட்டார்.. ச்சே.. ச்சே.. இந்த loves என்றாலே ஒரே தொல்லை பா “ என சலிக்க

அர்ஜுன் அவளை பார்த்து “சுபா... உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா ?”

“ஒண்ணா .. எத்தனை வேணும்னாலும் கேளுங்க பாஸ்.. இதிலே என்ன கஞ்சத்தனம் ?”

“ஹ்ம்ம்.. சரி.. ராகுல் நிஷா லவ் பண்றத பார்த்து உனக்கு என்ன தோணுது?”

“ப்ரோ, நிஷா மட்டுமா, மிதுன் கீமா கூடத்தான் லவ் பண்றாங்க ? இதில் என்ன இருக்கு ?”

“ஒஹ்.. மிதுன் லவ் பண்றது உனக்கு தெரியுமா ?”

“ஹ.. ஹ.. நாங்க எல்லாம் யாரு ? கரண்ட்கே connection கொடுத்த ஆளு?”

“என்ன இது புது மொழி ?”

“கேப்டன் இது எல்லாம் ஒரு flow லே வரது ... அனுபவிங்க.. ஆராயதீங்க.. “

“ஹயோ.. பயங்கரமா இருக்கு “

“போங்க பாஸ்.. ரொம்ப புகழ்றீங்க.. “

“பேச்சை மாத்தாதே.. லவ் பண்றத பத்தி நீ என்ன நினைக்கிற..?”

“அவங்களுக்கு பிடிச்சு இருக்கு பண்றாங்க.. தட்ஸ் ஆல்.”

“சரி.. உனக்கு இது வரைக்கும் யாராவது propose பண்ணி இருக்காங்களா?”

“ஒஹ் .. பண்ணி இருக்காங்களே..?”

திடுக்கிட்ட அர்ஜுன் “யார் “ என்று இதயம் படபடக்க கேட்டான்.

“காலேஜ் first இயர் லே ஒரு பையன் என்னை லவ் பண்றேன்னு சொன்னான்..”

மனதிற்குள் கலவரமடைந்தாலும் வெளியில் காட்டாமல் “நீ என்ன சொன்ன ?”

“நான் மறுநாள் சொல்றேன்னு சொல்லிட்டு, அடுத்தநாள் எங்க அப்பாவ கூட்டிட்டு வந்து இவர்தான் எங்க அப்பா. நான் எதுவானாலும் எங்க அப்பா கிட்ட கேட்டுதான் முடிவெடுப்பேன்.. நீ சொன்னத அவர்கிட்ட சொல்லிட்டேன். இனி நீஆச்சு அவர் ஆச்சு.. அப்படின்னு சொல்லிட்டு நான் கிளாஸ் க்கு போயிட்டேன்..”

“ஐயோ.. அந்த பையன உங்க அப்பா என்ன சொன்னார்?”

“அவர் அவனுக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி விட்டார்.. “

“அதுக்கு அப்புறம் அவன் உனக்கு எந்த தொல்லையும் கொடுக்கலையா?”

“அதுதான் பாஸ் புரியல.. அவன் என்னை பார்த்தாலே விழுந்தடிச்சு ஓட ஆரம்பிச்சுட்டான்..”

“அப்புறம் யார் உங்க அப்பா கிட்டே திருப்பியும் மொக்க வாங்குறதுன்னு ஓடிருப்பான்” என்று முனுமுனுத்தவன்

“இப்போவும் உன்கிட்ட யாராவது propose பண்ணினால் நீ என்ன பண்ணுவ ?”

“ஹ்ம்ம்.. இப்போவும் அப்பா கிட்டே பேச சொல்லுவேன்.. ஆனால் அதுக்கு முன்னாடி எனக்கு அவங்கள பிடிச்சு இருந்தாதான் ? இல்லை என்றால் நானே நோ சொல்லிடுவேன்..”

சுற்றிலும் இருந்த பனி மலைகள் உள்ளுக்குள் குளிரெடுக்க, வெளியே கேம்ப் fire ஆல் கிடைக்கும் வெப்பம் உடலை மிதமான வெப்ப நிலைக்கு மாற்றியது.. இன்று தங்க முடிவு செய்தவுடன் agents இடம் டெண்டிற்கு சொல்லும்போது அழகான பூங்கொத்து ஒன்று வாங்கி வைத்து இருந்தான்.. அதோடு இன்றைக்கு ஊர் சுற்றும்போது அங்கே இருந்த கைவினை பொருட்கள் கடையில் இருந்து அழகான பியர்ல் செட் ஒன்றும் வாங்கி இருந்தான்..

இதை மெதுவாக கையில் எடுத்துக் கொண்டவன்

“தரு “ என்று மென்மையாக அழைக்க,

அவன் குரலில் வழிந்த காதலில் நிமிர்ந்து அர்ஜுனை பார்த்தாள் சுபத்ரா.. இதுவரையில் யாருமே அவளை அந்த மாதிரி கூப்பிட்டது இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.