(Reading time: 16 - 32 minutes)

ல்லை டா.. ஹப்பா.. எதிர்காலத்துலே.. நகை , புடவை என்று காஸ்ட்லி ஆக செலவலிக்காமல் சிம்பிள் ஆ பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுத்து உன் கோபத்தை சமாளிச்சுரலாம் நினைச்சேன்..”

“ஆசை தோசை... அது எல்லாம் அந்த அந்த மூட்க்கு எத்த மாதிரி நாங்க மாத்துவோம்லே..”

கொஞ்ச நேரம் தங்களை பற்றி பேசிக் கொண்டு இருந்தவர்கள்

“அஜூ.. இத்தனை நாள் இல்லமால் நீங்க இப்போ லவ் சொன்னதுக்கு என்ன காரணம்?”

“ஆர்மியில் பெண்கள் சேருவதே குறைவு... அதிலும் எல்லா திறமையும் இருக்கிற உன்னை எக்காரணம் கொண்டும் சலனபடுத்த இஷ்டம் இல்லை.. அதோட ஆர்மி லைப் என்பது நம்ம கையில் இல்லை.. அதை எல்லாம் புரிந்து கொள்ளும் பக்குவம் உனக்கு வர வேண்டும் என்று எண்ணினேன்.. இப்போ இந்த தாக்குதலில் நீ எடுத்துகிட்ட முயற்சி, உன்னோட திறமை எல்லாமே எனக்கு திருப்தியா இருந்தது.. உன்னாலே எந்த ஒரு சூழ்நிலையும் கையாள முடியும்னு நம்பிக்கை வந்துருக்கு. சோ ... இந்த வார் முடிந்த பின் சொல்ல எண்ணி இருந்தேன்.. அதற்கு நல்ல location உம கிடைச்சது. அதான் சொல்லிட்டேன்.. “

அவனின் சிந்தனை, தன்னுடைய லட்சியம் அறிந்து கொண்டு, அவளை பக்குவபடுத்தி இந்த நிலையில் அவன் காதலை சொன்னது அவளுக்கு பிடித்து இருந்தது. தன்னுடைய மகிழ்ச்சியை அவன் தோள் சாய்ந்து வெளிபடுத்தினாள்..

அர்ஜுன் “சரி.. என்னை உனக்கு பிடிச்சதுக்கு என்ன காரணம்?”

“ஹ்ம்ம். நீங்க கேப்டன் பிரபாகரன் மாதிரி stirct ஆபீசர் ஆ இருக்கீங்களே .. அதான்..”

“ஆ... “ என்று அவளை முறைத்தவன் அவளின் பழிப்பில் அடங்கி சிரித்தான்..

“அது என்னவோ தெரியலே.. உங்களை காம்பில் பார்த்தவுடன் எனக்கு தோன்றியது ஆப்பிள் பையன் என்ற வரிகள் தான். அதோடு உங்கள் பேர் கேட்டவுடன் தோன்றிய பெயர் பொருத்தம்.. அன்றைக்கு என் பர்த்டே விஷ் பண்ணியது, என்னுடைய சேட்டைகளை கண்டுபிடித்தது இது எல்லாமே எனக்கு உங்க மேலே ஒரு soft உண்டாக்கியது.. ஆனால் கேம்ப் முடிந்து வீட்டிற்கு  சென்ற பின் உங்களை மிஸ் செய்வது போல் ஒரு பீல் வந்தது.. அந்த நேரமும் நாம் அடிக்கடி மீட் செய்ததால் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை.. இங்கே டெல்லி வந்த பின் உங்களை அடிக்கடி மிஸ் செய்தேன்.. சில சமயங்களில் உங்கள் மெசேஜ் வரவில்லை என்றால் கஷ்டமாக இருக்கும்.. அப்போது கூட பிரிண்ட்ஷிப் தாண்டி யோசிச்சது இல்லை.. இந்த வார் போது தான் இரண்டு மூன்று முறை ரொம்பவும் தவித்தேன்.. அப்போது கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன்.. எல்லா இடத்திலும் எனக்கு உறுதுணையாக இருப்பீங்க என்ற நம்பிக்கை எனக்கு உங்க மேலே இருந்துது.. சோ இப்போ நீங்க கேட்டவுடன் ஓகே சொல்லிட்டேன்..” என்று நீளமாக பேசி முடிக்க,

அர்ஜுன் அவளை அணைத்து விடுவித்தான்..

இவர்கள் பேசிக் கொண்டே இருக்க, உள்ளிருந்து நிஷாவும், வாக்கிங் சென்று இருந்த ராகுலும் வந்தனர்..

“யப்பா.. அப்பரண்டிசுகளா.. நீங்க முடிப்பீங்கன்னு எவ்ளோ நேரமா வெயிட் பண்றது.. நாங்களும் வந்து joint அடிக்கிறோம்..”

“ஹேய்.. யாரு அப்பறண்டிசு... நான் தான் சீனியர் ஆக்கும் “ என்று அர்ஜுன் காலர் ஏற்ற, ராகுலோ “அது லவ் சொன்னது நாங்கதான் சீனியர் “ என்று சண்டையிட, ஒரே கலாட்டாவாக இருந்தது..

பின் ராகுல் “மச்சான் வாழ்த்துக்கள் டா.. சிஸ் உனக்கும் தான்..” என, நிஷாவும் இருவரையும் வாழ்த்தினாள்.

அன்று இரவு முழுதும் அப்படியே பேசிக்கொண்டு தூங்கியவர்கள், மறுநாள் தங்கள் அலுவலகத்திற்கு திரும்பினர்.

அன்று மதியம் அர்ஜுன், சுபத்ரா இருவர் வீட்டில் இருந்தும் ஒரே நேரத்தில் போன் இருவருக்கும் வந்தது.. அதில் சொல்லப்பட்ட செய்தி கேட்டு அதிர்ந்து நின்றார்கள் இருவரும்.

ஹாய், friends.. கதை முடிய போற நேரத்திலே ஒரு வழியா அர்ஜுன் தன் லவ் சொல்லிட்டார்.. சுராவும் பெரிய மனசு பண்ணி அதை அச்செப்ட் பண்ணிட்டா.. இனிமேல் அடுத்த எபிசொட்லே எல்லோரயும் சேர்த்து வைத்து கதை முடித்து விடுவோம்..

உங்க எதிர்பார்ப்பு அளவிற்கு கொடுத்து இருக்கேனா தெரியல.. என்னால் முடிந்த வரை கொடுத்து இருக்கிறேன்.. வேறு எதாவது லிங்க் விட்டு போயிருந்தால் சொல்லுங்க.. final எபிசொட் லே எல்லாத்தையும் கரெக்ட் பண்ணிடாலம்..

உங்க கமெண்ட்ஸ் க்கு waiting

மழை பொழியும்

Episode 32

Episode 34

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.