(Reading time: 16 - 32 minutes)

ரண்டு இரண்டு பேராக நான்கு பேர் ரப்டிங் செய்யும் படியான போட் எடுத்துக் கொண்டார்கள்.

காலை பிரேக்பாஸ்ட் முடித்து கிளம்பியவர்கள் அந்த ரப்டிங் போட்டில் அர்ஜுன் சுறா ஒரு போட்டும் ராகுல் நிஷா மற்றொரு போட்டும்  எடுத்துக் கொண்டனர். லைப் ஜாக்கெட், ஹெல்மெட் எல்லாம் அணிந்து கொண்டார்கள். அவர்களோடு ஒரு ஹெல்பெரும் மற்றொரு படகில் வந்தனர்.

மலையின் ஏற்ற இறக்கங்களோடு பயணிக்கும் இந்த போடிங் நதியின் போக்கிகேற்ப பெடேலிங் செய்வது நால்வருக்கும் மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.

காற்று வேகமாக வீசும்போது படகு மேலேழுவதும் , பின் மெல்ல தணிவதும் இந்த பயணம் அவர்களுக்கு சுகமாக இருந்தது.

ஆற்றின் force அதிர்கரிக்கும் இடங்களில் பெடேலிங் வேகமாக செய்ய, மூச்சு வாங்கியது. ஆனால் நதியின் கரைகளில் வாழும் மக்கள், அவர்களின் வீடுகள் எல்லாம் பார்க்க மிகவும் அழகாக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

நால்வரும் இந்த பயணத்தை மகிழ்ச்சியாக அனுபவித்தனர். மொத்தம் மூன்று மணி நேர பயண தூரம் முடிந்து ஷங் வந்து இறங்கும் போது நான்கு பேருக்கும் மூச்சு வாங்கியது.

சுற்றிலும் பனி படர்ந்த மலைகளும், அதில் அங்கே அங்கே தெரிந்த நகரங்களும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.

ரப்டிங்கில் இவர்கள் முழுதுமாக நனைந்து இருக்க, இவர்களின் உலர்ந்த உடைகள் எல்லாம் அந்த ரப்டிங் ஆபீஸ் மூலம் ஜீப்பில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டு இருந்தது.

இவர்கள் ஆற்றின் கரையில் இருந்து இறங்கி அந்த ஆபீஸ் வந்து சேர்வதற்குள் குளிர் நடுக்க தொடங்கி இருந்தது. இவர்கள் உடை மாற்றிய பின் சூடான மதிய உணவு சாப்பிட்டு அந்த கிராமத்தை சுற்றி பார்த்தனர்.

கிட்ட தட்ட திபெத் அருகில் இருப்பதால் புத்த சமய கலை, வாழ்க்கை எல்லாமே கலந்து இருந்தது அந்த ஊரில்.

சற்று நேரம் நால்வருமாக சுற்றியவர்கள், ராகுல் மெதுவாக அர்ஜுனிடம்

“மச்சான்.. நீ அப்படியே சுபாவோட சைட் சீயங் continue பண்ணு.. நான் அப்படியே எஸ்கேப் ஆகுறேன்..”

அதற்குள் சுபா “அண்ணா.. உங்கள நம்பி நிஷாவ அனுப்பலாமா.? “\

நிஷாவோ “ஹேய்.. டோன்ட் வொர்ரி சுறா... உன்னோட ஆலோசனை படி கைவசம் நிறைய weapons வச்சு இருக்கேன்.. எதாவது எடக்கு மடக்கா பண்ணினா ஆயுதத்தை use பண்ணிடறேன்... “

“அடிபாவி.. நீ என்னோட லவர்.. அது உனக்கு நியாபகம் இருக்கா..? என்னவோ கடத்தல்காரன் மாதிரி பேசிட்டு இருக்க..?”

“ ஹி..ஹி.. நாங்க எல்லாம் வருமுன் காப்போம் பரம்பரையில் வந்தவங்க..” என்று கூற.

“உன்னை.. அப்புறம் கவனிச்சுகிறேன்.. அப்பா ராசா.. முதலே அந்த நந்திய கூட்டிட்டு இடத்தை விட்டு கிளம்பு..”

சுராவோ “யாரு நந்தி..” என்று மீண்டும் சண்டைக்கு வர,

அர்ஜுன் “ஹேய்.. சுறா... அவன் என்னவோ சொல்லிட்டு போறான் விடு.. அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் ப்ரீயா பேசிக்கட்டும்.. நாம பக்கத்துலே ஒரு valley இருக்கு .. அங்கே போயிட்டு வரலாம்..”

“ஏதோ.. நீங்க சொல்றதாலே வரேன் கேப்டன்.. ப்ரோ .. ஜாக்கிரதை.. நிஷா கிட்ட நோ வம்பு தும்பு.. “

“ஆத்தா.. மகமாயி ... கிளம்பு காத்து வரட்டும்” என்றான்.

அர்ஜுனும், சுபாவும் அந்த valley க்கு செல்ல, ராகுல் நிஷா இருவரும் அங்கே அருகில் இருந்த பார்க் ஒன்றிற்கு சென்றார்கள்.

ராகுல் நிஷாவிடம் “ஹேய்.. நிஷு.. நாம மீட் பண்ணி எவ்ளோ நாள் ஆச்சு? கிட்ட தட்ட ஒரு வருஷம் ஆக போகுது.. எப்படி டா இருக்க..?

“நல்லா இருக்கேன் ரகு.. “

“என்னை மிஸ் பண்ணினியா ?”

“ஹ்ம்ம்... நீங்க..?”

“நானும் தான்.. உன்னை இங்கே லடாக்லே பார்த்தவுடன் எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா? பட் இங்கே உள்ள சூழ்நிலை அந்த மொமென்ட் என்ஜாய் கூட பண்ண முடியல.. இப்போதான் எல்லாம் முடிஞ்சு நிம்மதியா இருக்கலாம்நு பார்த்தா , இந்த சுறா நந்தி பண்ற வேலை தாங்க முடியல.. இவள கரெக்ட் பன்றதுக்குள்ளே அர்ஜுன் தலையால தண்ணி குடிக்க வேண்டி இருக்கும் போலே இருக்கே.. செல்லம்.. நீ சமத்துடி.. உன் மாமாவ அலைய விடாம ஓகே சொல்லிட்ட ..” என்று பேசிக் கொண்டே போக,

நிஷாவோ “ஸ்டாப்.. ஸ்டாப்.. இப்போ என்ன சொன்னீங்க.. அர்ஜுன் அண்ணா சுராவ கரெக்ட் பண்ண நினைக்கிரரா..?”

“எஸ்.. நிஷு. அவன் அவகிட்ட ரொம்ப நாளா propose செய்யனும்னு நினைச்சுட்டு இருக்கான்.. ஆனால் அதுக்கு சரியான நேரம் அமையல.. இனிமேல் ஆவது சொல்றனா பார்க்கலாம்..?

“ஒஹ்.. ஆனால் சுறா எப்படி ரியாக்ட் செய்வா தெரியலியே? அவ அப்படி எல்லாம் யோசிச்சுருப்பான்னு தோணலே..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.