(Reading time: 16 - 32 minutes)

வனை நேராக பார்த்தவள், அவன் கண்களின் மொழிகளில் தாக்கு பிடிக்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். இதுவரை யாரிடமும் தோன்றாத உணர்வு இது..

மீண்டும் “தரு .. என்னுடைய வாழ்க்கை துணையாக நீ வரனும்ன்னு ஆசைபடுறேன்.. உனக்கும் அதில் சம்மதமா?” என்று வினவினான்.

சற்று நேரம் அவனையே இமைக்காமல் பார்த்தவள் பின் மெதுவாக “எங்க அம்மா, அப்பாவோட சம்மதம் இருந்தா தான் நான் யோசிப்பேன்..|

“கண்டிப்பா.. நம்ம ரெண்டு பேர் parents சம்மதமும் நமக்கு வேணும் ... ஆனால் உனக்கு சம்மதம் என்றால் தான் நான் அவங்க கிட்ட பேசுவேன்..”

“எனக்கு சம்மதம் இல்லை என்றால் என்ன செய்வீர்கள்.. ?”

“ஹ்ம்ம்.. எனக்கு அதிர்ஷ்டம் இல்லைன்னு விட்டுடுவேன்.. “

“அப்போ நீங்க காதலுக்கு மரியாதை எல்லாம் கொடுத்து போராட எல்லாம் மாட்டீங்களா?”

“கண்டிப்பா போராடுவேன்.. அது நம்ம ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்தாதான்.. உனக்கு விருப்பம் இல்லை னா .. அது உன்னோட விருப்பம்.. எனக்கு எப்படி விரும்ப உரிமை இருக்கோ, அதே மாதிரி உனக்கு மறுக்கவும் உரிமை இருக்கு சுபா. மற்ற எந்த பிரச்சினை என்றாலும் சமாளிப்பேன்..”

அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவள் பின் “ எனக்கு சம்மதம்.. “ என்று கூற, அதே சமயம் பனித்தூறல் இருவர் மேலும் மழையாக பொழிந்தது.

“ஹோய்..” என்று துள்ளி குதித்த அர்ஜுன் அவள் அருகில் வந்து பொக்கேயும் , அவனின் பரிசையும் அவளுக்கு கொடுத்து அவள் கையை பற்றி முத்தமிட்டான்.. அவள் அருகில் அமர்ந்து அவளை அணைத்து அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். சுபாவிற்கு வெளியில் பனியால் சிலிர்க்க, மனமோ அவனின் காதலால் சிலிர்த்தது..

“தரு.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எத்தனை வருடங்களாக உனக்காக காத்து இருக்கிறேன் தெரியுமா ?”

“வருடங்களாகவா ? இப்போ போன வருடம் ட்ரைனிங்கில் தானே என்னை பார்த்தீங்க.. ?”

“ஹ்ம்ம்.. அது பெரிய கதை.. சமயம் வரும்போது நீயே அதை கண்டு பிடிப்பாய்.. ஆனால் உன்னை ட்ரைனிங் காம்பில் பார்த்த போது உள்ளம் துள்ளிக் குதித்தது உண்மைதான்..”

“பார்த்த நாளில் இருந்தா என்னை விரும்புகிறீர்கள்?”

“ஹ்ம்ம்.. “ என்றவன் , அவன் பாகில் இருந்த கிடார் எடுத்து,

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே

எனை மறந்து எந்தன் நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை

காதல் போலே ஏதும் இல்லை

எங்கே எந்தன் இதயம் அன்பே

வந்து சேர்ந்ததா

நந்தவனம் இதோ இங்கே தான்

நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்

நல்லவளே அன்பே உன்னால் தான்

நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்

அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்

முதல் பார்வை நெஞ்சில் என்றும்

உயிர் வாழுமே உயிர் வாழுமே

என்று பாடினான்.. அவனின் பார்வையில் முதல் முதலாக வெட்கம் என்ற ஒன்றை உணர்ந்தாள் சுபத்ரா .

சுபத்ரா அர்ஜுனின் தோள் சாயிந்தபடி “அஜூ .. “ என்று அழைக்க ,

“ஹேய்.. இது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.. அப்படியே கூப்பிடு “

அவனின் தோளில் செல்லமாய் தட்டியவள் “அஜூ.. உங்களுக்கு என்னை ஏன் பிடிச்சுருக்கு?”

“ஹ்ம்ம்.. இந்த செல்ல ராட்சசி அடிக்கிற லூட்டி தான் உன் பக்கம் என்னை பார்க்க வைச்சது.. “

“அப்போ நான் டெய்லி நாலு இன்ச் மேக் அப் போடுறது வேஸ்ட்டா “

“ஐயோ நாலு இன்சா ... அவ்ளோ மேக் up போட்டே நீ சுமார்தான் இருக்க ..இதுலே மேக் அப்பே போடலைனா.. உன்னை யார் பார்க்கிறது ?” என்று வம்பிழுத்தான்..

“யு.. போங்க.. பாஸ்.. “ என்று அவனை தள்ளி விட்டாள்.

“ஹேய்.. நீ ரொம்ப அழகுடா.. ஆனால் நான்தான் சொன்னேனே.. நான் உன்னை first பார்த்தப்ப குட்டி பெண் கிருஷ்ணன் மாதிரிதான் தோணிச்சு.. அதுனாலே உன்னை நினைச்சாலே அழகை விட உன் குறும்புதான் முதல்லே தோணும்.. உன் அழகும் என்னை பிரமிக்க வச்சுருக்கு.. எப்போ என்றால் உன் பர்த்டே.. அன்னிக்கு.. “

“ஒஹ்.. அப்போ அந்த பாட்டு என்னை பார்த்து தான் பாடிநீன்களா?”

“எஸ்.. tubelight.. எனக்கு தெரிஞ்சு அன்னிக்கு எல்லாருக்குமே கொஞ்சம் என் மேலே டவுட் வந்து இருக்கும்.. அதுதான் மத்தவங்க கேட்டப்ப உன் டிரஸ் மயில் டிசைன் இருந்ததால் அந்த பாட்டு பாடினேன்நு சமாளிச்சேன்..”

“பீச்க்கு போனப்போ என்னை சரியான சப்பட்டு ராமி நினைச்சு இருப்பீங்களே?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.