(Reading time: 21 - 41 minutes)

34. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

கார்கில் வெற்றிக்கு பிறகு அர்ஜுன் தன் காதலை சுபத்ராவிடம் சொல்லி அவளின் சம்மதமும் கிடைத்ததில் அர்ஜுன்க்கு மனம் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருந்தது.

என்னதான் தன் காதல் மேல் நம்பிக்கை இருந்தாலும், தனக்கு தோன்றிய அதே உணர்வு சுபாவிற்கும் தோன்றியிருக்க வேண்டுமே என்ற கவலை இருந்தது. அப்படி தோன்றவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே... மற்ற வகையில் சாதாரணமாக இருந்தாலும், சுபாவின் நினைவு வரும்போது சஞ்சலம் ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. இன்றைய சுபாவின் சம்மதத்திற்கு பின் மிகவும் லேசாக இருந்தான்.

அர்ஜுன், ராகுல் இருவரும் லே – கார்கில் சுற்றியே பணியில் இருக்க, சுபாவும், நிஷாவும் லடாகிற்கு திரும்பி இருந்தனர்.

இன்னும் இரண்டு வாரம் இங்கே தங்கியிருந்து அவர்கள் செய்த வேலையின் ஒரு ரிப்போர்ட் கொடுத்து விட்டு, எதிரிகளின் ஊடுருவல் தடுக்கும் நடவடிக்கை முற்றிலும் முடிந்த பின்னர் அவர்களின் பழைய கேம்ப்பிற்கு செல்ல உத்தரவு இருந்தது.

அதன்படி இவர்கள் பணியை மேற்கொண்டு இருக்க, அங்கே அவர்களின் பெற்றோர்கள் வேறு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.

அர்ஜுன்க்கு அன்று மதியம் வந்த போனில் அவனின் தந்தை பேசினார்.

“ஹலோ அர்ஜுன்..”

“ஹாய் பா .. எல்லோரும் எப்படி இருக்கீங்க..?”

“நல்ல இருக்கோம் பா.. இப்போ அங்கே ஒன்னும் பிரச்சினை இல்லையே.. எல்லோரும் safe தானே.. “

“எஸ்.. பா.. ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை.. “

“பைன்.. ஊர்லேர்ந்து தாத்தா .. பாட்டி வந்து இருக்காங்க..”

“ஒஹ்.. அந்த பவர் ஸ்டார் எப்போ சென்னைக்கு வந்து இருக்காரு.. கூடவே .. காஞ்சனா பாட்டி வேற... எதுவும் காரியம் இல்லாம ரெண்டு பாடி சோடா வும் நகராதே..”

“ஆமாம்.. டா.. உங்க தாத்தாக்கு உன் கல்யாணத்த பார்க்கணுமாம்.. உனக்கு பொண்ணு பார்க்க போறேன்னு கிளம்பி வந்து இருக்காங்க..”

பல்லை கடித்த படி “டாடி... அந்த ஓல்ட் man கிட்டே போன் கொடுங்க... “ என,

லைனில் வந்த அவன் தாத்தா.. “டேய்.. யாருடா ஓல்ட் .. இன்னிக்கு ட்ரைன்லே வரும்போது கூட நாலு beautys என்னை பார்த்து சைட் அடிச்சாங்க தெரியுமா? “

“ஹ.. ஹ.. அந்த நாலு பேரும் முதியோர் பென்ஷன் வாங்குரவங்கதானே..” என்று அவன் பதில் கொடுத்தான்..

அவன் பாட்டியோ “ஹா.. ஹா.. அப்படி சொல்லுடா அர்ஜுன் கண்ணா.. உங்க தாத்தாக்கு பெரிய கட்டப்பான்னு நினைப்பு.. இவரையே எல்லோரும் சுத்தி வராங்க ன்னு பீலா விட்டுட்டு திரியராறு..” என்று அவனோடு சேர்ந்து அவரும் வாரினார்.

“ஹோய்.. beauty... நீ என்கிட்டே பேசாதே... நான் இப்போ உங்ககிட்ட கல்யாணம் பண்ணிக்கிறேன்ன்னு சொன்னேனா.. எதுக்கு இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து குட்டைய குழப்பிக்கிட்டு இருக்கீங்க.?”

“நான் ஒன்னும் சொல்லலடா... கண்ணா.. அந்த மனுஷன் தான் ஒரு வாரம் முன்னாடி ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்து , உனக்கு கல்யாணம் பண்ணனும் நு நிக்கிறாரு.. நீ அவர்கிட்டேயே கேளு..”

“தாத்தா... எதாவது கல்யாணத்துக்கு போனோமா, ரெண்டு ஒல்டீஸ் கூட கடலை போட்டோமா, பாட்டிக்கு bp எத்தினோமான்னு இருக்கிறதா விட்டுட்டு... எனக்கு bp எத்துறியே இது நியாயமா..?”

“இல்லபா.. அங்கே என் friend பையன பார்த்தேன்.. உடனே உன் நியாபகம் வந்துச்சு..”

“தாத்த்த்தாஆஅ ... நீ பேசுறதே உனக்கே நல்லா இருக்கா.. ?”

“டேய்.. முழுசா சொல்ல விடுடா.. அந்த பையனுக்கு ஒரு பொண்ணு இருக்கா.. அதாவது என் friend ஓட பேத்தி.. .. அவ ஒரே பொண்ணு... உனக்கு பொருத்தாமா இருப்பா?”

“உங்களுக்கு அந்த கஷ்டம் எல்லாம் வேண்டாம்.. நான் ஏற்கனவே ஒரு பொண்ணு பார்த்துட்டேன்.. சோ.. நீங்க அப்பா, அம்மா கூட நல்ல என்ஜாய் பண்ணுங்க.. “

“டேய் என்னடா. சொல்ற.. நான் சொன்ன பொண்ணு பத்தின details கேளுடா.. அதுக்கு அப்புறம் முடிவு பண்ணு..”

“நோ ஓல்ட் man.. நான் சொன்னா சொன்னது தான்.. “

தாத்தா மேலும் ஏதோ சொல்ல வர, பாட்டி “அவன்தான் பொண்ணு பார்த்திட்டேன்னு சொல்றான் லே.. அப்புறம் என்ன மேலே பேசணும்.. அவன் இஷ்டப்படி தான் எல்லாம் நடக்கணும்..” என்று அவரை தடுத்து விட்டார்..

தாத்தா புலம்பியபடி இருக்க, அர்ஜுனோ “பாட்டி... ஸ்வீட் பாட்டி நீ.. உனக்கு என் கல்யாணத்துக்கு நல்ல பெரிய கரை வச்ச பட்டு புடவை எடுத்து தரேன்.. நீ தாத்தாவ.. இந்த வேலை எல்லாம் பார்க்காம இருக்க வைச்சிடு..” என்று டீல் பேசி கொண்டு இருந்தான்..

அப்போது போனை வாங்கிய அவன் அப்பா “டேய் அர்ஜுன்.. போதும் விளையாட்டு.. நீ நிஜமாதான் சொல்றியா?” என,

அர்ஜுனும் “எஸ் பா.. நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்.. அவளுக்கும் என்னை பிடிச்சு இருக்கு..” என,

“தென் குட்.. யாரு அந்த பொண்ணு ?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.