(Reading time: 21 - 41 minutes)

ல்லைடா பாடி சோடா.. அப்பா நடுவிலே கேட்ட போது கல்யாணம் எல்லாம் ஒரு வருஷம் கழிச்சு தான் என்று சொல்லிட்டேன்.. இப்போ நடுவிலே நான் லவ் பண்றேன்னு சொல்ல ஒரு மாதிரி இருக்கு”

“ஹ்ம்ம்.. நீ சொல்றது சரிதான்... நாங்க உங்க அப்பா கிட்டேயும், எங்க வீட்டிலேயும், மகி வீட்லேயும் சொல்லிட்டோம்... நம்ம வீட்டிலே எல்லாருமே செம ஷார்ப் அதனாலே எங்களை பார்த்தாலே கண்டு பிடிச்சுடுவாங்க.. நீ அங்க இருக்கிறதுனாலே அவங்க ஒருவேளை புரிஜிக்கலையோ .. என்னவோ.. நீ சீக்கிரம் சொல்லிடு” என.

“ஆமாம் டா.. நான் சொல்லிடுறேன்..” என்று வைத்தாள்..

இது விஷயமாக அர்ஜுனிடம் சொல்ல, அவன் இப்போ வேண்டாம்.. நான் சொல்லும்போது சொல்லு என, சுபாவும் சம்மதித்தாள்.

இதன் இடையில் மிதுன் அப்போ அப்போ சில நாட்கள் வெளியூர் சென்று விட, முதலில் எதுவும் கேட்காமல் இருந்த மகி, எங்கே போகிறீர்கள் என்று கேட்க ஆரம்பித்து இருந்தாள்.

சற்று நாட்கள் பொறுத்த மிதுன், பின் ரா சீப் இடம் அனுமதி பெற்று, பின் அவளை தனியாக அழைத்துக் கொண்டு போய் தன் வேலை பற்றி சொன்னான்.

அவன் சொன்னவுடன் சற்று நேரம் அமைதியாய் இருக்கவும். தாங்க முடியாமல்

“மகி.. உன்கிட்ட முதலில் சொல்லல என்று கோபமாடா.. சாரி as பேர் ரூல்ஸ் நாங்க என்னோட  நெருங்கிய சொந்தத்தை தவிர யாருக்கும் சொல்லக் கூடாது... நீ என்னோட பியான்சே என்று permission வாங்கி உன்னிடம் சொல்கிறேன்..”

இப்போதும் அவள் அமைதியாக இருக்க, “ஏய்.. மகி குட்டி.. உனக்கு நான் பார்க்கிற வேலை பிடிக்கலை என்றால் சொல்லு.. நான் கொஞ்சம் டைம் எடுத்து relive ஆகி விடுகிறேன்..” என்று மேலும் கூற,

இப்போ சுயநினைவிற்கு வந்த  மகியோ அவனை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சி தெரிவித்தாள்.

மிதுன் ஆச்சர்யமாக பார்க்க “மிது, நான் ரொம்ப யோசிச்சேன்... நாமளும் வாழ்ந்தோம்ன்னு இருக்க கூடாது .. எதாவது உபயோகமாக இருக்கணும் நு.. இந்த டிரஸ்ட் வந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் satisfaction கிடைச்சது.. இப்போ என்னோட கணவர் நாட்டுக்கு சேவை செய்யறார்... அதுக்கு நான் உறுதுணையா இருக்கேன் என்பது எனக்கு எவ்ளோ பெருமையா இருக்கு தெரியுமா?”

“ரொம்ப சந்தோஷம் மகி.. ஆனால் இது யாருக்கும் தெரியக் கூடாது... “

“எனக்கு தெரிஞ்சா போதும் மிது... மற்றவர்களுக்கு நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே சொல்லிகிறேன்..”

அவளை அணைத்து தட்டாமாலை சுற்றி இறக்கினான் மிதுன்.

வர்கள் ட்ரைனிங் முடிய இன்னும் இரு மாதங்களே இருந்த நிலையில், ஒலிம்பிக் ஆரம்பித்து இருந்தது.

அதில் அர்ஜுன், ராகுல், சுறா, நிஷா நால்வரும் ஆர்மி கேம்ப் மூலமாக பங்கேற்று இருந்தனர்.

அர்ஜுன் 10 மீ air rifle ஷூட்டிங் மென் பிரிவிலும், சுபா அதே போட்டியில் பெண்கள் பிரிவிலும் போட்டியிட்டனர்.

ராகுல் நானூறு மீட்டர் தொடர் ஓட்டத்திலும், நிஷா வோ ஈட்டி எறிதல் பிரிவிலும் சேர்ந்து இருந்தனர்.

முதல் சுற்றுகளில் எல்லாம் சாதரணமாகவே முன்னேறியவர்கள் , காலிறுதி, அரையிறுதி இரண்டிலும் நால்வருமே பயங்கர போட்டியிடையே முன்னேறினர். கால் , அரை இறுதிகளில் முதலில் அடுத்த லேவேல்க்கு தேர்வான பின், அடுத்த ஆட்டங்களில் உலக சாதனைகளை முறியடித்தனர் அர்ஜுன், சுபத்ரா இருவருமே..

நிஷா வோ ஈட்டி எறிதலில் ஆரம்பத்தில் இருந்தே முதலில் தான் இருந்தாள்.. ராகுல் தொடர் ஓட்டத்தில் முன்னேற்றத்தில் இருந்தான்.

ஒலிம்பிக்ஸ் ஒவ்வொரு பிரிவிலும் finals நடக்க ஆரம்பிக்க, இங்கே இந்தியாவே இவர்களை எதிர்பார்த்துக் காத்து இருந்தது..

அர்ஜுன் முதல் சுற்றில் நிதானமாகவே விளையாடியவன், அடுத்த அடுத்த சுற்றுகளில் அதிரடியாக சூட் செய்து தங்கம் வென்றான். அதோடு அவனின் ஷூட்டிங் accuracy உலக சாதனையாகவும் பார்க்கப்பட்டது.

சுபத்ராவோ ஆரம்பத்தில் இருந்து அதிரடி action மன்னி தான்.. அவளின் இந்த வேகமே போட்டியாளர்களின் மத்தியில் ஒரு பீதியை கிளப்பி விட்டு இருந்தது. அவளும் தங்கம் வென்று சாதனையும் புரிந்தாள்.

ராகுல் தொடர் ஓட்டம் final இல் அவனோடு போட்டியிட்ட மற்ற வீரர்களை விட , இரண்டு நொடிகள் தாமதித்து இருந்தாலும், ராகுல் கையில் தீபம் வந்த பின் மின்னல் வேகம் தான். மைக்ரோ வினாடிகளில் முந்தி தங்கம் வென்றான்.

நிஷாவின் பிரிவில் அவள் செய்தது எல்லாம் சாதனையாக பார்க்க பட்டது.. அவளும் தங்கத்தோடு வர,

மொத்தத்தில் நான்கு தங்கம், மற்றும் வெள்ளி, பித்தளை பரிசுகளுடன் இந்திய திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த உற்சாகத்தோடு இவர்கள் வீடு திரும்ப, இப்போது அர்ஜுன்

“சுபா... இந்த முறை நீ உங்கள் வீட்டில் சொல்லிவிடு நம் விஷயத்தை.. நானும் சொல்லி உங்கள் வீட்டிற்கு பெண் கேட்டு வருகிறேன்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.