(Reading time: 21 - 41 minutes)

மாம் ...சுறா.. சீக்கிரம் சொல்லி விடு.. எங்களுக்கு சீக்கிரம் marriage ஆகும்.. “

“அஜூ.. அவங்க கேட்டப்போ வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ எப்படி அவர்களிடம் நாம் கேட்பது..?”

“ஒன்னும் பிரச்சினை இல்லை தரு.. நீ பேசு.. நம் பெற்றோர்கள் நம் சந்தோஷம் முக்கியமாக நினைப்பவர்கள்.. நிச்சயம் மறுக்க மாட்டார்கள்..” என

சுபாவும் சரி என தலை அசைத்தாள்.

இவர்கள் எல்லோரும் ட்ரெயினில் வந்து இறங்க ஒட்டு மொத்தமாக நான்கு குடும்பங்களோடு சேர்த்து வருண், மகிமா, வர்ஷா என அனைவரும் இவர்களை வரவேற்றனர்.

இதில் மீடியா வேறு.. அவர்கள் இவர்களிடம் கேள்விகள் பல கேட்க, பொறுமையாக பதில் சொல்லியவர்கள், மீண்டும் அவர்களை சந்திப்பதாக கூறி விடை பெற்றனர்.

வீட்டிற்கு திரும்பிய பின் அர்ஜுன் மெதுவாக தன் அம்மா, அப்பாவிடம் சுபத்ராவை விரும்புவதை பற்றி கூற,

“ரொம்ப சந்தோஷம் டா.. உன் friends எல்லாம் ஆளுக்கு ஒருத்தர லவ் பண்ணிட்டு இருக்காங்க... எங்கே நீ மட்டும் சாமியார போயடுவியோன்னு யோசிச்சேன்.. நல்ல வேளை அப்படி இல்லாமல் உனக்கு ஏற்ற பொண்ணா, அதே சமயம் உன் வேலை பற்றி புரிஞ்ச பொண்ணு சுபத்ரா.. நிச்சயம் உங்க பேர் பொருத்தத்தை போல், வாழ்க்கையும் பொருத்தமாக இருக்கும்” என்று ஆசீர்வாதம் செய்தனர்.

“ஆமாம்... எங்கே அந்த ஓல்ட் man?” என,

தாத்தாவோ “ஷப்ப.. செலேப்ரடியா இருக்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு.. எத்தனை பான்ஸ். .” என்றபடி உள்ளே வந்தார்.

“யார் தாத்தா அந்த செலேப்ரிட்டி.. ?”

“நான் தாண்டா பேராண்டி..”

“நீங்க என்ன சாதனை செஞ்சீங்க சார்..”

“என் பேரன் தான் ஒலிம்பிக் கோல்ட் மெடல் வின் பண்ணவான்னு சொல்லியே என் வாய் வலிக்குது டா.. பேசமால் ஒரு ப்ளுக்ஸ் போர்டு “தங்கம் வென்ற பேரனை ஈன்ற தன்மான சிங்கமே..” ன்னு வசிட்டா என்னனு யோசிக்கிறேன்..”

அவன் பாட்டியோ “இந்த வயசிலே உங்களுக்கு இத்தனை லொள்ளு ஆகாது .. “ என்றபடி பேரனுக்கு திருஷ்டி சுற்றி போட்டார்...

பிறகு எல்லோரும் அன்று மாலையே சுபாவின் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தனர்.

தே சமயம் சுராவோ வீட்டில் “அம்மா... ஒரு தங்கம் வென்ற மங்கை வந்து இருக்கேன்..ஒரு ஆரத்தி இல்லை.. ஒரு ஸ்பீக்கர் வச்சு தெரு வாசலில் இருந்து பூரண கும்ப மரியாதை இல்லை.. என்ன கொடுமை சுபா இது ?” என்று சீன் போட,

அவளின் லொள்ளு பற்றி அறிந்த எல்லோரும் அவளை துரத்தி அடித்தனர்.

சற்று நேரத்திற்கு பிறகு தன் அம்மா, அப்பாவிடம் பேசியவள்

“அம்மா, அப்பா ... என்னாலே முடிஞ்ச வரை உங்களுக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்துட்டேன்.. இனிமேல் நீங்க அப்போ சொன்ன மாதிரி கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்.. “ என

கிருஷ்ணன்ஒ சிரித்தபடி “எப்படி மாப்பிள்ளை வேண்டும் சுபிம்மா?” என்று வினவினார்.

சற்று தயங்கிவிட்டு “அப்பா.. அது வந்து... “ என்று தயங்கியவள்

 அவரின் “உம்ம.. சொல்லு” என்ற உந்துதலில்

“எனக்கு எங்க கேப்டன் அர்ஜுன் சார் ஆ பிடிச்சு இருக்குப்பா... “ என,

சுராவின் அம்மாவும், அப்பாவும் சிரித்தனர்... சுறா அவர்கள் இருவரையும் பார்த்து முழிக்க,

“குட்டிமா... நீ அங்கிருந்து பேசும்போதெல்லாம் அர்ஜுன் பற்றி அதிகம் பேசும்போதே இதை நாங்கள் எதிர்பார்த்தோம்.. உன்னுடைய மனநிலை தெரிவதர்காகதான் அந்த கல்யாண பேச்சு எடுத்ததே.. அர்ஜுன் பற்றி என்னம்மா குறை.. அதோடு பெண்ணை ஆர்மியில் சேர வைத்து இருக்குறீர்களே என்று எங்களை கேள்வி கெட்டவர்கள் வாய் அடைக்கும் வண்ணம் நாட்டுக்காக சாதிச்சு காமித்து விட்டாய்.. அதோடு உனக்கும் அந்த maturity இருக்கிறது .. பின் என்ன தடை.. நீங்கள் எல்லோரும் சாதிக்க பிறந்தவர்கள்... அதற்கு அர்ஜுன் நிச்சயம் உதவியாக இருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.. உனக்கு பிடித்த அவரோடு உன் கல்யாணம் நடக்கும் .. சரியா?” என்று கேட்டுக் கொண்டு இருக்கும்போதே..

“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்.. உங்கள் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்” என்ற குரல் கேட்க,

எல்லோரும் திரும்பி வாசலை பார்த்தனர். அங்கே அர்ஜுன் குடும்பம் மட்டும் இல்லாது, மிதுன், வருண், மகி, நிஷா எல்லோரும் தங்கள் பெற்றோரோடு இருந்தனர்.

அதன் பின் எல்லோரும் சேர்ந்து பேசிக் கொண்டு இருக்க, சுராவிற்காக ஒரு ஆரம் வாங்க சென்று இருந்த அர்ஜுன் தாத்தா , பாட்டி இருவரும் வந்தனர்.

அவர்களை பார்த்ததும் வருண் முதலில் அடையாளம் கண்டவன்

“ஹலோ சார்.. மீண்டும் எங்களை தொடர்ந்து வந்து விட்டீர்களா...?” என

எல்லோரும் முழிக்க, வருணோ மேலும் “ஆறு வருஷத்துக்கு முன் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் பார்த்து விட்டு, உங்கள் பேரனுக்கு பிடிச்சு இருக்கு என்பதற்காக எங்கள் பின்னாடியே வந்தவர்தானே நீங்கள்.. இப்போ அந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் நிச்சயம் ஆயிடுச்சு... நீங்க கிளம்புங்க.. “ என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.