(Reading time: 21 - 41 minutes)

வள பத்தின details எல்லாம் நெக்ஸ்ட் டைம் நான் நேர்லே வரப்போ சொல்றேன் பா..”

“சரிப்பா.. இரு அம்மா கிட்டே தரேன்..”

“அம்மா.. சொல்லும்மா.. “ என,

“டேய் .. என்னடா.. உன்னை சாக்கா வச்சு நானும் நாலு பொண்ணு பார்த்துட்டு வர போகும்போது, வாங்கி வச்ச புது டிசைன் நகை, புடவை எல்லாம் கட்டிக்கிட்டு பிலிம் காட்டலாம் ன்னு நினைச்சேன்.. இப்படி என் நினைப்பிலே எண்டு கார்டு போட்டுட்டியே... இது நியாயமா டா?” என்று புலம்ப,

“அமம்ம்ம்மா ... பையன் தனியா பார்டர் லே கஷ்டபடுரானே, சாப்பட்டுக்கு என்ன பன்னரானொன்னு புலம்பாம, புடவை நகை ன்னு புலம்பிகிட்டு இருக்கீங்க.. யு டூ bad மம்மி.. “

“அட போடா.. நீ வீட்டுக்கு வந்தாலும் அந்த காஞ்சு போன ரொட்டி தான் வேணும்ப.. அந்த கொடூரத்தை என்னை விட உங்க மிலிடரி மாஸ்டர்ஸ் நல்ல போடுவாங்க.. நீ அதை தின்னு உடம்பை தேத்திடுவ .. அதனாலே மீ டோன்ட் வொர்ரி... ஐ அம வெரி ஹாப்பி..” என்று அவர் பதில் காலை வாரினார்.

இதே போல் மேலும் பேசிவிட்டு வைத்தவன், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.. என்னதான் அவன் அம்மா அவனை கலாயித்தாலும், இது தாத்தாவை வெறுப்பு ஏற்றியதற்கு பதில் என்று அவனுக்கு தெரியும்.. மற்றபடி அவனின் விருப்பமே எல்லாருக்கும் பெரிது என்பதும் தெரியும்.

மனதுக்குள் நல்ல வேளை முதலிலேயே எங்கிட்ட பேசிட்டாங்க.. அந்த பொண்ணு வீட்டிலே பேசி அதுக்கு அப்புறம் நான் மாட்டேன்னு சொல்லிருந்தா எல்லாருக்கும் எதனை கஷ்டம்.. என்று எண்ணிக் கொண்டான்..

கிட்டத்தட்ட அதே வேளையில் சுராவின் அப்பா அவளுக்கு போன் செய்தார்.

அவளின் நலம் விசாரித்தவர், அவளிடம் போர் பற்றி கேட்க, கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நிமிசம் அதை பற்றியே பேசிக் கொண்டு இருந்தாள்.

அப்போது அவள் அம்மா அவரிடம் “என்னங்க.. அவள விட்டால் இன்னிக்கு நாள் முழுக்க இதை பத்திதான் பேசுவா .. நீங்க முதல்லே விஷயத்தை பேசுங்க..” என்று இடையிட,

“வாட் மேட்டர் டாடி... ருக்கு.. ருக்கு .. ரொம்ப டென்ஷனா இருக்கிற மாதிரி இருக்கு?”

“ஒன்னும் இல்லைடா சுபி.. லாஸ்ட் வீக் ஒரு சொந்தக்காரங்க கல்யாணம் போயிருந்தோம்.. அங்கே உங்க தாத்தாவோட friend ஒருத்தர் பார்த்துட்டு நம்மள பத்தி விசாரிச்சாங்க.. உன்னை பத்தி தெரிஞ்சதும் உன்னை அவர் பேரனுக்கு பொண்ணு கேட்கறாங்க.. டா ... “

“whatttt.. நோ டாடி.. இப்போ நோ கல்யாணம்... இன்னும் ஒரு வருஷம் கழிச்சு தான் இதை பத்தி பேசணும் சொல்லிட்டேன்..”

சுபாவின் அம்மா “ ஹேய்.. ஏண்டி சோலா பூரி மாதிரி பொரிஞ்சிக்கிட்டு இருக்க... அவங்க பேரன் பத்தி சொன்னது எங்களுக்கு பிடிச்சு இருக்கு... நீயும் விவரம் கேளு.. உனக்கு பிடிச்சு இருந்தா மேற்கொண்டு பேசி, கல்யாணத்தை வேணா அடுத்த வருஷம் வசிக்கலாம்..” என,

“ஹோய்.. மாதாஜி.. என்னை சோலா பூரின்னு சொல்லிட்டா , நான் சம்மதிசுருவேனா... எனக்கு பிடிச்ச ஸ்வீட்ஸ் கொடுத்தாலும் என் முடிவு இதுதான்.. இன்னும் ஒருவருஷத்துக்கு இதை பத்தி பேசக் கூடாது .. சொல்லிட்டேன்..” என்று வைத்து விட்டாள்.

அங்கே அவள் அம்மா .. அப்பாவிடம் “எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்... பேசிட்டு இருக்கும்போதே வைக்கிறா.. இப்போ நாம அவங்களுக்கு என்ன பதில் சொல்றது ?” என்று அங்கலாய்த்தார்.

நல்ல வேளையாக அர்ஜுன் தாத்தா மட்டுமே இவர்களோடு தொடர்பில் இருந்ததால் அவர் தன் பேரன் இப்போதைக்கு கல்யாணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டதாக முடித்தார்.. அல்லது கெட்ட வேளையோ ?

நாட்கள் காதலர்களுக்கு மெதுவாகவும், மற்றவர்களுக்கு சாதாரணமாகவும் நகர்ந்தது.  சுறா மீண்டும் டெல்லி திரும்பி JCB கோச்சில் சேர்ந்து கொண்டாள். நிஷாவோ மும்பை சென்று தன்னுடைய CSD வேலை தொடரந்தாள்.

அர்ஜுன், ராகுல் இருவரும் தங்கள் இணைகளோடு போனிலே காதல் வளர்த்துக் கொண்டு இருந்தனர். இவர்கள் காதலை BSNL வளர்க்க, மற்ற இரு ஜோடிகள் நேரில் வளர்த்துக் கொண்டு இருந்தனர்.

மிதுன் மகிமாவிடம் காதல் சொல்லி அதற்கு சம்மதமும் வாங்கிய பின் அவனுக்கான கெடுபிடி அதிகமாக இருந்தது. இப்பொழுது எல்லாம் மகிமா டிரஸ்ட்க்கு வரும்போதும் வருணும் வந்தான்.. அவன் உடன் வருவதால் மகிமா மிதுனிடம் அதிகமாக பேச மாட்டாள். வேலை தவிர வெளியே போக எல்லாம் தடா தான்..

பொருத்து பார்த்த மிதுன் தன் தங்கையிடம் சொல்லி புலம்ப, அவள் கொடுத்த ஐடியா தான் வருண் வரும் வேளையில் அவனை யோகா சென்டர்க்கு அனுப்பும் திட்டம்.. ஆனால் அதை நன்றாக பயன்படுத்தியவன் , கிடைக்கும் நேரம் எல்லாம் வர்ஷாவிடம் கடலை போட்டான்.

வர்ஷா தன் அண்ணனிடம் சொல்லி விடுவதாக மிரட்டவும்,

வருணோ “நோ ப்ரோப்லேம் வர்ஷு குட்டி.. உங்க அண்ணா கிட்டே நான் பேசிக்கிறேன்..” என ,

வர்ஷா ச்சே.. என்று காலை உதைத்துக் கொண்டு போனாள்.

மகிமா தன் சொந்தத்தில் ஒரு திருமணத்திற்கு சென்று இருக்க , மிதுன் அன்று வெளி வேலை எல்லாம் முடித்துக் கொண்டு மாலையில் டிரஸ்ட் ஆபீஸ் வந்தான்.

அப்போது அங்கே வருண், வர்ஷா மட்டுமே இருக்க, வர்ஷா அந்த வார வேலை முடித்து, அடுத்த வாரத்திற்கான திட்டமிடல் எல்லாம் வாங்கிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.