(Reading time: 21 - 41 minutes)

வேலையின் நடுவே வருண் “பாஸ்.. நான் உங்ககிட்டே பேசணுமே.. “ என

“சொல்லு வருண்..”

“கொஞ்ச நாளுக்கு முன்னாடி நான் உங்ககிட்டே ஒன்னு சொன்னேன் தெரியுமா ?” என

“என்ன ?”

“அதான் உங்க லவ்க்கு நான் சப்போர்ட் பண்ணப்போ, எனக்கும் உங்க கிட்டே ஒரு காரியம் ஆகணும்நு சொன்னேனே?”

“ஆமாம்.. நியாபகம் இருக்கு.. இப்போ நீ யாரையும் லவ் பண்றியா? டிப்ஸ் எதுவும் வேணுமா?” என கேட்க,

வர்ஷா அதுவரை அவர்கள் ஏதோ பேசுகிறார்கள் என்று எண்ணி இருந்தவள், இந்த பேச்சில் திடுக்கிட்டு முழித்தாள்.

அவஸ்தையாய் வருண் ஐ பார்க்க, அவனோ மெலிதாக கண்ணடித்து

“பாஸ்.. நான் லவ் பண்ற பொண்ணு கிட்டே propose பண்ணிட்டேன்.. ஆனால் reply தான் வரல.. எப்படி கண்டுபிடிக்கிறது?”

“ஹ்ம்ம்.. உனக்கு என்ன தோணுது.. positive or நெகடிவ்?”

“கண்டிப்பா positive தான் ... ஆனால் அதை அவ வாய்லேர்ந்து வரவழைக்க ஒரு ஐடியா சொல்லுங்களேன்?”

மிதுனோ “பேசாமல் அவ வீட்டிலே யார்கிட்டயாவது நேரடியா பேசிடு “

இப்போது இருவரும் திரு திருவென முழித்தனர்... பின் சற்று சுதாரித்த வருண்,

“பாஸ்.. ஐடியா நல்லாத்தான் இருக்கு.. பட் முடிவிலே என்னை வச்சு செஞ்சிர மாட்டாங்களே ?”

“ஹேய். உனக்கு என்ன man.. இப்போவே campus லே செலக்ட் ஆயிட்டே.. போதா குறைக்கு நல்ல சோசியல் ரேச்போன்சிபிளிட்டி உம இருக்கு.. அப்புறம் என்ன .. ?”

“பாஸ்.. அப்போ நீங்களே recomend பண்ணுங்களேன் “

“ஹ்ம்ம்.. பொண்ணு யாரு சொல்லு?”

மேஜையை விட்டு எழுந்த படி “சொன்னா என்னை அடிக்க வரக் கூடாது.. அதோட கண்ணா பின்னான்னு திட்டாம , செல்லமா திட்டிட்டு விட்டுடடனும்.. ப்ரோமிஸ்” என்றவன்,

“உங்க தங்கச்சி ... வர்ஷா தான் பாஸ் என்னோட லவர் “ என்று முடித்தான்.

அவன் சொன்னதை கேட்ட மிதுன் திடுக்கிட்டு முழித்து, தன் தங்கையை பார்க்க

வர்ஷாவோ “அண்ணா.. என்னை அப்படி பார்க்காத அண்ணா.. அந்த லூசே தான் அப்படி உளறிட்டு இருக்கு.. நான் எதுவுமே சொல்லல.” என்று பயந்தாள்.

“ஹேய்.. யாரு டி லூசு..?”

“நீதாண்டா லூசு.. நான் உன்கிட்ட எதுவுமே சொல்லலல.. அப்போ ஏன் எங்க அண்ணா கிட்ட சொன்னே..?’

“நான் ஒன்னும் உன் அண்ணன் கிட்டே பேசல... என் friend மிதுன் கிட்டதான் பேசுறேன்.. என்ன மச்சான் அப்படி தானே.”

“போடா... என்னை வச்சு.. நீ காமெடி பண்ணிட்டு இருக்க... ச்சே.. மிதுன் இந்த அவமானம் உனக்கு தேவையா? “ என்று கூற,

சற்று நேரம் கல கலப்பாக இருந்தது.

பின் வர்ஷவிடம் “நல்ல சாய்ஸ் மா வருண்.. அவன் ரெண்டு friends எப்படி கேர் எடுத்துக்குவான் தெரியுமா? நிச்சயம் அந்த மாதிரி உன்னையும் நல்லா பார்த்துப்பான் என்ற நம்பிக்கை இருக்கு ..”

அவன் சொன்னவுடன் வருண் மிதுனின் அருகில் சென்று “தேங்க்ஸ் மச்சான்... நீங்க என் மேலே வச்சு இருக்கிற நம்பிக்கைய நிச்சயம் காப்பத்துவேன்... “

“எல்லாம் சரிதான்.. வர்ஷா படிப்பு முடியும் வரை அவள disturb பண்ணக் கூடாது.. ஓகே வா?”

“டன்.. அவ UG முடியற வரை தொந்தரவு பண்ண மாட்டேன்.. அம்மா தாயே.. அதுக்காக.. அரியர்ஸ் வச்சு வருஷத்த ஒட்டாதே.. மீ பாவம்“ என்று கை கூப்ப, மூவரும் சிரித்தனர்.

பிறகு இந்த விஷயங்கள் அர்ஜுன், ராகுல், சுறா, நிஷா எல்லோருக்கும் தெரியபடுத்த

சுராவோ “டேய் ..வருண் நீயாடா அது.. இந்த பூனையும் மில்க் குடிக்குமான்னு இருந்துட்டு இப்போ பெப்சி, கோலா நு கிளப்பரீயே. நீதானா அந்த எலி..?” என்று பாட்டு பாட,

 வருணோ கொஞ்சம் கூட அலட்டலே இல்லாமல் “யா .. யா இட்ஸ் மீ.. “ என்றவன், “அப்புறம் நீங்க மட்டும் தான் உங்க கேப்டன் பிரபாரன் கூட சேர்ந்து

“காதல் வெண்ணிலா கையில் சேருமோ சொல்லு பூங்காற்றே ..

 அப்படின்னு டான்ஸ் ஆடுவீங்களோ... நாங்களும் தான்

“ ஒரு மணி அடித்தால் கண்ணே உன் நியாபகம்” ன்னு பாட்டு பாடுவோம்..

“அடப்பாவி.. போயும் போயும் எனக்கு அந்த சாங் போட்டு இருக்கேயே.. ஏதாவது ARR சாங் போட்டு இருக்கக் கூடாது.. “

“என்னமா பண்றது.. ARR கேப்டன் க்கு மியூசிக் போடலியேமா” என்று சிவாஜி குரலில் கலாயிக்க, conference call இல் கேட்டு இருந்த அர்ஜுன் ஒ

“ஹோய் .. சுறா.. என்ன என்னை ஒட்டுரீங்கலோ? உனக்கு எல்லாம் பாட்டே அதிகம்.. அதிலே ARR சாங் வேற... சுப்.. “ மிரட்ட என்று தங்கள் பொழுதை போக்கினர்.

பின் வருண் சுராவிற்கு தனியாக போன் பண்ணி

“ஹேய்.. சுபா... நீ அர்ஜுன் மேட்டர் அப்பா கிட்ட சொல்லிட்டியா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.