(Reading time: 12 - 24 minutes)

டம்:தமிழ்நாடு

அதனால்தான் சொல்கிறேன்? இம்மாதிரி மறுபடியும் செய்யாதே! என்று கொஞ்சம் கடினமாக பேசிக்கொண்டிருந்தான் தூயவன்.

என்ன அண்ணா? ஏன் அவினியை திட்டிகிட்டிருக்கீங்க?என்று கேட்டான் இளங்கவி.

(அவனின் கேள்வியை ஆதியாகிய என்னைத்தவிர யாரும் செவி கொடுக்கவில்லை என்பதுதான் பரிதாபம்!)

அண்ணா!என் மேல ஒன்னும் தப்பில்லை.அவன்தான் அப்படி லூசுமாதிரி பேசுனான்,அதப் பார்த்துக்கொண்டு நான் அமைதியா போவனுமா? அதனாலதான் கொஞ்சமே கொஞ்சம் கை பேசினேன்.இதுக்குப் போய் இப்படிக் கோபப்படுறீங்க? என்று அவினி கூறுவதை சரியாகக் கேட்காமல்,இளங்கவி தூயவனிடம் அவினிக்காகப் பரிந்துப் பேச தயாரானான்.

அண்ணா!கைப்பேசியில் பேசுவது தப்பா? என்று கூற ஆரம்பிக்கும் பொழுதே,தூயவன் முறைக்க, உடனே இளங்கவி,எனக்கு புரியுதண்ணா வேலை செய்யும் பொழுது தேவையில்லாமல் கைப்பேசிக் கொண்டு பேசக் கூடாதுதான்,அதற்காக இவ்வளவு கடுமை காட்ட வேண்டாமே! என்று, முன்பு ஒருநாள் இதமாதிரி நடந்திருந்ததை நினைவு கூர்ந்து அவன் பேச, தூயவன் தலையில் அடித்துக் கொண்டான்.

கவி,ஏன்டா! இப்படி இருக்க? இவ கைப்பேசியில பேசல,கையால பேசிட்டு வந்து இருக்காடா!

கவி அதிர்ந்துப்போய் வினியை நோக்க,அவள் நல்லப்பிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு தலையாட்டினாள்.

என்னாச்சுனா?என்று மறுபடியும் கேட்டான் இளங்கவி.

எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருந்ததால இவள அலுவகத்தப் பார்த்துக்கச் சொல்லி போயிருந்தேன்,அந்த நேரம் பார்த்து அந்த வனிதாப்பெண்ணோட உறவினன் சொல்லிட்டு, இங்க ஒருத்தன் வந்து சத்தம் போட்டிருக்கான்.அப்ப இவ பொறுமையா பேசி அனுப்பி இருக்கனும், இல்ல உனக்கோ எனக்கோ தகவல் சொல்லியிருக்கனும்,அதவிட்டு அவன்கூட நல்லா சண்டைப் போட்டு அடிக்கவும் செய்திருக்கா! சொல்லு.என்னதான் இவ மேல தப்பு இல்லாட்டியும்,இடம் பொருள் எல்லாம் இருக்கில்ல, என்று தூயவன் நடந்தவற்றைக் கூறினான்.

ஆதியைப் போல் உள்ளுக்குள் மகிழ்ந்த கவி, அதை வெளியில் காட்டாமல் தங்கையை கண்டிப்பது போல், இனிமேல் இப்படி எல்லாம் செய்யாத வினிமா. அண்ணா சொல்லறத ஒழுங்காக கேள்! என்று சைகைகாட்டி கண்டித்த மாதிரி நடித்தான்.அவினியும் சரி என்று நல்லாய் தலையாட்டினாள்.

இருவரையும் பார்த்த தூயவன்,அவர்களின் காதைப்பிடித்து இழுக்கும் பொழுது, வந்தனர் அவிராவும் தயாநிதாவும்.

அவர்கள் இருவரையும் பார்த்த மூவரும் தங்களின் செயல்களைவிட்டுவிட்டு, அவர்கள் சென்ற வேலை வெற்றியா? என்று விசாரித்தனர்.

அவிராவும் தயாநிதாவும் எந்த வேலைக்காக சென்றனர்?

சரி,வாங்கப்பா! எங்க அப்படினு கேட்கிறீர்களா?என்னை நம்பி வாங்கப்பா.நான் என்னோட பாஸ் மாதிரி பாதியில கண்டுக்காமல் எல்லாம் போகமாட்டேன்.வழியிலப் பசிச்சுதுனா,எதாவது மரத்துல இருந்து பழம் பறிச்சி தருகிறேன்.என்னால முடிந்தது இவ்வளவுதான்!உங்களுக்கு நிறையக் கொடுக்கத்தான் ஆசை!என் நிதி நிலவரம் உங்களுக்குத் தெரியுமே!

இனிமேல் வரும் இடங்களில் பல மொழிகள் வருவதாலும்,உங்களுக்கு ஹிந்தி தெரிந்திருந்தாலும்,எனக்கு கால்குறையாகத்தான் பேசவரும் என்னும் ஒரே காரணத்திற்காக,அனைத்தையும் தமிழிலே தரும்படி ஆசிரியரிடம்(அவருக்கும் தெரியாது! நான் சொன்னதாக யாரிடமும் சொல்ல வேண்டாம்) கேட்டுக்கொண்டிருக்கிறேன்.எனக்காகப் பொருத்துக்கொள்ளும்!

டம்:பங்களாதேஷ் அல்லது வங்க தேசம்

ஹே! புல்புல்.., புல்புல்...புல்புல்

எங்க இருக்கடி..கழுதை வாடி...எங்கடி இருக்க...

காற்றைக் கிழித்துக் கொண்டு வந்த குரலில் தூக்கிவாரிப்போட ஓடினாள், பதினோரு வயதே நிரம்பிய சிறுமி .

கையில் கரண்டியை வைத்து கடுமையாக மிரட்டிக்கொண்டிருந்தாள், அவளைப் பெற்றதால் மட்டுமே அன்னையான, அந்த பெண்.

பெண்ணை ஆயிரம் வழிகளில் மதிப்பாக (?) கருதப்படும் நாட்டில்,அதற்கு பொருந்தாத பூவரசிகள் (பூத அரசிகள்) பலர் உள்ளனர்.அவர்களுக்கெல்லாம் தலைவியாக, புல்புல்லினைப் பெற்றவளுக்கு விவாதிக்கலாமே பதவி வழங்கலாம்!ஏகமனதாக அனைத்து பூதகிகளும் ஒப்பு கொள்வார்கள் என்றால்? அவளின் பெருமையை நீங்களே உணரலாம்.

(பூதத்துக்கெல்லாம் பட்டம் கொடுக்கறாங்க,ஆனால் இங்க ஒருத்தன் தொண்டைக் கிழியப் பேசுறேன்,யாராவது தண்ணீர் கொடுக்கிறாங்களா? பாருங்க! இப்படிதான் தண்ணீர் சேமிப்பாங்கப் போல! என்ன உலகமடா?எல்லாம் என்னோடப் பாஸ சொல்லனும், மொழி தெரியாத இடத்தில் காய விடறாரு!பெகன்ஜி முஜே பானி சாயியே..,பெகன்ஜி கஹா ஜாரகிஹோ? பெகன்ஜி..பெகன்ஜி..)

கைகளை கட்டிக்கொண்டு தலைகுனிந்திருந்தவளின் தலையைப் பற்றி கீழே தள்ளி காலில் சூடு வைத்தாள் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.