(Reading time: 12 - 24 minutes)

லியில் சிறுமி வாயை திறக்ககூட முடியாமல் அழ,அங்கிருந்து அகன்றாள் பூதகி.

எப்பொழுதுதெல்லாம் அவள் வீட்டு வேலைகளில் தவறு செய்கிறாளோ, அப்பொழுதெல்லாம் இப்படி ஏதேனும் தண்டனைகளைப் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறாள்.என்ன செய்ய? குழந்தைகளின் உலகம் அழகானது,அவர்களின் கற்பனை வண்ணமயமானது என்று நாம்தான் நினைக்கிறோம்.ஆனால், நிஜத்தில் எத்தனையோ புல்புல்கள் உள்ளனர்.

(புல்புல்-சுற்றித்திரிந்து வண்ணமயமாய் பாடும் ஒரு பறவையின் பெயர்)

பெயரின் பொருளுக்கும் அவளுக்கும் பொருத்தமில்லை.அவள் பெயரிலாவது அந்த மகிழ்ச்சி நிலைக்கட்டும் என்றுதான் அந்தப் பெயரை வைத்தாரோ அவளின் பாட்டி!

சிறிது நேரத்தில் அவளது தந்தை ஒருவருடன் வர,இருவருக்கும் நொண்டியப்படியே சென்று தேனீர் வழங்கினாள்.

என்னப் பாப்பா?ஏன் நொண்டிட்டு வர? என்று கேட்க,அந்தப் பரிவின் பின்னனியை அறியாது மனம் நெகிழ்ந்தாள் அச்சிறுமி!

வருங்காலம் அவளுக்கு வைத்திருப்பது?

அடச்சே! குடிக்கத் தண்ணீர் கூட தரமாற்றாங்கப்பா?( ஆதியின் மனசாட்சி- நீ ஒழுங்கா கேட்டியா?முதல்ல உன்னோட மொழியே தகராறு,இதுல ஹிந்தி தெரியாதவங்க கிட்டப்போயி பேசினா?)நான்தான் இப்ப பயண வழிகாட்டியா வேலை செய்யறதையும் மறந்துட்டேன்,மொழியையும் மறந்துட்டேன்!

சரி,நீங்க வாங்க நண்பர்களே! இப்ப நாம வேற இடத்துக்குப் போகனும்!நான் ஒருத்தனே எவ்வளவு வேலைதான் செய்வது!இந்த பாஸ் ஒரு ஆளை உதவிக்குப் போட்டா நல்லாயிருக்கும்! நீங்க கொஞ்சம் பரிந்துரை செய்வீங்களா?

டம்:ஹரியானா

ஒரு திருமனம் நடந்து முடிந்தற்கான அனைத்து அறிகுறிகளும் அங்கு தென்பட்டது.

அப்பா! எப்படியோ அந்த மதன்ஜீத்துக்கு ஒருவழியா கல்யாணம் ஆயிடுத்து.என்னவிட சின்னவன் அவன்,அவனுக்கே பொண்ணு கிடைக்கும் பொழுது,எனக்கு மட்டும் ஏன்பா கிடைக்கல? என்று போதையில் புலம்பியப்படி நடனமாடி வந்துக்கொண்டிருந்தான் ஹாரக்.

மனிதன் எதற்காகவெல்லாம் அடுத்தவனிடம் போட்டிப் போடுகிறான்! உணவு,உடை,உறையுள் என அடிப்படைத் தேவை போய்,அடுத்தவனுக்கு இணை இருந்தால் தனக்கும் வேண்டுமாம்!வாழ்க்கைத் துணையை மனம் நாடி தேட வேண்டுமே தவிர,அடுத்தவனின் செயலைப் பார்த்துத் தேடக் கூடாது.அவனுக்கு கிடைத்தால் தனக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்க,வாழ்க்கை துணை என்னப் பொருளா? பொருளைக்கூட அடுத்தவரிடம் பொறாமைக் கொண்டு வாங்கக் கூடாது.அப்படி இருக்க இணையானவளை?

ஹாரக்கின் புலம்பலைக் கேட்ட அவன் தந்தை, உனக்குப் பொண்ணுதான வேணும்! நான் பார்த்துக்கிறேன் என்று ஹாரக்கின் புலம்பலை தடுத்தார்.

அடுத்தவரின் நிம்மதியைக் குலைக்கப் போகும் அவர்கள்,அன்று நிம்மதியுடன் தூங்கினர்.

ஹாரக்கின் தந்தையால் நடக்கப் போவது?

சரியான கிறுக்கனுங்களா இருப்பானுங்களோ? யாருக்குத் தெரியும்.குடியைக் கொண்டு அடுத்தவரின் குடியை மட்டும் இவனுங்க கெடுக்கட்டும்,பாஸ்கிட்ட சொல்லி இவனுங்களுக்குப் பெரிய தண்டனையா வாங்கிக் கொடுக்கனும்! சிரிச்சிட்டிருந்த இந்த ஆதியை சீரியஸா பேச வச்சுட்டானுங்களே!

டம்:உத்திரப் பிரேதசம்

ஏன் இப்ப சோகமா இருக்க? உன்னதான் கேட்குறேன் ரன்வி,என்று தன் காதலியிடம் பிடிவாதமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் மாகிர்.

ரன்விதாவோ,ஏதும் சொல்லாமல் தன் தலைவனின் தோளில் சாய்ந்துக் கொண்டு கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள்.அவளே சொல்வாளென்று மெதுவாக, ஒரு குழந்தைக்கு ஆறுதல் சொல்வதைப் போல் தட்டிக் கொண்டிருந்தான் மாகிர்.

பின் ஒருவழியாய் சமாதானமான ரன்விதா,தன் பிரச்சனையை கூறினாள்.

காதலிப்பவர்களுக்குப் பெரிதாக என்னப் பிரச்சனை வரப் போவுது? எல்லாம் பெற்றவர்களின் சம்மதிக்காமைதான் என்று நினைத்தால்,இங்கு அது தவறு?

காதல் கொண்டவர்களுக்கு பிரச்சினை இப்படிதான் வருமென்று சொல்ல முடியாது.இது காதலிப்பவருக்கு மற்றுமல்ல பிறருக்கும் பொருந்தும். காதலுக்கு அன்பு அடிப்படை என்று நேசித்தவர்கள் நினைக்க, அதற்கு அடிப்படையாக பெற்றோர்கள் கருதவது வேறு,இந்த சமூகம் கருதுவது வேறு!

ஊரோடு ஒத்து வாழ்என்று பெரியவர்கள் சொன்னதிற்கு அர்த்தம் வேறு, நாம் புரிந்துக்கொண்ட அர்த்தம் வேறு. எந்த மக்களிடமும் பேதம் கொள்ளாமல், அனைவரோடும் இணைந்து ஒன்றுப்பட்டு வாழ்வதற்காகவே பெரியவர்கள் அவ்வாறு சொல்லியுள்ளனர்.ஆனால் நாம்,சில பல பிரிவினைகளை ஏற்படுத்தி அதை மக்கள் மேல் திணித்து,அதனோடு மக்கள் அனைவரும் பொருந்தி வாழ வேண்டும், அப்படி வாழ்வதே ஒத்து வாழ்வது என்று நினைத்து அதையே செயல்படுத்தியும் வருகிறோம்.மனித பண்புகளை மதிப்பதில் ஒத்துப் போகனுமே தவிர மண்மூட வேண்டிய பழக்கங்களுக்கு அல்ல! என்பதை எப்பொழுது புரிந்து கொள்வார்கள்?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.