(Reading time: 12 - 24 minutes)

ங்கே பயணிகள் பகுதியில் துள்ளியே விட்டான் அவன். ஸ்ரீநிவாசன்!!! காலையில் விவேக் சந்தித்த அதே சிறுவன்.!!!. டாக்டர் சுஹாசினி தனது கணவன் ராகுலுடனும், மகன் ஸ்ரீனிவாசனுடனும் அந்த விமானத்தில்தான் சென்னை திரும்பிக்கொண்டிருந்தாள்.

‘அப்பா... மார்னிங் பார்த்தோமே அந்த அங்கிள். விவேக்.. அங்கிள்...அவரேதான்..’ கிட்டதட்ட குதித்தான் அவன்.

‘டேய்... நிறைய விவேக் இருப்பாங்கடா..’

‘’இல்லபா... இது அவரேதான் எனக்கு தெரியும்...’ அத்தனை கொண்டாட்டம் அவனுக்கு. அவர்கள் இருவரையும் வியப்புடன் பார்த்திருந்தாள் சுஹாசினி.

இங்கே விவேக் ஆணைகளை கொடுத்துக்கொண்டிருக்க சந்தியா விமானத்தை மேலே ஏற்றிக்கொண்டிருந்தாள்.

அங்கே பயணிகள் பகுதியில்

‘அப்பா எனக்கு அந்த அங்கிளை பார்க்கணும்..’ விடாமல் சொல்லிக்கொண்டிருந்தான் ஸ்ரீநிவாசன்.

‘இப்போ எல்லாம் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. லேண்ட் ஆனதுக்கு பிறகு பார்க்கலாம் சொல்லிக்கொண்டிருந்தான் ராகுல்.

நிலவில்லா இரவாக இருந்தது. அந்த நிலவில்லா வானத்தில் மின்னி மின்னி சிரித்துக்கொண்டிருந்தன பல நூறு நட்சத்திர கூட்டங்கள். அவனது மேக காதிலிகள் குளித்து முடித்த நீர் துளிகளோ அவை என்று கூட தோன்றியது அவனுக்கு. சின்ன புன்னகையுடனே எல்லாவற்றையும் ரசித்தபடி பறந்துக்கொண்டிருந்தான் விவேக்.

கொஞ்ச தூரம் கடந்திருக்க அவன் கண்ணில் பட்டது ஒரு பூமியை நோக்கி விழும் ஒரு எரி நட்சத்திரம். இரவு நேர பயணங்களில் ஒரு நாளைக்கு இது போன்ற மூன்று நான்கு நட்சத்திரங்களையாவது அவன் பார்ப்பது வழக்கம்தான்.

‘ஹேய்... ஷூட்டிங் ஸ்டார்...’ கூவினாள் சந்தியா. அழகாய் புன்னகைத்தான் விவேக்.

‘உனக்கு ஷூட்டிங் ஸ்டார்ஸோட ஸ்பெஷாலிட்டி பத்தி தெரியுமா??? அவள் கேட்டாள் அழகான ஹிந்தியில்.

‘வஹ் கௌன்சி ஸ்பெஷாலிட்டி ஹை??? (அது என்ன ஸ்பெஷாலிட்டி???) புருவங்கள் உயர கேட்டான் அவன்.

இப்போ ஒரு ஷூட்டிங் ஸ்டார் பார்க்கும் போது உனக்கு என்ன தேவையோ அதை அது கீழே விழறதுக்குள்ளே மூணு தடவை சொல்லணும். இப்போ உனக்கு பணம் தேவைன்னா ‘மணி மணி மணின்னு மூணு தடவை சொல்லணும். அதுக்கு அப்புறம் உன் கர்சீஃப் லே ஒரு முடிச்சு போட்டு வெச்சுக்கணும். உன் ஆசை ரொம்ப சீக்கிரம் நிறைவேறிடும். ட்ரை பண்ணி பாரு..’ ஹிந்தியில் அவள் விளக்கி முடிக்க மலர்ந்து சிரித்தான் விவேக்.

‘எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையும் இல்லை. வேணும் கேட்குற அளவுக்கு எந்த ஆசையும் இல்லை..’ புன்னகை மாறமால் சொன்னான் விவேக்.

அதே நேரத்தில் அங்கே பயணிகள் பகுதியில் இருந்த சுஹாசினி அவர்கள் இருக்கையில் இருந்த பத்திரிக்கைகளை துழாவ கையில் தட்டுப்பட்டது 'ஹாப்பி ஃப்ளையிங்க்'!!! அந்த விமான நிறுவனத்தின் பிரத்தியேக பத்திரிக்கை!!!  விவேக்கின் பேட்டி வந்திருந்த அந்த பத்திரிக்கை. அவள் சாதரணமாக அதை புரட்ட ஆரம்பித்தாள்.

நட்சத்திர கூட்டங்களை சீண்டிக்கொண்டே விமானம் பறந்துக்கொண்டிருக்க ஏனோ சந்தியா சொன்னது விவேக்கினுள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. ஒரே ஒரு ஆசை இருக்கிறதுதான் அவனுக்கு. நடக்கவே முடியாத ஆசைதான்!!!! இருந்தாலும் அவனுக்கு இருக்கிறது அந்த வலியான ஏக்கம்!!!

காக்பிட்டின் கண்ணாடி வழியே நட்சத்திரங்களை பார்வையால் துழாவிக்கொண்டே இருந்தான் அவன். கொஞ்ச தூரம் கடக்க திடீரென மறுபடியும் கண்ணில் பட்டது இன்னொரு எரி நட்சத்திரம். சட்டென ஒரு பரபரப்பு அவனுக்குள்ளே.

அது கீழே விழுவதற்குள் மூன்று முறை ரகசிய குரலில் சொல்லியே விட்டிருந்தான் ‘அப்பா!!! அப்பா!!! அப்பா!!! தனது கைக்குட்டையை எடுத்து ஒரு முடிச்சும் போட்டு வைத்துக்கொண்டான்.

சிரித்தே விட்டாள் அருகிலிருந்த சந்தியா. ஹலோ.. ஆசையே இல்லைன்னு சொன்ன??? அப்படி என்ன கேட்டே??? என்ன லவ் மேட்டர்ரா??? இதற்கும் முகம் மலர்ந்த சிரிப்பே அவனிடமிருந்து பதிலாய் வெளிவந்தது.

‘நடக்கும் பார். நீ நினைச்சது கண்டிப்பா நடக்கும் பார்..’ அழகாய் ஆசீர்வதித்தாள் அந்த சக விமானி.

தேங்க்யூ. சந்தியா. அப்படி மட்டும் நடந்தா இந்த உலகத்திலே ரொம்ப ரொம்ப சந்தோஷமான ஆள் நானாதான் இருப்பேன். ..’ என்றான் அவன் நெகிழ்ந்த குரலில்.

அங்கே பயணிகள் பகுதியில் அவனது பேட்டியை மறுபடி மறுபடி படித்துக்கொண்டிருந்தாள் சுஹாசினி.. அந்த பேட்டியை படிக்க படிக்க அவனது மனதில் இருக்கும் வலி புரிகிறது அவளுக்கு. அவள் கொஞ்சம் திகைப்பில் உறைந்திருந்தாள் என்று சொல்ல வேண்டும்தான்.

அவனது தந்தை டாக்டர் ஸ்ரீனிவாசனை அவளுக்கு நன்றாக தெரியுமே. அவளது ப்ரோஃபசர் ஆயிற்றே அவர். அவரை பற்றி நினைத்தாலே இவள் நெஞ்சம் நெகிழ்கிறதே.

திடீரென தனது மகனிடம் திரும்பி கேட்டாள் அவள் ‘இந்த அங்கிள்தானாடா நீ சொன்ன விவேக் ஸ்ரீநிவாசன்.’

‘ஆமாம் இவரேதான்’ சந்தோஷமாக கூவினான் மகன். ‘வாம்மா..’ காக்பிட் போய் பார்க்கலாம்.

மகனுக்கு பதில் சொல்லவில்லை சுஹாசினி.. விவேக்கும் அவனது தந்தையும் இருக்கும் அந்த புகைப்படத்தை மறுபடி மறுபடி பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். அவனது வலிக்கான மருந்து கைகெட்டும் தூரத்தில் இருப்பதும் நன்றாக புரிகிறது அவளுக்கு!!!

அதே நேரத்தில் ஏனோ தனது கைக்குட்டையில் போட்ட அந்த முடிச்சை மறுபடி ஒரு முறை பார்த்துக்கொண்டான் விவேக் ஸ்ரீனிவாசன்!!!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

விவேக் ஸ்ரீநிவாசன் இனிமேல் 15 நாளுக்கு ஒரு முறை வருவார்!!! இதை முடிச்சிட்டுதான் அடுத்த புது கதை தொடங்கணும்னு இருக்கேன்.

ஹா.. ஹா.. ஹா.. விவேக் ஸ்ரீநிவாசனை சுத்தி நிறைய முடிச்சுகள். கொஞ்சம் பெரிய பிரேக் ஆயிடுச்சு. உங்களுக்கு எல்லாம் கதை கொஞ்சம் மறந்துக்கூட போயிருக்கும். ஏதாவது புரியலைன்னா சொல்லுங்க.

சின்ன தொடர்தான் இது. மொத்தமாக ஒரு பன்னிரண்டு அத்தியாங்கள்தான் பிளான் பண்ணி இருக்கேன். பார்க்கலாம் எப்படி போகுதுன்னு!!! அடுத்த வாரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எல்லா கேள்விக்கும் பதில் சொல்லலாம். இந்த எபி படிச்சிட்டு கதையின் போக்கு பற்றி உங்களுக்கு என்ன தோணுதுன்னு சொல்லுங்க. Thanks a lot!!!

தொடரும்......

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1049}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.