(Reading time: 11 - 22 minutes)

னக்கு என் வீட்டினரை எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். இப்படியாக ஆரம்பித்து இருந்தது அந்தக் கடிதம்.

யாருக்கு இவ்வளவு அன்பான ஃபேமிலி கிடைக்கும். எனக்கு கிடைத்திருக்கிறதே. நான் எவ்வளவு லக்கி. லவ் யூ பப்பா, லவ் யூ மா, அண்ணா , அண்ணி, ஹனி லவ் யூ சோ வெரி மச்.

நானும் எப்பவும் உங்கள் எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்கணும் என்று முயலுவேன். எப்பவாவது மிஸ் பண்ணியிருந்தால் அயாம் வெரி சாரி மம்மா, பப்பா, அண்ணா, அண்ணி.

ஏனோ இந்த முறை உங்களுக்கு பிடித்த மாதிரி நடக்க முடியாது போல தோன்றுகிறது. உங்களுக்கு பிடித்தமாதிரி நான் நடந்துக் கொண்டால் , என் மனசாட்சியே என்னைக் கொன்றுவிடும் போலிருக்கிறது. உங்களுக்கு பிடிக்காத மாதிரி நடந்துக் கொண்டாலும் என் நிலை அதுவாகவே இருக்கிறது.

எதற்காக இந்த குழப்பம் என்பதற்காகத் தான் இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். இந்த முடிவினால் எல்லாம் முன் போல நலமாகி விடும் இல்லியா பப்பா. முன் போல நம்ம ஃபேமிலியில் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையா மகிழ்ச்சியா இருப்பீங்கன்னு நம்பறேன். லவ் யூ பப்பா.

கதறி விட்டிருந்தார் தாமஸ், அவரோடு இணைந்து மனைவியும் அழ இருவரையும் சமாதானப் படுத்துவதற்க்குள்ளாக ஒருவழியானது. கிறிஸ் இன்னுமாய் இறுகிப் போயிருந்தான். பிரபா மாடிக்கு விரைந்தாள்.

மௌனத்தின் உறைந்தன நிமிடங்கள். தீபன் பேச ஆரம்பித்தான்.

“மாமா, ரூபன் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு. நான் ஒத்துக்கறேன் அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அனிக்கா வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வரவும் கோபத்தில அடிச்சிருக்கான். ஏதோ ஒரு வேகத்தில முன்னே பின்னே யோசிக்காம தாலியும் கட்டிட்டான். இது அதையும் விட பெரிய தப்பு.

அவங்க ரெண்டு பேருக்கும் முன்னேயே எல்லாம் கல்யாணம் ஆகலை. அவள் மயக்கத்திலிருந்தப்போ தான் ரூபன் அனிக்காவுக்கு தாலிக் கட்டினதா ஜீவன் எனக்குச் சொன்னான் எனவும்,

எங்க வீட்டுப் பொண்ணைப் பற்றி எங்களுக்கு தெரியாதா? எனும் விதமாக தாமஸும் , கிறிஸ்-ம் அவனைப் பார்த்து வைத்தனர்.

மறுபடி டிஸ்சார்ஜ் ஆகி இங்க அனிக்கா வந்தான்னா சூசைட் அட்டெம்ட் பண்னிடுவாளோன்னு பயந்து அவன் தன் கூட அவளையும் வீட்டுக்கு கூட்டிட்டு போகிற உரிமைக்காக தான் அந்த வேலையை செஞ்சு வச்சிருக்கான் அவனைப் பொருத்தவரை அதற்கு வேற ஒரு காரணமும் இல்லை.

அதே நேரம் அனிக்காவும் போலீஸ் விசாரிக்கும் போது உண்மையைச் சொன்னா ரூபனுக்கு எதுவும் ஆகிடுமோன்னு தான் இப்படி பொய் சொல்லி வச்சிருக்கா. அதனால,

அதனாலே………. காட்டமாகவே எழுந்தது கிறிஸ்ஸின் கேள்வி. அண்ணன் நானிருக்க தன் மனதை எனக்கு சொல்ல முடியாதா? என தன் தங்கையின் மீது எழுந்த கசப்புணர்வின் வெளிப்பாடு அது. எவனோ ஒருவன் தன் தங்கைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்க நான் கேட்க வேண்டியிருக்கிறதே என்பதான கோபத்தின் வேளிப்பாடாக எழுந்த கேள்வி அது.

நடந்தது எல்லாம் தப்புத்தான், நாம வெளியே எல்லோருக்கும் அப்படியேச் சொல்ல வேண்டிய தேவை எதுவும் இல்லை. நாம் ரூபன் கிட்ட பேசிப் பார்த்துட்டேன். அவன் சொல்றான் அனிக்காவை நம்ம வீட்டுக்குத்தான் டிஸ்சார்ஜ் பண்ணிக் கூட்டிட்டு போகப் போறேன் அதில ஒண்ணும் மாற்றமில்ல. அவளுக்கு உடல் நலம் சரியாக கொஞ்ச நாளாகும்னு டாக்டர் சொல்லியிருக்கார். அதுக்கப்புறமா எங்கேஜ்மெண்ட் வச்சுக்கலாம்.

ஊர் கூட்டி எனக்குன்னு அவளை நிச்சயம் பண்ணிட்டு, கல்யாண நாள் குறிச்சிட்டு அவளைக் கூட்டிட்டு போகச் சொல்லுங்க. எல்லோர் முன்னால சொன்னாதான் பேச்சு மாற மாட்டாங்கன்னு நான் நம்புவேன் அப்படின்னு சொன்னான். எனவும் கிறிஸ்ஸிற்கு ரூபனைப் பிடித்து கன்னம் கன்னமாக மீதம் கொடுக்க வேண்டியிருந்த அறைகளை கொடுக்க கை பரபரத்தது.

“யார் வீட்டுப் பெண்ணை கூட்டி வர யார் அனுமதி கொடுப்பது. அவ என் தங்கச்சி” பொறுமினான் கிறிஸ்.

“பொறுமையா இரு கிறிஸ்” அவனை சாந்தப் படுத்தினார் தாமஸ். நான் பேசறேன். அவரைச் சாந்தப் படுத்தியிருந்தது கையிலிருந்த மகளின் கடிதம்.

ஒரு நேரம் யோசிக்கும் போது மகளாவது ஒண்ணாவது அப்படியே தலை முழுகிடலாமான்னு தோணுது பற்களைக் கடித்துக் கொண்டு பேச சாராவின் விம்மல் எழ சாந்தப் படுத்தினார் இந்திரா.

ஆனால் என் மகளா போயிட்டாளே. இதுவா அவ எனக்கு தர்ற பரிசு வெறுப்பாய் கடிதத்தை பார்த்தார்.

இங்க பாரு தீபன் நான் அவளுக்கு பேசி வச்சிருக்க இடம் ஒன்னும் சாதாரண இடமில்ல, மல்டி மில்லியனர் ஃபேமிலி, அத்தோட என்னோட ரிலேஷனும் கூட. இந்த சம்பந்தத்தை சட்டுன்னு முறிக்கிறது எனக்கு ரொம்பவே அவமானம். ஆனால் இவ இப்படி எதுவாவது செஞ்சி வைப்பான்னு நான் தினந்தோறும் பயந்துகிட்டு இருக்கிறதை விட முறிச்சிறது தான் சரின்னு தோணுது. பெருமூச்செழுந்தது அவரிடத்தில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.