(Reading time: 13 - 25 minutes)

வாஞ்சையுடன் மகனை அணைத்துக்கொண்டார் அப்பா ‘காதல்ங்கிறது ரொம்ப அழகான விஷயம்டா கண்ணா. இந்த உலகத்திலே பொண்ணை மட்டும்தான்னு இல்லை. மழை, வானம், மரம், புக்ஸ், பாட்டு உன்னுடைய படிப்பு, வேலை இப்படி எல்லாத்தையும் காதலிக்கலாம். இப்படி ஜன்னல் வழியா வெளியே கொஞ்சம் பாரேன் இந்த ராத்திரி வானமும், மேகமும் நட்சத்திரங்களும். எவ்வளவு அழகா இருக்குன்னு. நீ என்னமோ பயந்துபோய் கண்ணை மூடிட்டு உட்கார்ந்திருக்கே’

மெதுவாக வெளியே எட்டிப்பார்த்தான் விவேக். விமானத்தினுள்ளே இருந்த மங்கிய ஒளியில் வெளியே இரவு வானம் மிளிர்ந்துக்கொண்டிருந்தது.

காற்று பைகளுக்குள் புகுந்து பல வண்ணங்களின் ஒளிச்சிதறல்களுடன் சிரித்துக்கொண்டிருந்த நட்சத்திரங்களும், அவற்றை மூடி மறைத்து விளையாடிக்கொண்டிருந்த மேகங்களும், இவற்றையெல்லாம் தொந்தரவு செய்யாமல் ஒரு பக்கத்தில் ஒளிர்ந்துக்கொண்டிருந்த பிறை நிலவும் என முதல் பார்வையிலேயே அந்த இரவு வானத்திடம் விவேக் விழுந்திருந்தான் எனதான் சொல்ல வேண்டும்.

‘நானும் உங்க அம்மாவும் லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். லவ்ங்கிறது ஒரு பொறுப்பு!!! பெரிய  ரெஸ்பான்சிபிளிட்டிடா கண்ணா. அதை எடுத்துக்கிற, சமாளிக்கிற தகுதியை நீ முதல்லே வளர்த்துக்கோ. அதுவரைக்கும் வேணும்னா இந்த மேகம் வானம் இதையெல்லாம் காதலிச்சு பாரேன்...’ என்றார் அப்பா புன்னகையுடன்.

இன்னொரு முறை திரும்பி பார்த்தான் அப்பா அறிமுகப்படுத்திய அந்த வான்மகளை. அப்போது சில்லென ஒரு மகிழ்ச்சி அவனுக்குள்ளே பிறந்தது நிஜம். அதுவே அவன் விமானியாக வளர்வதற்கும் ஒரு வித்தாக அமைந்தது.

‘நீ படிச்சு ஒரு நல்ல நிலைக்கு வந்திடு அதுக்கு அப்புறம் நீ எந்த பொண்ணை விரும்பினாலும் அப்பா உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன் சரியா???’

உள்ளுக்குள் லேசாக ஏதோ ஒரு தவிப்பு பிறக்க மறுபடியும் அப்பாவின் தோளிலேயே சாய்ந்துக்கொண்டான் விவேக்.

‘நான் எந்த பொண்ணையும் லவ் எல்லாம் பண்ண மாட்டேன். பெரியவனா ஆன பிறகு எங்க அப்பாதான் எனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்.’ அவன் மெல்ல சொல்ல கலகலவென சிரித்தார் அப்பா.

‘சிரிக்காதீங்கபா. நான் உண்மையாதான் சொல்றேன். அப்பா சொல்ற பொண்ணைதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்.... .கண்டிப்பா..’

‘சரிடா கண்ணா... சரிடா கண்ணா.. அப்பாவே உனக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..’ வாக்கு கொடுத்தார் அன்று. அதற்கு சாட்சியாக நின்றன இதோ இந்த நட்சத்திரங்கள். அன்று முதலே இந்த உறுதி. அப்பா சொல்லும் பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டுமென்ற உறுதி.

அன்று கொடுத்த வாக்கை இப்போது எப்படி காப்பாற்றுவாராம்??? ஒரு பெருமூச்சு அவனிடம். ஆனாலும்  அவன் எடுத்துக்கொண்ட உறுதியில் துளியிலும் துளிக்கூட மாற்றம் இல்லை.  இந்த நிமிடம் வரை அவர் அறிமுக படுத்திய வான்மகள் மட்டுமே அவனது காதலி.

அந்த பழைய நினைவுகளில் முடிச்சுப்போட்ட தனது கைக்குட்டையை மறுபடி ஒரு முறை பார்த்துக்கொண்டான் விவேக்..

தே நேரத்தில்

இன்னொரு விமானத்தை செலுத்திக்கொண்டிருந்தாள் ஹரிணி அதுவும் சென்னை நோக்கியே வந்துக்கொண்டிருந்தது. காலையில் விவேக்கை பார்த்த பிறகு புறப்பட்ட எரிச்சல் இன்னமும் தீரவில்லை அவளுக்கு. தரை இறங்க வேண்டிய நேரம் வர

டூ தௌஸன்ட்  ... ஓன் தௌஸன்ட்.... ஃபைவ் ஹண்ட்ரட்.... இறங்கிக்கொண்டே இருந்தது விமானம். ஹண்ட்ரட் ...பிஃப்டி...... இறங்க வேண்டுமென முடிவு செய்ய வேண்டிய உயரம் வர திடுமென தரை இறக்கினாள் விமானத்தை!!!

அருகில் இருந்த துணை விமானியே அவள் முகம் பார்த்து கேட்டார் ‘வாட் இஸ் திஸ் மிஸ் ஹரிணி??? ஏன் இத்தனை டென்ஷன் உங்களுக்கு???’

இறுக்கமான சுவாசத்துடன் கண்களை மூடிக்கொண்டாள் அவள். அவசரம்!!! எல்லாவற்றிலும் அவசரம் அவளுக்கு,

சில வருடங்கள் முன்னால் நடந்தது இது. இவர்கள் கல்லூரி காலம் முடிந்து விமானத்துறையில் ஹரிணியும் விவேக்கும் அடி எடுத்து வைத்திருந்த நேரமது. எல்லா நேரத்திலும் இவளுக்கு போட்டியாகவே இருந்தவன் விவேக்.

விவேக்குக்கு பெண் தேடும் நோக்கத்தில் அவனது அப்பா கொடுத்திருந்த விளம்பரம் ஹரிணியின் அப்பாவின் கண்ணில் பட்டிருந்தது. இருவரும் விமானிகள் என்பதாலேயே இது சரியாக வரும் என அவள் அப்பாவுக்கு ஒரு எண்ணம்.

‘ஹரிணிமா...’ என்றார் அவள் அப்பா. அதிர்ந்து கூட பேசத்தெரியாத ஒரு மனிதர் அவர். ‘யாரோ விவேக் ஸ்ரீநிவாசனாம். உன்னோடதான் வேலை பார்க்கிறானாமா அந்த பையன்??? அவனை உனக்கு பார்க்கலாமாமா??? தயக்கத்தில் ஊறிய ஒரு குரலிலேயே கேட்டார் அவர். ஏற்கனவே பெரிய  மகளிடம் பட்ட காயம் இன்னமும் அவர் மனதில் இருக்கிறதே!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.