(Reading time: 19 - 37 minutes)

பேட்டிமுடிந்து வந்தபோது தன் தம்பி வருண் ஹாலில் தனக்காக காத்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த கவி வருண் என்று ஓடிச்சென்று தன் தம்பியை இருக்கையில் உட்காரவைத்து தானும் அருகில் உட்கார்ந்து, எப்படா வந்த? வந்தும் என்னை பார்க்க வராமல் இங்கு வந்து உட்கார்ந்துவிட்டாய்? வீட்டில் அம்மா அப்பா எப்படிடா இருக்கிறார்கள்? என்று வரிசையாக கேள்விகளை தொடுத்தாள்.

அவர்களின் எதிர் சோபாவில் வந்து அமர்ந்த மஹிந்தன் ஒவ்வொரு கேள்வியாக கேள் ழையா, பாவம் வருண், இப்படியா கேள்வியாலே பயப்பட வைப்பாய் என்று கூறியவன், “வெல்கம் டு மை ஹவ்ஸ் வருண்” என்றான்.

வருணைப் பார்க்கும் வரையில் மஹிந்தனுடன் சற்று ஒதுக்கம் காண்பிப்பதை மறந்து இருந்தவள், வருணைப் பார்த்ததும் யார் டா நீ என்ற ரீதியில் ஓர் பார்வையை மஹிந்தனின் மேல் வீசிவிட்டு, உனக்கு குடிக்க ஏதாவது கொடுத்தார்களா? என்று அவனிடம் கேட்டுவிட்டு வருண் பதில் கூற முயலும் போதே காயத்திரி அக்கா, என் தம்பிக்கு ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வாருங்கள் என்று கூறினாள்.

அவளின் அந்த செயல் வருணுக்கு சற்று நிம்மதியும் மஹிந்தனுக்கு தன் தம்பியை அவள் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளி என்ற முறையில் கவனித்ததால் முகத்தில் புன்னகையும் வந்தது

இப்ப நான் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் கூறு என்று கூறினாள்.

வருணுக்கும் அவன் அம்மாவுக்கும், கவி மஹிந்தனின் வீட்டில் எப்படியிருக்கிறாளோ? என்ற கவலையில்.இரவு முழுவதும் நிம்மதியான உறக்கம் இல்லாமல் தன் அம்மாவுடன் பூஜை அறையிலேயே உட்கார்ந்து இருந்தவனுக்கு இங்கு வந்ததும் கவி மஹிந்தனின் அருகில் அழகான உடையணிந்து அவனின் கை பிடித்து நின்று கொண்டு இருந்த நிலையைப் பார்த்தவுடனே கொஞ்சம் நிம்மதி பிறந்தது

மேலும், தன்னை வீட்டின் எஜமானி இடத்தில் இருந்து கவனித்ததும், தன் அக்கா வாழ்ந்துவிடுவாள் என்ற பூரண நம்பிக்கை பிறந்தது.

நான் இங்கு வந்து அரைமணி நேரம் ஆகிவிட்டது நீ பேட்டி கொடுக்கும் போது டிஸ்டப் பண்ணக் கூடாது என்றுதான் நான் இங்கு உட்கார்ந்து இருக்கிறேன்

வீட்டில் அம்மா அப்பா எல்லோரும் நல்லா இருக்கிறார்கள். அம்மாவிற்கு உன்னை பார்க்க இங்கு வர ஆசைதான். ஆனால்! நேற்று அங்கு வந்த சாரின் தங்கை நம் வீட்டிற்கு வந்து சாரின் அம்மா அப்பாவிடம் பேசி நல்லபடியாக உங்கள் ரிசப்சனை நடத்தி விடலாம் அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருக்கும் படி சொன்னதால் அவர்கள் வரவில்லை என்றான்.

மேலும் அம்மா உன்னிடம் கொடுக்கச் சொல்லி இந்த இரண்டு சூட்கேசுகலையும் கொடுத்தார்கள் என்று கூறியதும் என் டிரஸ் எல்லாம் கொடுத்துவிட்டிருக்கிறார்களா? என்றவளுக்கு கண் கலங்கியது.

அவள் கண் கலங்குவதை திசைதிருப்பும் வகையில் டிரஸ் மட்டுமில்லை நீ ஆசையாக் சாப்பிடுவாய் என்று உளுந்தவடை தொட்டுக்கொள்ள சட்னியும் உனக்கு அம்மா கொடுத்துவிட்டிருக்கிரார்கள் என்றவன், தன் கையில் இருந்த சின்ன பேக்கை கொடுத்தவன் இதில் உன்னுடைய நகைகள் எல்லாம் இருக்கிறது என்று கொடுத்தவன் குரலிலும் சற்று கலக்கம் தெரிந்தது.

அபொழுது புயல் போல் வேகத்தில் உள்ளே வந்த சுபத்ராவை பார்த்து திகைப்புடன் யார் இவர்கள் என்று யோசனையுடன் கவிழையா பார்க்க, தன் அம்மாவை அப்பொழுது அங்கு எதிர் பார்க்காத மஹி ,மாம் என்று கூறிக்கொண்டு இருந்தவனை மேலும் பேசவிடாமல் சுபத்ரா பொரிந்தாள்

நான் உன்னுடைய மாம் என்று என்னை பார்த்தபிறகு தான் உனக்கு ஞாபகம் வருதா மஹிந்த்? ,என்றவள் கவிழையாவை பார்த்துக்கொண்டே வருனிடம் உன் அம்மா இவளுக்கு கொடுத்துவிட்ட நகைகள் எல்லாம் இப்பொழுது அவள் போட்டிருக்கும் ஒரு நெக்லஸ் வேல்யுவுக்கு கூட பெறாது என்றவள், ம்.... உன்பேரு? என்று யோசனை செய்வதுபோல் முகத்தில் பாவனை காட்டி எனக்குத்தெரியாதே என்று அலட்ச்சியமாக் கூறிக்கொண்டு அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த மஹிந்தனின் அருகில் தோரனையாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.

அவள் புயல் போல் வந்த வேகமும் தன் தம்பியை அலட்ச்சியமாக் பார்த்த பார்வையும் பின் அமர்ந்த தோரணையும் கண்ட கவிழையாவிற்கு ஆத்திரம் வந்தது.

கவிழையா மஹிந்தனை முறைத்துக் கொண்டே கோபமாக பேசத் தொடங்கப்போகும் முன் மஹிந்தன் வாய் திறந்தான்.

மாம் ஷி இஸ் மை வொய்ப் டோன்ட் பர்காட் இட், என்மனைவிக்கு அவள் அம்மா வீட்டில் கொடுதுவிட்ட நகைகள் நான் அவளுக்கு வாங்கி கொடுத்ததைவிட கண்டிப்பாக உயர்ந்ததுதான். ஏனென்றால் அது அவர்கள் பாசத்துடன் கொடுத்துவிட்டது.

மல்டிமில்லினியர்சின் வீடுகளைபோல் பகட்டுக்கு வாங்கிக் கொடுக்கும் நகை போல் கிடையாது என்று கூறியவன், சாரி ழையா.. மாம் இப்படி ஹார்ஸ் ஆக பேசுபவர்கள் கிடையாது. அதுவும் என்விசயத்தில் இதுவரை இப்படி நடந்து கொண்டது கிடையாது

உங்களுக்கு என்ன ஆச்சு ,என்று தன் அம்மாவைப் பார்த்து தன் கேள்வியை முடித்தான்.

அவன் பேசப் பேச அதைப் பார்த்துக்கொண்டிருந்த சுபத்திராவுக்கு முகத்தில் இறுக்கம் கூடியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.