(Reading time: 19 - 37 minutes)

நீ இன்னும் கொஞ்ச நேரத்தில் ரெடியாகிவிடு பத்துமணிக்கு ரிப்போடர்ஸ் டான் என்று வந்து விடுவார்கள் என்றான்.

அவன் சொன்னதும் எனக்கு....பயமா இருக்குது, நான் இதுவரை இப்படி பட்ட பேட்டிகளை வெளியில் இருந்து பார்க்க மட்டும் தான் செய்திருக்கிறேன், எனக்கு என்று வரும் போது எப்படி பதில் சொல்வேன் என்று பயமாக இருக்கிறது என்றாள்.

உடனே மஹிந்தன் ஏய் நான் இருக்கும் போது நீ எதற்குப் பயப்படுகிறாய் பேபி என்றவன், அவள் தோள்களில் கைபோட்டு எழுந்தவன் என்னை மீறி உன்னிடம் யாரும் கேள்வி கேட்காதவாறு பார்த்துக் கொள்வேன்.நீ சிரித்த முகமாக என் அருகில் நின்றால் மட்டும் எனக்குப் போதும் மற்றதை நான் கவனித்துக் கொள்வேன் ஓகே வா? ரிலாக்ஸ்.. நான் இருக்கும் போது நீ எதற்கும் பயப்படக்கூடாது

நீ போய் ரெடி ஆகு, நான் கொஞ்சம் போன் பேசப் போகிறேன் என்றான்.

ழையா வேகமாக சென்று குளித்து உடை மாற்றியவள் தயக்கத்துடன் மஹிந்தனின் அருகில் நின்றாள்

அவனும் குளிக்கப் போகத் திரும்பியவன் ழையாவைப் பார்த்தான் அப்போழுதுதான் மலர்ந்த பூப்போல குளித்துமுடித்து, நேற்று தன் தங்கை அவள் போட்டுக்கொள்ள வாங்கிய உடையுடுத்தி முடியை காய்வதற்காக விரித்துவிட்டு இரண்டுபக்கமும் முடியெடுத்து கேட்ச் க்கிளிப் உதவியுடன் முன்னால் முடிவராதவாறு போட்டிருந்த அவள் முடியில் மிட்ச்ச்சமிருந்த கொஞ்ச ஈரம் சொட்டிக்கொண்டு நின்றவளின் அழகு அவனை கட்டிப்போட்டது.

“ யூ ஆர் லுக்கிங் வெரி பியுட்டிபுல் பேபி.அண்ட் யூ மேக் மீ கிரேசி” என்றான்.அவன் வேறு எதுவும் கூறவோ தன்னிடம் நெருங்கவோ கூடாது என்ற அவசரத்தில் அவன் பேசியதை கண்டுகொள்ளாததுபோல் பாவனை செய்தபடி அவனிடம் கேட்டாள் இங்க பூஜை ரூம் எங்க இருக்கு நான் தினமும் குளித்ததும் சாமி கும்பிடுவேன் இப்போ நான் எங்கபோய் சாமி கும்பிட என்று கேட்டாள்.

அவளின் பதட்டத்தை கண்டுகொண்டவன் மனதில் மருண்ட முயலின் பார்வயாக அவளின் கண் தன்னை மயக்க சிரிப்புடன் ஒரு நிமிடம்.. என்றவன் அவனின் கபோர்டை திறந்து அதில் வைத்திருந்த அந்த உடைக்கு பொருத்தமாக அவள் போட்டுக்கொள்ள நேற்று வாங்கிய நகையை அவளிடம் எடுத்துக் கொடுத்தவன் இதை போட்டுக்கொண்டு ரெடியாகி இரு நானும் குளித்துவிட்டு வருகிறேன் ரெண்டு பெறும் போய் சாமி கும்பிடலாம் என்று கூறியவன் அவள் கண்ணத்தை தட்டிவிட்டு போனான்.

ங்கிருந்த ஹேர்டிரைய்யரின் உதவியால் தன் முடியை உலர்த்தி அவளில் நீண்ட முடியை அழகாக் பின்னலிட்டு கண்ணுக்கு மையிட்டு அவன் கொடுத்த நகைகளை போட்டு ரெடியாவதர்க்கும் அவனும் ரெடியாகி அவள் அருகில் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

ழையா என்ற அழைபில் திரும்ம்பியவள் அவனின் கம்பீரமான் தோற்றத்திற்கு பொருத்தமாக் லைட்ஆஸ் கலர் பளபளக்கும் முழுக்கை சட்டையினை முக்காக்கை வரை மடித்து டார்க்ஆஸ் கலர் கால்சட்டையில் அலையளையாக நெற்றியில் புரளும் முடியுடன் உயரமான் கம்பீரமான அவன் தோற்றத்தை அவள் அறியாமலேயே அவள் விழிகள் ரசிப்பதை பார்த்தவன் உதட்டில் சிரிப்புடன் அவளின் அருகில் வந்தவன் ம்.... வா போலாம் என்று அவளின் கை பற்றி கூட்டிப் போன இடம் அவன் வீட்டின் முன்னாள் இருந்த சிறு கோவில் போல் தோற்றத்தில் இருந்த பூஜை அறைக்கு அவளை கூட்டிச் சென்றான்.

அங்கு இருந்த விளக்கை அவள் இயல்பாக ஏற்றுவதை நிறைவுடன் பார்த்தவன் இருவரும் சேர்ந்து நின்று சாமி கும்பிட்ட நொடி மஹிந்தனுக்கு மனதுக்கு சந்தோசமாக இருந்தது.

அவள் ஏற்றிய தீபத்தினை பயபக்தியுடன் தொட்டுக் கும்பிட்டவன் தான் விபூதி பூசிக்கொண்டு குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றியில் இட்டான்.

கவிழையாவிற்கு அவன் செயல் ஏதோ ஆண்டாண்டாக பழகியது போல் ஓர் உணர்வு தோன்றினாளும் தன்னால் முழு மனதுடன் அவனுடன் ஒன்றமுடியுமா?என்ற கேள்வியும் எழுந்தது கடவுளை பார்த்தவளிடம் எனக்கு ஏன் இப்படி ஓர் நிலை என்று கேட்டவளின் கண்கள் கலங்கியது..அவனை தான் விரும்பாவிட்டாலும் இன்று அவன்மேல் உள்ளவெறுப்பை தக்கவைத்துக்கொள்ள ஏன் முடியவில்லை? என்ற யோசனையுடன் வந்தவளை பார்த்த மஹிந்தன் கலங்கிய அவள் முகத்தை பார்த்தவன்.

வெறுப்புக்கும் விருப்பத்திற்கும் இடையில் ஓர் நூல்தான் இடைவெளி அந்த நூலை நான் அறுத்து உன்னிடம் நெருங்கிவிட்டேன் அந்த நெருக்கத்தை மட்டும் நீ அனுபவி தேவையில்லாமல் பழையதை நினைத்து குழம்பிக்கொள்ளாதே ழையா என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் மறக்க முடியவில்லையே நீங்கள் என்னிடம் இதற்க்கு முன் நடந்த விதத்தை மறந்து உங்களை ஏற்க்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் நான் தவிக்கிறேனே என்றவளுக்கு கண்ணில் நீர் வடிந்தது

அவள் கண்ணில் நீரை கண்டதும் மனம் துடிக்க அவளை இழுத்து அணைத்தான்.அவன் ஏற்படுத்திய மனக்காயத்தினை அவனின் அனைபினாலேயே சமாதானப் படுத்தும் நோக்குடன்......

“என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன்னை கை அணைக்க

உன்னைவிட்டால் வேறோருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க ,

(என்று பாடிக்கொண்டே அவள் கண்ணில் வழிந்த நீரை துடைத்துவிட்டவன் )

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.