(Reading time: 10 - 19 minutes)

தே நேரம், அங்கே ரித்தியின் வீட்டில்,

“தாத்தா………….” என ஓடிவந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த சொக்கநாதனை கழுத்தோடு சேர்த்து கட்டிக்கொண்டாள் ரித்தி…

“வாடா ரித்தி… இப்போதான் உன்னை நினைச்சேன்… நீ வந்துட்ட…” என்றவர், உள்ளே திரும்பி குரல் கொடுக்க,

“அப்பா… கூப்பிட்டீங்களாப்பா…” என்றபடி வந்த அவரது மகன் ராகேஷ்வர், அங்கே தன் மகள் நிற்பதைப் பார்த்துவிட்டு கண்டு கொள்ளாமல் இருந்தார்….

“என்னடா என் பேத்தி வந்திருக்கா… நீ எதுவும் கண்டுக்காம இருக்குற?...”

“அதுக்குன்னு நான் என்ன பட்டாசு கொளுத்தி கொண்டாடவா முடியும்?...”

“டேய்… என் பேத்தி, இரண்டு மாசம் கழிச்சு இன்னைக்குத்தாண்டா வந்திருக்குறா… நீ என்னடான்னா இப்படி பேசுற?... அவ வந்த சந்தோஷத்தை நாம கொண்டாட வேண்டாமா?...”

“ஓஹோ… அப்படியா?... அப்ப ஒன்னு பண்ணுங்க… இரண்டு மாதம் கழித்து வீட்டுக்கு வந்துள்ள என் பேத்தியை ஆவலுடன் வரவேற்கும் சொக்கநாதன்னு ப்ளக்ஸ் போர்ட் அடிச்சு வீட்டு முன்னாடி வைச்சு ஆடிப்பாடி உங்க சந்தோஷத்தை கொண்டாடுங்க… நான் போய் வேலையைப் பார்க்குறேன்…”

அவர் சொல்லிவிட்டு நகர,

“அப்பா…………” என கத்தினாள் ரித்தி…

அவர் அதனைக் கண்டு கொள்ளாமல், அங்கிருந்து அகல, “ராகேஷ்… இப்போ நிற்க முடியுமா முடியாதா?...”

அவள் தன் இடுப்பில் கை வைத்து, போகின்ற தகப்பனையே முறைத்துப்பார்த்து கேட்க,

“யாரடி பேர் சொல்லி கூப்பிடுற?... வந்தேன் சூடுதான்…” என்றபடி கையில் கரண்டியுடன் அங்கே அவதரித்தார் அவளின் அன்னை வசுந்தரா…

“வசுந்தரா நீ வேற?.. அவ எங்கம்மா கூப்பிட்டா?... நான் தான் அவனை கூப்பிட்டேன்…”

சட்டென பேத்திக்கு உதவ முன் வந்தார் சொக்கநாதன்…

“மாமா… இந்த வாயாடிக்கு நீங்க சப்போர்ட்டுக்கு வராதீங்க… இவளுக்கு கொழுப்பு அதிகம்… இரண்டு மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்துட்டு, பேர் சொல்லி கூப்பிடுறதை பார்த்தீங்களா?...”

“அவ சின்னப்பிள்ளைம்மா…”

“யாரு இவளா?... வாய் வாய்… அப்பா… இரண்டு மாசம் தொல்லை இல்லாம நிம்மதியா இருந்தேன்…”

அவர் பெருமூச்சு விட, “இரண்டு மாசம் நான் இல்லாம நீ நிம்மதியா இருந்தீயா?... பெத்த தாய் பேசுற பேச்சா இது?...” என்றாள் அவள் ஆதங்கத்துடன்…

“ஓஹோ… அம்மான்னு இப்போதான் நினைவு வருதா உனக்கு?...”

அவர் கோபமாக கேட்க, ஹாலிலிருந்து அழைத்தார் அவரது கணவர்…

“வசு அங்க நின்னு என்ன வெட்டிப் பேச்சு பேசிட்டிருக்க?... இங்க வா….”

“எது வெட்டிப் பேச்சா?...”

ரித்தி முறைக்க,

“வசு… உன்னை வான்னு சொன்னேன்…” அழுத்தமாக கூப்பிட்டார் ராகேஷ்வர்…

வசுந்தராவும் ஹாலுக்கு செல்ல, ராகேஷ்வர் தனதருகில் மனைவியை அமர சொல்ல, அவரும் அமர்ந்தார்…

இரண்டு பேரும் அமர்ந்து அங்கே டீவி பார்த்துக்கொண்டிருக்க, இங்கே ரித்தியோ அவர்கள் இருவரையுமே பார்த்தாள்…

இரண்டு மாதங்களாக வராமல் இருந்த்தின் விளைவு என்றெண்ணிய வேளையே, தாய் தகப்பனின் அன்பான அக்கறையான செல்லமான கோபம் அவளுக்கு புரிந்த்து… மேலும் அவள் வந்த காரணமும் மனதில் தோன்ற,

“தாத்தா… நீங்க வாங்க நாம வெளியே போகலாம்….” என்றாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.