"வாட்?"
"ம்...ஆசை வார்த்தைகளை பேசி,அவளையும் அவன் போதை பழக்கத்துக்கு அடிமையாக்குனான்.எனக்கு இதெல்லாம் பிடிக்கலை!நான் ரூம் சேஞ்ச் பண்ண வார்டன்கிட்ட லெட்டர் எழுதி கொடுத்தேன்!அவங்க ஒரு மாதம் அட்ஜஸ்ட் பண்ணி இருக்க சொன்னாங்க!"
"அப்போ உங்க வார்ட்டனுக்கு இந்த டிரக் விஷயம் தெரிந்திருக்கு?"
"இல்லை தெரியாது!அவளோட லவ் விஷயம் மட்டும் தான் தெரியும்!வேற எதையும் நான் சொல்லலை!"
"ம்..."
"அதுக்கு அப்பறம்,அவங்க அட்டூழியம் இன்னும் அதிகமாச்சு!ராத்திரி நேரத்துல சம்பந்தமே இல்லாம அவ வெளியே எழுந்து போவாள்!ஒரு நாள் என்னன்னு பார்க்க நானும் போனேன்!அப்போ அந்தப் பையன் அவக்கிட்ட தப்பா..."
"நான் உடனே வார்டனிடம் போய் விஷயத்தை சொன்னேன்!அதுக்கப்பறம்,அவ ஃபேரண்ட்ஸை எல்லாம் வரவழைத்து பெரிய பிரச்சனை ஆச்சு!"
"ம்..."
"அதுக்கப்பறம் நான் ஊருக்கு போயிட்டேன்!"
"ஓ.கே!வேற எதுவும் உங்களுக்கு தெரியாதா?"-அவர் நீண்ட நேரமாய் தயங்கினார்.
"இருக்கு!"-என்று தனது பர்ஸில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினார்.
"இது அவ எனக்கு எழுதின லெட்டர்!இதைப் படித்துட்டு தான் இங்கே ஓடி வந்தேன்!அந்தப்பாவி மீனாவோட வாழ்க்கையையே நாசம் பண்ணிருக்கான் சார்!அதோட பலனாக அவ ஃபிரக்ணட் ஆகிருக்கா!அவமானம் தாங்க முடியாம...."-கண்கள் கலங்கின அவருக்கு!
"ஓ.கே!ரிலாக்ஸ்!"
"ஒரு பர்ஸ்னல் ரிக்வஸ்ட் சார்!"
"என்ன?"
"மீனா டிரக் யூஸ் பண்ணது!அவளோட வாழ்க்கையில நடந்த கொடூரம் இது எதுவும் வெளியே தெரிய வேண்டாம் ப்ளீஸ்!"-மகேந்திரனிடமிருந்து மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.
"நிச்சயமா தெரியாது!"
"தேங்க்ஸ்!"
"நீங்க போகலாம்!"
"ம்..."-அவர் எழுந்து இரண்டடி முன் வைத்தார்.
"காயத்ரி!"
"ம்??"
"இது சம்பந்தமா வேற யாராவது வந்து விசாரணை நடத்தினா!என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டதா சொல்லிடுங்க!"
"ம்!"-மகேந்திரனிடமிருந்து மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.
நாட்கள் நகர்ந்தன...
அன்று காயத்ரி நாளிதழை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தப் போது,
"மாணவி மீனாட்சியின் தற்கொலைக்கான குற்றவாளி சிக்கினார்!"என்ற தலைப்பு இருந்தது.உடனடியாக விழிகளை அதன் மேல் ஓடவிட்டார் காயத்ரி.
"கமிஷ்னர் மகேந்திரனின் நேரடி விசாரணையில் இருந்த மாணவி மீனாட்சியின் வழக்கில் குற்றவாளி சிக்கினார்.அதீத மன உளைச்சல் கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக மாணவியின் கடிதம் சிக்கியது!இதுக்குறித்து மகேந்திர குமார் அவர்கள் கூறியதாவது, 'குற்றம் நடந்ததுக்கு முக்கியக்காரணம்,மீனாட்சியை காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்திருக்கான் இந்தக் குற்றவாளி.அதனால ஏற்பட்ட மன உளைச்லால் அவங்க வேற வழியில்லாமல் தற்கொலை பண்ணிருக்காங்க!இனி குற்றவாளிக்கு தக்க தண்டனை நிச்சயம் கிடைக்கும்'என்றார்!"-இதைப் படித்த காயத்ரியின் முகத்தில் நிம்மதி!!அங்கு வெளியிடப்பட்டிருந்த கடிதத்தில் மொத்தமாக செய்திகள் மாற்றம் கண்டிருந்தன.
"காயு!"-அவளது செவிகளில் வந்து ரீங்கரமிட்டாள் அவளது தோழி சௌமியா.
"ஏ..ச்சீ!பயந்துட்டேன்!"
"என்னடி?பேப்பரையே பார்த்து பார்த்து சிரிக்கிற?"
"ஒண்ணுமில்லையே!"
"ம்..நம்ப முடியலையே!"-என்று நாளிதழை வாங்கி பார்த்தாள் அவள்.
"அது..வந்து..மீனா கேஸ்ல குற்றவாளியை அரஸ்ட் பண்ணிட்டாங்க!அதான்!"
"எனக்கென்னமோ!நீ மகேந்திரன் சாரோட போட்டோவை பார்த்து தான் சிரித்தியோன்னு ஒரு சந்தேகம்!பார்த்து நீ அக்ரஹாரத்துல வளர்ந்த பொண்ணு!அவர் அப்படி இல்லை சொல்லிட்டேன்!"
"நீ நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்லை!போ!"
"பார்க்க தானே போறேன்!"
"சரி!நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்!"
"ம்...போயிட்டு வா!"-ஆராதனைப் பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் காயத்ரி.