(Reading time: 10 - 19 minutes)

சனின் அந்த ஆலயத்தில் நெரிசல் அவ்வளவாக இல்லை.ஆங்காங்கே ஓரிரு தலைகள் தென்பட்டன அவ்வளவு தான்!!மனம் முழுதும் பக்தியால் நிரப்பிக் கொண்டு ஆலயத்துள் பிரவேசித்தார் காயத்ரி.

இறை வழிப்பாட்டில் அவரது மனம் எப்போதும் தன்னை மறந்துவிடும் இயல்புடையது!!ஆலயம் போகாமல் தப்பிக்க சாக்கு தேடுபவர்களை விலக்கி,ஆலயம் செல்லவே சாக்கு தேடுபவர்களுள் ஒருவரே காயத்ரி!!இறைவனின் சந்நிதியில் மனம் வெற்றுத்தாளாய் போய்விடும் அவருக்கு!!

இறை வழிபாடு முடித்து பிரகாரத்தை வலம் வந்தவரின் விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன.விழிகளின் ஆச்சரியம் காரமணமின்றி இதயத்துடிப்பை எகிற வைத்து விளையாடியது!!

பிரகாரத்தை வலம் வரும் வழியில் உள்ள தேவி துர்கையின் சந்நிதியில் இருக்கரம் குவித்து விழி மூடியிருந்தார் மகேந்திரக்குமார்.காயத்ரியின் கால்கள் அடுத்த அடி எடுத்து வைக்க தயக்கம் கொண்டது!!

"எனை நினைவில் வைத்திருப்பாரா?"-வினவியது அவர் மனம்.தேவியை வணங்கி திரும்பியவரின் விழிகளும் சிலையாகி நின்றன.எவருக்கும் ஆட்படாத கம்பீரம் அச்சமயம் ஏனோ தடுமாறவே செய்தது.

மெல்ல தயங்கியப்படி முன்னேறினார் காயத்ரி.

அடுத்த அடி எடுத்து வைக்க இயலாமல் திணறினார் மகேந்திரன்.

அவரருகே வந்தவர்,சில நொடிகள் மௌனம் சாதித்தார்.பின்,மெல்லிய குரலில்,

"தேங்க்ஸ்!"என்றார்.

"எதுக்கு?"

"என் பேச்சை மதித்து உண்மையை சொல்லாம இருந்ததுக்கு!"

"பரவாயில்லைங்க..அது என் கடமை!"

-தலைக்குனிந்த வண்ணம் புன்னகை பூத்தார் காயத்ரி.

"நீங்க போங்க!"-என்று அவருக்கு வழியமைத்தார் மகேந்திரன்.

"ம்..."-விசாரணையில் ஏற்பட்ட சந்திப்பு விதிவசத்தினால் இரு வாழ்க்கையையும் பிணைத்து முடித்தது.

ன்றொரு நாள்!!!

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக விடுதிக்கு இரவு தனித்து செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது காயத்ரிக்கு!!யாரையும் உலுக்கிப் பார்க்கும் அமைதியான இருள்!மென்மை மனம் படைத்த காயத்ரியை விடுமா??மிகுந்த அச்சத்தில் தள்ளப்பட்டாள் அக்கன்னிகை!!

"ஏ..அவதான்டா!கதிரை மாட்டிவிட்டவள்!"-சற்று தூரத்தில் சூழ்ந்திருந்த இளைஞர்களின் பட்டாளம் அவளை அடையாளம் கண்டது.

"பிடிங்கடா!"-என்று அவரை துரத்த,அச்சத்தில் ஓடினார் காயத்ரி.

"பிடித்து கொல்லுங்கடா!"-உதவிக்கு ஒருவருமில்லாத அமானுஷ்யமான தனிமையில் உயிரை பறிக்க வரும் கயவர்களுக்கு அஞ்சி ஓடிக்கொண்டிருந்தார் காயத்ரி.அச்சத்தில் கண்மண் தெரியாமல் ஓடியவர்,யார் மீதோ மோதி தடுக்கப்பட்டார்.

"ஐ கால் யூ பேக்!"-இணைப்பைத் துண்டித்துவிட்டு குழப்பமாக அவரை ஏறிட்டார் மகேந்திரன்.

"காயத்ரி!என்னாச்சு?ஏன் இப்படி ஓடி வர?"

"அ..அங்கே!அங்கே.."

"என்ன?யாரு?"-அவர் பதில் கூறுவதற்குள் அங்கு வந்து சேர்ந்தனர் அக்கும்பல்.காயத்ரி பயந்துப்போய் மகேந்திரனின் மார்போடு ஒட்டினார்.

"அவங்க..."

"யார்டா நீங்க?"

"நீ?யாரு?"-என்று கூவினான் ஒருவன்.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்தவர்,காயத்ரியின் கரம் பற்றி,தன் பின்னால் ஔித்தார்.

"யாருன்னு தெரியணுமா?"

"டேய் மச்சான்!போயிடலாம்டா!கமிஷ்னர்டா!"-வந்திருந்தவர்களில் எஞ்சிய நால்வரும் திடுக்கிட்டனர்.

மகேந்திரன் ஓரடி முன்வைக்க,அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

"கான்ஸ்டேபில்ஸ்!பிடிங்க அவங்களை!"-அவர் உத்தரவிட,நான்கு காவலாளிகள் அவர்களை துரத்தனர்.

அப்போது தான் காயத்ரியின் நெருக்கத்தை உணர்ந்தவர்,பதற்றத்தோடு திரும்பினார்.ஏனோ அவரது விழிகள் சிந்திய கண்ணீரை சகிக்க இயலவில்லை அவரால்!!

"காயத்ரி!என்னாச்சு?யார் அவங்க?"-அவர் விவரங்களை கூறி அழுதார்.

"சரி..சரி..ஒண்ணுமில்லை!நான் இருக்கேன்ல!அழக்கூடாது!"-மனம் ஆறுதலாக அணைத்து ஆறுதல் கூற துடித்தாலும்,எதன் காரணமாகவோ ஒரு இடைவெளி அங்கு குடிக் கொண்டிருந்தது.

"வா!நான் உன்னை டிராப் பண்றேன்!"

"இல்லை பரவாயில்லை!உங்களுக்கு ஏன் சிரமம்?"

"அதெல்லாம் ஒரு சிரமமும் இல்லை!நீ வா!"-தனது காரின் கதவை திறந்தார் அவர்.

காயத்ரி தயக்கம் ஏதுமின்றி ஏறிக்கொள்ள,சுகமான,அமைதியான பயணம் தொடங்கியது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.