(Reading time: 20 - 40 minutes)

ங்களுக்கு விருப்பம் இல்லன ஏதும் சொல்ல தேவையில்ல, கோபி அவங்க சொன்ன இடத்தில பத்திரமா அவங்களை இறக்கி விட்டுடு” – ரிஷி

அங்கிருந்து எப்படியாவது தப்பித்தால் போதுமென நினைத்திருந்தவள், ஏதும் வாய்த்திறக்க விரும்பாது அமைதிகாத்தாள். ஆனால் ரிஷியின் ஆண்மையும் கம்பீரமும் நிறைந்த அந்தக் குரல்லுக்கும் , சற்று முன் அவளைக் காத்த அவனது பண்புக்கும் அவளால் பேசாது இருக்கமுடியவில்லை.

“என் பேரு செல்வி.. தமிழ் செல்வி, பக்கத்தில இருக்கிற ஒரு ஹாஸ்பிட்டல தான் நர்ஸ் ஆ இருக்கேன், இன்னிக்கு ஒரு எமர்ஜென்சினு இந்த குப்பம் பக்கம் இருக்கிற ஒரு வீட்டுக்கு வந்தேன், இப்ப பிரச்சன பன்னினவங்க ஏற்கனவே ஹாஸ்பிட்டல்ல ஒரு பொண்ணுக்கிட்ட தப்பா நடந்தாங்க அதுக்காக நான் அவங்கள அதிட்டினேன், அதனாலேயே என்ன இங்க வர வச்சு, இப்படி தப்பா.. நடக்க முயற்சி செஞ்சாங்க..” இதை சொல்லும்பொது செல்வியின் குரல் உடைந்து அழுகை வந்தது. அதற்கு மேல் அவள் பேசாது மௌனம் காத்தாள்.

“விடுங்க, அழாதீங்க, இனிமேல் பாதுகாப்பில்லாம இந்த மாதிரி இடத்துக்கு வராதீங்க..” – ரிஷி அதற்கு மேல் எதுவும் பேசாது தன் இருக்கையில் சாய்ந்து கொண்டான், வெளியே மென்மையாக தூரிக்கொண்டிருந்த வானம், அன்றைய நிலவை மறைத்தது, சாரலின் இனிமை மெதுவாக காவ்யாவை நினைவு படுத்துயது, “என்ன திமிருடீ உனக்கு! சீரோவா நான்.. பார்த்துக்கிறேன், என்ன விட்டு எங்க போயிடப்போற” அவனது உள்ளம் அவள் திமிரையும் அழகையும் விரும்பியது, இயற்கை இளமையின் எண்ணப்போக்கை தூண்ட அவன் கண்கள் மூடிக்கொண்டான். கோபி செல்வியை இறக்கிவிடும் போது ரிஷி கண்கள் மூடி உறங்கிக்கொண்டிருந்தான். அவள் கரம் குவித்து கோபிக்கு தன் நன்றியைத் தெரிவித்து விட்டு திரும்புகையில் ஒரு மின்னல் கீற்று விழுந்தது, அது ரிஷியின் முகத்தை அவளுக்கு காட்டியது. முழு நிலவின் பிரகாசத்தை மிஞ்சிவிடும் அவனது அழகும், அன்றைய தினம் அவன் செய்த பேருதுதவியும் செல்வியின் மனதில் ரிஷியை ஆழ விதைத்துவிட்டது.

ரவு பணிமுடித்து அவள் வீட்டுக்குள் செல்லும்போது, வழக்கமான பத்தியின் மனமும், நெய்தீபத்தின் ஒளியும் வீட்டை நிறைத்திருந்தது. கூடவே அவள் அம்மா வனிதாவின் தையற் இயந்திரத்தின் ஒலியும் கேட்டது. அவள் விரைந்து குழித்து, தலையில் சுற்றிய தூவாலையுடன் துளசியை சுற்றி வணங்கினாள். வீட்டிற்குள் வந்து, அந்த சிறிய பூசை அறையில் அமர்ந்தாள்.  மனம் சஞ்சலப் பட்டிருந்தது. எதிரே அழகே வடிவாய் அமைந்திருந்த சிறிய துர்கா சிலையை வணங்கினாள். கண்ணம் விட்டு கண்ணீர் கரைந்து ஓடியது. நேற்றைய நிகழ்வு அவள் நெஞ்சத்தை நடுங்க செய்தது. ஆனால் அவளை உடைக்கவில்லை, சிறு வயதிலிருந்து போராட்டம் நிறைந்த  அவள் வாழ்கை அவளுக்கு எண்ணிலடங்க மன தைரியத்தையும், போராடும் குணத்தையும் அவளுக்குள் விதைத்திருந்தது. ஆகையால் அவள் மனமானது அந்த நிகழ்விலலிருந்து மீண்டதை நினைத்து ஒருவாரு நிம்மதி அடைந்தது.  ஆனால் இனம் புரியா இன்னுமொரு வேதனை மனதைத் திண்றது. அது ரிஷியைப்பற்றியது. அவனது களையான முகமும், கம்பீரமும் மனதை ஏதோ செய்தது. அவளை அவளே கட்டுப்படுத்த நினைத்து தோற்கும் போது ஏற்படும் வலி கண்களில் கண்ணீராக வழிந்தது.

“ச்சீ, என்ன மாதிரி  பெண் நான், வாழ்கையில ஓரே ஒரு முறை பார்த்த ஒருத்தன, இனிமேல் வாழ்கையில மறுபடி பார்க்க முடியாத ஒருத்தன சுத்தி ஏன் மனம் சுத்துது..

பார்க்க முடியாது? முடியும் தான், ஆனால் நெருங்க முடியாதா தூரத்தில இருக்கிற ஒருத்தன மனசு விரும்பிறது, எவ்வளவு பெரிய தப்பு, அது நமக்கு நாமே வச்சிக்கிற தீ.. மனச காயப்படுத்தி, அதே நேரம் கனிய வைக்கிற உணர்வு, இத உதறனும், இந்த சிந்தனைக்கு இடம் கொடுத்தா அது என்னை அழிச்சுடும்!”  செல்வி தன் மனதை கட்டுப்படுத்த நினைத்தாள். ஆனால் அவள் தனக்கிட்ட தாழ்களை உடைத்து ரிஷியின் முகம் அவளை வதைத்தது.

இதுவரை யாரையும், விரும்பி அவள் கண்கள் பார்த்தில்லை, பள்ளி, கல்லூரி பருவம் கடந்து பணி, என வாழ்கையை நிலைப்படுத்திகொள்ளும் தருணம் வரையில் அவள் மனம் சலனமடையவில்லை. இன்று இதுவரை காத்த நல்லொழுக்கம் சிதறியது. இதற்கு யாரையும் காரணம் காட்ட இயலாது.  குடும்பத்தின் சூழ்நிலை அவளை வருத்தி இந்த இரவு பணியை ஏற்றுகொள்ள செய்தது. அவள் கட்டிக்காத்த ஒழுக்கமும் பண்புகளுமே இன்று சோதனைக் குள்ளாகியது.  யாருக்கோ உதவ அவள் செய்த காரியம் அவளுக்கே வினையாய் முடிந்தது, ஆனால் அந்த பேராபத்தை தடுத்து நிறுத்தியது ரிஷியின் கரம். முதன்முறையாக தன் அண்ணனின் கரத்தை அடுத்து இன்னொரு கரம் அவளைக் காத்தது. அந்த தீண்டல் இதுவரை சப்தமின்றி பாய்ந்துகொண்டிருந்த எல்லா சந்தங்களையும் அவளுள் எழச் செய்தது எனில் அது மிகையாகாது. உண்மையில் அந்த தொடுதல், அவன் காத்த அவள் மானமும் மனதை மலர செய்துவிட்டது. இதுவரை கதைகளிலும், காவியங்களிலும் கேட்டுப் பார்த்தறிந்த “காதல்” என்னும் இயற்கை அவளை கலைத்துவிட்டது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை, கிட்டத்தட்ட செல்வியின் திருமணம் நிச்சயமாகும் தருணம், இந்த நேரத்தில் மனம் கலையாதிருந்திருக்கலாம்.  ஆனால் காதல் யாரையும் விடுவதில்லை. அதுவே இயற்கையின் நியதியும் கூட..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.